AstroVed Menu
AstroVed
search
search

மேஷம் மார்ச் மாத ராசி பலன் 2023 | March Matha Mesham Rasi Palan 2023

dateFebruary 26, 2023

மேஷம்  மார்ச்  மாத பொதுப்பலன்கள் 2023

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாத முற்பகுதியில்  நீங்கள் உங்கள் குடும்பத்திற்கும்  உங்கள் நிதிநிலைக்கும் முக்கியத்துவம் அளிப்பீர்கள். புத்தி சாதுரியத்துடன் நடந்து கொள்வீர்கள். அதன் மூலம் ஆதாயங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சில வாக்குவாதங்களை நீங்கள் தவிர்க்க முயற்சி செய்யலாம். மாதத்தின் பிற்பகுதியில்  குறைந்த தொலைவிலான பயணத்தை மேற்கொள்வீர்கள்.  குழந்தைகளின் நலனுக்காக நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரலாம். உங்கள்  விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறையை நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.

உத்தியோகம் :

மாத முற்பகுதியில் உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் ஆதாயங்களைப் பெறுவீர்கள். அரசுத் துறையில் பணியில் உள்ளவர்கள் இந்த மாதம் பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். என்றாலும் இது குறித்த உங்கள் அதீத நம்பிக்கையை நீங்கள் தவிர்ப்பது நல்லது. புதிதாக வேலை தேடுபவர்களும் அதீத நம்பிக்கையை தவிர்ப்பது நல்லது. வெளி நாடு தொடர்பான உங்கள் முயற்சிகளில் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறலாம்.

காதல் / குடும்ப உறவு :

இந்த மாதம் உங்கள் பேச்சில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது உங்கள் வார்த்தைகளில் கவனமுடன் இருக்க வேண்டும். தேவையற்ற வார்த்தைகள் உறவு முறிவதற்கு வழி வகுக்கும். உங்களில் ஒரு சிலர் மாதத்தின் முதல் பாதியில் தொலை தூர பயணம் செல்ல நேரலாம். இதனால் திருமணம் ஆனவர்கள் தங்கள் வீட்டை விட்டு / வாழ்க்கைத் துணையை விட்டு பிரிய நேரலாம். உங்கள் மனதில் இருக்கும் ஆசைகளுக்கு எல்லை வகுத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிருங்கள். இல்லாவிடில் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையில் இடைவெளியும் தீராத பிரச்சினையும் ஏற்படலாம். கவனமாக இருங்கள்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை :

பங்கு வர்ததகங்களில் முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால் இந்த மாதம் கவனமுடன் செயல்பட வேண்டும். தங்கம் மற்றும் அதிக ஆபத்தில்லாத திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.  இதன் மூலம் உங்கள் சேமிப்புப் பணம் பத்திரமாக இருக்கலாம். உங்கள் குழந்தைகளின் நலன், அவர்களின் படிப்பு மற்றும் உங்கள் தந்தையின் நலனுக்ககாக நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை 

ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். வயதான மேஷ ராசி அன்பர்களில் ஒரு சிலருக்கு மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை பெரும் நிலை இருக்கலாம். மாதத்தின் இரண்டாம் பகுதியில் தூக்கம் சார்ந்த பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். நீங்கள் கால் வழியால் அவதியுற நேரலாம். உங்கள் தாயின் உடல் நிலை படிப்படியாக முன்னேறலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை

தொழில் :

இந்த மாதம் தொழில் மூலம் வருமானம் சிறப்பாக இருக்கும். விற்பனை மற்றும் மார்க்கெடிங் துறையில் இருப்பவர்கள் தங்கள் இலக்குகளை அடைய மிகுந்த போராட்டங்களை சந்திக்க நேரலாம். கல்வித் துறையில்  இருப்பவர்களும் சில சங்கடங்களை சந்திக்க நேரலாம். சில நஷ்டங்களையும் சந்திக்க நேரலாம். என்றாலும் புதிய வாடிக்கயாளர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. தங்கம் விற்பனை செய்பவர்கள் தங்கள் விற்பனை அளவு அதிகரிக்கக் காண்பார்கள். தொழிலைப் பொறுத்தவரை இது ஒரு கலவையான மாதம் ஆகும்.

உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண : புதன் பூஜை

தொழில் வல்லுனர்கள் :

ஆலோசனை சார்ந்த பணியில் இருப்பவர்கள் இந்த மாதம் தங்கள் பணியில் சில பின்னடவை சந்திக்க நேரலாம். தொழில் சார்ந்த முடிவை எடுக்க நினைக்கும் மேஷ ராசி அன்பர்கள் இந்த மாதம் வழிகாட்டிகளின் ஆலோசனை மேற்கொள்வது நல்லது. மேலதிகாரிகள் மற்றும் சக தொழில் வல்லுனர்களுடன் சில பிரச்சினைகள் ஈகோ காரணமாக ஏற்படலாம்.

உங்கள் தொழிலில் மேன்மை பெற : சனி பூஜை

மாணவர்கள் :

மேஷ ராசியைச் சார்ந்த மாணவர்கள் மாதத்தின் முற்பகுதியில் சிறந்த மதிப்பெண்களை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் மாதத்தின் பிற்பகுதியில் போராட நேரலாம். போதிய தூக்கமின்மை காரணமாக அவதியுற நேரலாம். எனவே தங்கள் ஆரோக்கியத்த்தில் கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுது தான் மனதை ஒருமுகப்படுத்தி கவனம் செலுத்தி படிக்க இயலும். கல்லூரி படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பு சம்பந்தமான பயணம் செல்ல நேரலாம். மாணவர்கள் வாக்கு வாதங்களில் ஈடுபடுதல் கூடாது. மேற்கல்வி படிக்கும் மாணவர்கள் வெளி நாடு சென்று படிக்க வேண்டும் என்ற தங்களின் விருப்பம் நிறைவேறக் காண்பார்கள்.

கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை


banner

Leave a Reply