மகர ராசி பொதுப்பலன்கள் :
மகர ராசி அன்பர்களே ! விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளும் காலக் கட்டமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும். எனவே தொடர்ந்து முயலுங்கள். உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். இந்த மாதம் பிறருடனான உங்கள் உறவு முறை சிறப்பாக இருக்கும். குறிப்பாக உங்கள் தாயுடன் இத்தனை நாட்கள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுமூகமான உறவு முறை அமையும். உறவினர்கள் மூலம் நல்ல ஆதாயம் பெறுவீர்கள். என்றாலும் உங்கள் இளைய சகோதரரிடம் சிறிது கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அவர் மூலம் உங்களுக்கு வாழ்வில் சில பிரச்சினைகள் அல்லது நஷ்டங்கள் ஏற்படலாம். உங்களில் சிலருக்கு இந்த மாதம் வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். மனதில் ஏதோ இனம் புரியாத கவலை உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். வேகத்தை விட விவேகமும், பொறுமையும் அவசியம். இந்த மாதம் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். உணவே மருந்து என்று கூறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத காரணத்தால் நீங்கள் சோர்வு அடையலாம். நேராநேரம் உணவு உட்கொள்வதன் மூலமும் சரியான உணவு வகைகளை உண்பதன் மூலமும், முறையான ஓய்வும், சரியான தூக்கமும் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உங்களுக்கு உதவி புரியும்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
மகர ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :
மகர ராசி காதலர்களுக்கு இந்த மாதம் சுமாரான பலன்களே கிட்டும். உறவை தக்க வைக்க நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். திருமணமான தம்பதியர் இந்த மாதம் உறவில் இனிமை சூழக் காண்பார்கள். இனிய இல்லற வாழ்க்கை மனதிற்கு இன்பமும் புத்துணர்ச்சியும் அளிக்கும். என்ற போதிலும் நீங்கள் சில நேரங்களில் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய சூழலும் இருக்கும். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்களுக்கு தக்க துணை அமைய இன்னும் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
மகர ராசி நிதி :
பொருளாதார நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் மகர ராசி அன்பர்களுக்கு சிறப்பான மாதம் என்று கூற இயலாது. நிதி சம்பந்தமான எந்த விஷயமாக இருந்தாலும் நீங்கள் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செயல்பட வேண்டியிருக்கும். உங்கள் அன்றாட தேவைகளில் வீண் செலவுகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் தேவைக்காக சேமிப்பிலிருந்து பணத்தை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும். அதன் மூலம் உங்கள் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
மகர ராசி வேலை :
பணி செய்யும் மகர ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் பணியில் திருப்தி காண இயலும். உங்கள் திறமை கண்டு உங்களுக்கு பொறுப்புகள் அளிக்கப்படலாம். நீங்களும் உங்கள் பொறுப்புகளை உணர்ந்து சரியான முறையில் உங்கள் கடமைகளை நிறைவேற்றுவீர்கள். அதன் மூலம் பாராட்டும் பெறுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இது ஒன்று போதாதா?
மகர ராசி தொழில் :
சொந்த தொழில் புரியும் மகர ராசி அன்பர்கள் தங்கள் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவார்கள். தொழில் நிமித்தமாக வெளியூர் செல்வீர்கள். அதுவும் தொலை தூரப் பயணம் மேற்கொள்வீர்கள். இந்தப் பயணம் உங்களுக்கு லாபகரமான பயணமாக அமையும். உங்கள் தொழில் மூலம் வருமானம் பெருகும். உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களுக்கு நல்ல ஆதரவு அளிப்பார்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
மகர ராசி தொழில் வல்லுநர் :
மகர ராசியைச் சேர்ந்த தொழில் வல்லுனர்கள், இந்த மாதம் சிறிது கவனமுடன் செயல்பட வேண்டும். பதறிய காரியம் சிதறிப் போகும். எனவே கவனமாக பதறாமல் வேலையில் ஈடுபாடு காட்ட வேண்டும். மலை போல பணிகள் குவியும். நீங்கள் கவனம் சிதறாமலும் கூடுதல் நேரம் ஒதுக்கியும் உங்கள் பணிகளை முடிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். அலட்சிய போக்கு அவஸ்தையை அளிக்கும் என்பதால் அதனை தவிர்க்கவும்.
மகர ராசி ஆரோக்கியம் :
மகர ராசி அன்பர்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். என்றாலும் அதிக பணிகள் காரணமாக நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதற்கு இடம் அளிக்காமல் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பணிகள் பல இருந்தாலும் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள முயலுங்கள். அதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை உங்களால் பாதுகாத்துக் கொள்ள இயலும்.
மகர ராசி மாணவர்கள் :
மகர ராசி கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் இந்த மாதம் சிறிது கடின முயற்சி மேற்கொள்ள வேண்டும். உங்கள் புத்திசாலித்தனம் மூலம் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். கல்வியில் உயர் நிலை காண்பீர்கள். தேவையற்ற எண்ணங்கள் உங்களுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும். எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
சுப தினங்கள் : 2,3,11,12,15,16,29,30,31
அசுப தினங்கள் : 4,5,6,9,10,17,18
மகர ராசி பரிகாரம்:
ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு மற்றும் ஸ்ரீ விநாயக பெருமான் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
சனி, குருவுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
மாற்று திறனாளிகள் மற்றும் ஏழை, எளியோருக்கு உதவுதல், அன்னதானம் செய்தல்.

Leave a Reply