Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிகம் மார்ச் மாத ராசி பலன் 2023 | March Matha Viruchigam Rasi Palan 2023

February 24, 2023 | Total Views : 319
Zoom In Zoom Out Print

விருச்சிகம்  மார்ச்  மாத பொதுப்பலன்கள் 2023

விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் தொழில், உத்தியோகம் மற்றும் ஆரோக்கியத்தில் சில கடினமான தருணங்களை சந்திக்க நேரலாம். உங்கள் வாழ்க்கைத் துணை, குடும்பம், ஆரோக்கியம்  என இவற்றில் தான் உங்கள் கவனம் முழுவதும் இருக்கும். உங்கள் குழந்தைகளால் நீங்கள் இந்த மாதம் பெருமைப்படுவீர்கள். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் எழலாம். தத்துவ ரீதியிலான சிந்தனை மூலம் நீங்கள் சாதகமான பலனைப் பெற இயலும்

உத்தயோகம்:

இந்த மாதம் உங்கள் உத்தியோகத்தில் ஒரு சிறந்த சாதகமான மாற்றம் ஏற்படலாம். என்றாலும் இடையில் நீங்கள் சில போராட்டங்களை சந்திக்க நேரலாம். பணியிடத்தில் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் மோதல்கள் இருக்கலாம். பணியிடத்தில் உணர்ச்சி வசப்படாதீர்கள். மாதத்தின் பிற பகுதியில் நிலைமை சீரடையும். நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் உங்கள் செயல்திறனுக்கு உரிய பாராட்டையும் பெறலாம்.

காதல் / குடும்ப உறவு :

இந்த மாதம் காதலுக்கு ஏற்ற மாதம். மகிழ்ச்சி, கவனிப்பு, கேளிக்கை, அன்பு மற்றும் அக்கறை நிறைந்த தருணங்கள் இருக்கலாம். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் சில தேவையற்ற வாக்கு வாதங்கள் காரணமாக சில சச்சரவுகள் இருக்கலாம். அனுசரித்தும் விட்டுக் கொடுத்தும் நடந்து கொள்வதன் மூலம் நல்லுறவை தக்க வைத்துக் கொள்ள இயலும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் உங்கள் வருமானம் பெருகும்.  நிதிநிலை படிப்படியாக உயரும். உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் வருமானம் பெறுவீர்கள். முதலீடுகள் மற்றும் பங்குச் சந்தை  மூலம் ஆதாயங்கள் இருந்தாலும் ஆபத்தில்லாத திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.  மாதத்தின் இரண்டாம் பாதியில் எதிர்பாராத செலவினங்கள் ஏற்பட்டு உங்கள் சேமிப்பு கரையலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : புதன் பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். மாதத்தின் முற்பகுதியில் நீங்கள் பதட்டம் மற்றும் கோபம் கொள்ள நேரலாம். அதனைத் தவிர்க்க வேண்டும். உங்கள் இரத்த அழுத்த அளவில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது சிறு விபத்து அல்லது மாடி ஏறும் போது சிறு விபத்து எப்ரட்லாம். கவனம் தேவை.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை

தொழில் :

தொழில் இந்த மாதம் மந்தமாக இருக்கலாம். தொழிலில் நிலைத்தன்மை காணப் போராட வேண்டியிருக்கும். கூட்டுத் தொழில் ஆரம்பத்தில் சிறப்பாக நடந்தாலும் பிறகு சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். மாத மத்தியில் தொழில் ஒப்பந்தங்களை திருத்தி எழுத வேண்டி வரலாம்.ஆட்டோ மொபைல் மற்றும் டிசைனிங் துறையில் இருப்பவர்கள் இந்த மாதம் முன்னேற்றத்தைக் காண்பார்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். உள்கட்டமைப்பு அடிப்படையில் வணிக அமைப்பில் மாற்றம் இருக்கலாம்.

தொழிலில் மேன்மை பெற :  சூரியன் பூஜை

தொழில் வல்லுனர்கள் :

விருச்சிக ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். கடந்த காலங்களில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் இந்த மாதம் நற்பலன்களை அளிக்கும். என்றாலும் தொழில் செய்யும் இடத்தில் அதிக பணிகள் காணப்படும். நிர்வாகத்த்தில் சில மாற்றங்கள் இருக்கும். சாதுரியமாகச் செயல் பட வேண்டும்.

தொழிலில் சிறந்து விளங்க : பிருகஸ்பதி பூஜை

மாணவர்கள் :

மாணவர்கள் இந்த மாதம் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஒரு சில பின்னடைவுகளை சந்தித்தாலும் இந்த மாதம் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். கிரக நிலைகள் அவர்களுக்கு சாதகமாக உள்ளது.  எனவே அவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். ஞாபக சக்தியை மேம்படுத்த சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட வேண்டும்.

கல்வியில் சிறந்து விளங்க : அங்காரகன் பூஜை

banner

Leave a Reply

Submit Comment