Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
AstroVed Menu
AstroVed
search
search

சிம்மம் மார்ச் மாத ராசி பலன் 2023 | March Matha Simmam Rasi Palan 2023

February 24, 2023 | Total Views : 321
Zoom In Zoom Out Print

சிம்மம்  மார்ச்  மாத பொதுப்பலன்கள் 2023

சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். எதிர்பாராத வழியில் வருமானம் பெருகும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சில வாக்கு வாதங்களை நீங்கள் மேற்கொள்ள நேரலாம். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளுடன் சில மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தையின் நலன் கருதி நீங்கள் பயணம் மேற்கொள்ள நேரலாம். அந்த வகையில் நீங்கள் செலவுகளை மேற்கொள்ள நேரலாம்.

உத்தியோகம் :

இந்த மாதம் உத்தியோகம் சிறப்பாக இருக்கலாம். மாதத்தின் முதல் பாதியில் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க கவனமுடன் செயல்பட வேண்டும். முடிவுகளை யோசித்து எடுக்க வேண்டும்.  பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படலாம். மாதத்தின் இரண்டாம் பகுதியில் வழிகாட்டி அல்லது நிபுணர்களின் ஆலோசனை பெற்று முடிவுகளை எடுப்பது நல்லது.  

காதல் / குடும்ப உறவு :

இந்த மாதம் உறவில் சில எதிர்பாராத திருப்பங்களை நீங்கள் சந்திக்க நேரலாம். உறவில் இருந்த பின்னடைவுகள் நீங்கும். திருமணமான தம்பதிகள் நல்லுறவை பராமரிக்க சில கடினமான தருணங்களை சந்திக்க நேரலாம்.  உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சுமுக உறவை பராமரிக்க இயலும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை :

பங்கு வர்த்தக முதலீடுகள் மூலம் இந்த மாதம் நீங்கள் லாபம் காண இயலாது. இந்த மாதம் உங்களால் பணத்தை சேமிக்க இயலாது. என்ற போதிலும் நீங்கள் பணத்தை சேமிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.  உங்களுக்கு மிகவும் பிரியமானவர்களுக்காக நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள்.

உங்கள் நிதிநிலை மேம்பட : புதன் பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்க வாய்ப்பில்லை. ஆரோக்கியமே சிறந்த செல்வம் என்பதை புரிந்து கொண்டு இந்த மாதம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உணர்ச்சி வசப்பட நேரலாம். இதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை

தொழில் :

இந்த மாதம் நீங்கள் தொழிலை சிறப்பாக நிர்வகிப்பீர்கள். நல்ல வருமானம் காண்பீர்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சிறந்த பலன்கள் கிட்டும். எதிர்பாராத மூலங்களில் இருந்து திடீர் வருமானம் வரலாம். வாடிக்கையாளர்களிடம் நேர்மையாக நடந்து கொள்வது உங்கள் வியாபார விருத்திக்கு நல்லது.  

உங்கள் தொழிலில் சிறந்து விளங்க : சனி பூஜை

தொழில் வல்லுனர்கள் :

சிம்ம ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். தொழில் குறித்த எந்தவொரு முடிவையும் இந்த மாதம் நீங்கள் தனித்து எடுக்காதீர்கள். இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் சிறப்பாக செயல்பட முயற்சி மேற்கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களிடம் ஈகோ பார்க்காதீர்கள்.

தொழிலில் முன்னேற்றம் காண : பிருகஸ்பதி பூஜை

மாணவர்கள் :

மாணவர்கள் இந்த மாதம் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்களைக் காண்பார்கள். மனதை ஒருமுகப்படுத்தி தேர்விற்கு தயாராக வேண்டும். தேர்வில் சிறப்பாக வெற்றி பெற கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.  கிரக நிலைகள் ஓரளவே சாதகமாக உள்ளதால் உங்கள் முயற்சி நிச்சயம் தேவை. உங்கள் ஆரோக்கியத்திலும் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

கல்வியில் சிறந்து விளங்க : பிருகஸ்பதி பூஜை

banner

Leave a Reply

Submit Comment