Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

கடகம் மார்ச் மாத ராசி பலன் 2020 | March Month Rasi Palan 2020 Kadagam

February 17, 2020 | Total Views : 1,204
Zoom In Zoom Out Print

கடக ராசி பொதுப்பலன்கள் :

கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் புத்திசாலித்தானமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வெற்றி உங்களுக்கு எளிதில் கிட்டும். பல்வேறு பணிகள் ஒரே நேரத்தில் வந்து குவியும். எனவே இந்த மாதம் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டியிருக்கும். ஒவ்வொரு பணியிலும் நீங்கள் கவனமுடன் செய்லாற்ற வேண்டும். கூடுதல் வேலைகள் உங்களுக்கு பாரமாக தெரியும். இந்த மாதம் பொருளாதாரம் பொறுத்த வரை சீராக இருக்க வாய்ப்பில்லை. ஏற்றத் தாழ்வுகள் காணப்படும். என்றாலும் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள் இந்த மாதம் சிறந்த அறிவாற்றலுடன் செயல்படுவீர்கள். நீங்கள் பணியிலேயே ஆழ்ந்து இருக்கும் காரணத்தால் குடும்பத்திற்கென்று குடும்ப உறுப்பினர்களுக்கென்று உங்களால் நேரம் ஒதுக்க இயலாது. இதனால் குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

கடக ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :

கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக அனுபவித்து மகிழும் காலம் ஆகும். திருமணமான தம்பதிகள் உறவில் அனுசரித்து நடந்து கொள்வார்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். நீங்கள் தகவல் தொடர்பில் சிறந்து விளங்குவீர்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

கடக ராசி நிதி :

கடக ராசி அன்பர்களைப் பொறுத்தவரை இந்த மாதம் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் கையில் இருக்கும் பணத்தை சேமிப்பது குறித்து நீங்கள் சிறந்த முறையில் திட்டம் இட வேண்டும். நீண்டகால சேமிப்பு பற்றி யோசித்து, திட்டமிட்டு சேமிக்கத் தொடங்குவது நல்லது. நீங்கள் இப்பொழுது செய்யும் முதலீடுகள் உங்களுக்கு சிறந்த லாபங்களை பெற்றுத் தரும். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் நீங்கள் கை மாற்றாக கொடுத்த பணம் இப்போது உங்கள் கைக்கு மீண்டும் வந்து சேரும்.

கடக ராசி வேலை :

வேலை செய்யும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதத்தில், வேலையில் சாதாரண பலன்களே சந்திப்பார்கள். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல இப்பொழு கிடைக்கும் சந்தர்ப்ப சூழ் நிலைகளை, வாய்ப்புகளை நீங்கள் முறையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அலுவலகத்தில் உங்கள் கீழே பணிபுரிபவர்களிடம் நீங்கள் நட்புடன், நல்லுறவுடன் பழக வேண்டும். உங்களால் இயன்ற வரை உங்களுக்கு அளிக்கப்படும் பணிகளை நிலுவையில் வைக்காமல் அவ்வப்பொழுது முடிக்க வேண்டும்.

கடக ராசி தொழில் :

தொழில் செய்யும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் மிதமான முன்னேற்ற நிலையே காண்பார்கள். நிலம் விற்றல் வாங்கல் சம்பந்தமான தொழில்களில் இருப்பவர்கள் அதிகமான வருமானத்தை பெறலாம். தொழில் ரீதியான போட்டி காரணமாக நீங்கள் கஷ்டங்களையும் சந்திக்க நேரலாம். தொழிலில் உங்கள் திறமையால் பிறர் உங்களது முக்கியத்துவத்தை உணர்வார்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

கடக ராசி தொழில் வல்லுநர் :

கடக ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சாதாரண பலன்களே காண்பார்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண சிறிது தடங்கல்கள் மற்றும் தாமதங்கள் காணப்படும். என்றாலும் நீங்கள் மனம் தளரந்து விடாதீர்கள். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதற்கேற்ப உங்கள் முயற்சி கண்டிப்பாக ஒரு நாளில் வெற்றி அடையும். எனவே நீங்கள் சமய ஸந்தர்பம் அனுசரித்து நீங்கள் அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுங்கள்.

கடக ராசி ஆரோக்கியம் :

கடக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சுமாரான காலமாகவே காணப்படும். மன அழுத்தம் ஏற்படும் வகையில் பிரச்சினையின்றி வாழ்க்கை செல்லும் என்றாலும் நீங்கள் உங்கள் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் சிறந்த ஓய்வும் போதுமான தூக்கமும் மேற்கொள்ள வேண்டும்.

கடக ராசி மாணவர்கள் :

கடக ராசி மாணவ மாணவிகளுக்கு இந்த மாதம் ஒரு சாதாரண மாதம் என்றே தான் கூற வேண்டும். என்றாலும் இந்த மாதம் மாணவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களிடமிருந்து தன்னம்பிக்கையை கற்றுக்கொள்வது மிகப் பெரிய வெற்றியை பெயற்றுத் தரும். கலாச்சார விழாக்களில் பங்கு பெறுவதன் மூலம் உங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்வீர்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

சுப நாட்கள் : 2,3,15,16,24,25,26,29

அசுப நாட்கள் : 4,5,6,17,18,22,23

கடக ராசி பரிகாரம்:

திருமலை வெங்கடாஜலபதி மற்றும் திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

சந்திரன், சனி, குரு பகவானுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.

மீன்களுக்கு, பறவைகளுக்கு உணவு அளித்தல்.

banner

Leave a Reply

Submit Comment