கடகம் மார்ச் மாத பொதுப்பலன்கள் 2023
பொதுப்பலன் :
கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் உங்கள் அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மேலும் புனித தல யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கூடி வரும். மேலும் இறை அருள் உங்கள் பக்கம் இருக்கும்.. உறவு மற்றும் உறவினர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். குடும்பத்தில் சில தேவையற்ற வாக்கு வாதங்கள் இருக்கலாம்.
உத்தியோகம் :
மாதத்தின் முதற் பகுதியில் உத்தியோகம் மூலம் சிறந்த ஆதாயங்களைக் காண்பீர்கள். இரண்டாம் பகுதியில் நீங்கள் சில பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். பணியிடத்தில் குறிப்பாக மாத முற்பகுதியில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். இந்த மாதம் உத்தியோகம் மூலம் வருமானம் சிறப்பாக இருக்கும். இந்த மாத இறுதியில் உங்கள் மேலதிகாரிகள் மூலம் நீங்கள் சிறந்த பலன்களைக் காண்பீர்கள்.
காதல் / குடும்ப உறவு :
இந்த மாதம் காதல் உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் காதல் துணை உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கலாம். திருமணமான தம்பதிகளுக்கு இடையில் சில சூடான வாக்கு வாதங்கள் ஏற்படலாம். குடும்ப வாழ்வை கையாள்வதில் சில கடினமான தருணங்களை நீங்கள் மாத முதற்பகுதியில் கடக்க நேரலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை
நிதிநிலை :
இந்த மாதம் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். மாத முதல் பகுதியில் நீங்கள் சில எதிர்பாராத ஆதாயங்களைப் பெறலாம். அதே சமயத்தில் மாத பிற்பகுதியில் சில எதிர்பாராத மருத்துவ செலவுகளை நீங்கள் மேற்கொள்ள நேரலாம். பணத்தை சேமிக்க திட்டமிட வேண்டியது அவசியம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை
ஆரோக்கியம் :
இந்த மாதம் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். தூக்கமின்மையால் நீங்கள் அவதியுற நேரலாம். தொண்டை வலிக்கு ஆளாக நேரலாம். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் தந்தையின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சந்திரன் பூஜை
தொழில் :
இந்த மாதம் உங்கள் தொழில் மூலம் சுமாரான பலன்கள் கிட்டும். மாத பிற்பகுதியில் தொழிலுக்கான நிதியை நிர்வகிப்பதில் சில சிக்ககல்களை சந்திப்பீர்கள். விற்பனை அளவும் குறையலாம். வீடு விற்கும் வாங்கும் (ரியல் எஸ்டேட்) தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறப்பாக செயல்படுவார்கள். நல்ல வருமானம் கிட்டும்.
உங்கள் தொழிலில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை
தொழில் வல்லுனர்கள் :
கடக ராசி தொழில் வல்லுனர்களுக்கு இது சிறந்த காலமாக இருக்கும். தொழில் புரியும் இடத்தில் இந்த மாத இரண்டாம் பகுதியில் நீங்கள் அங்கீகாரம் பெறுவீர்கள். வாடிக்கையாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வழிகாட்டிகள் மூலம் நீங்கள் ஆதாயங்களைப் பெறுவீர்கள். தொழிலில் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள்.
உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண : பிருகஸ்பதி பூஜை
மாணவர்கள் :
மாணவர்கள் இந்த மாதம் முழுவதும் சிறப்பாகச் செயல்படுவார்கள். தங்கள் தேர்வுகளை சிறந்த முறையில் எழுதுவார்கள். என்றாலும் தங்கள் ஆரோக்கியத்தில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஞாபக சக்தி குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. கூரிய நினைவுத் திறன் பெற ஹயக்ரீவர் வழிபாடு மற்றும் புதன் கிரக வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

Leave a Reply