AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

கும்பம் மார்ச் மாத ராசி பலன் 2023 | March Matha Kumbam Rasi Palan 2023

dateFebruary 26, 2023

கும்பம் மார்ச்  மாத பொதுப்பலன்கள் 2023

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் கவனம் முழுவதும் உங்கள் சுயம் மற்றும் உம்கள் ஆரோக்கியம் குறித்ததாக இருக்கலாம். மாதத்தின் இரண்டாம் பகுதியில் உங்கள் குழந்தைகள் குறித்த கவலை உங்களுக்கு இருக்கலாம். உங்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை உண்டாக வாய்ப்புள்ளது என்றாலும் அதனை சமாளிக்க நீங்கள் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கடுமையாகப் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகம் :

உத்தியோகத்தைப் பொறுத்த வரை இந்த மாதம் நீங்கள் ஏமாற்றங்கள் மற்றும் பின்னடைவுகளைச் சந்திப்பீர்கள். வேலை மாற்றம் குறித்த எண்ணம் உங்கள் மனதில் வரலாம். உத்தியோகம் குறித்த முடிவுகளை எடுக்க வழிகாட்டிகளின் ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது. பணியிடத்தில் நீங்கள் பதட்டமும் பதற்றமும் அடைவீர்கள். மேலதிகாரிகளுடன் கவனமாகப் பழகுவதன் மூலம் நல்லுறவை தக்க வைத்துக் கொள்ள இயலும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் சில சவால்களையும் சந்திக்க நேரலாம்.

காதல் / குடும்ப உறவு :

இந்த மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மாதத்தின் முதல் பாதியில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன்  நேரம் கழிக்க உகந்த காலம். திருமணமான தம்பதிகளுக்கு இடையே மாத முற்பகுதியில் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். அதனைத் தவிர்க்க வேண்டும். விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் நடந்து கொள்வதன் மூலம் நீடித்த நல்லிணக்க உறவை பராமரிக்க இயலும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண :  சூரியன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் பன்பப்புழக்கம் தாராளமாக இருக்கும். என்றாலும் குழந்தைகளின் நலன் கருதி நீங்கள் செலவுகளை மேற்கொள்வீர்கள். குறைந்த அபாயமுள்ள திட்டங்களில் முதலீடு செய்வது உங்கள் பணத்திற்கு பாதுகாப்பானதாக இருக்கலாம். அதிர்ஷ்டம் காரணமாக எதிர்பாராத மூலங்கள் மூலம் நீங்கள் பண ஆதாயங்களைப் பெறலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட :  பிருகஸ்பதி பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். நீங்கள் மந்தமாக உணர்வீர்கள். உடல் வலி உபாதை இருக்கலாம். இரத்த அழுத்த அளவு அதிகரிக்க  வாய்ப்பு உள்ளது. வாக்குவாதங்களைத் தவிருங்கள். தனிப்பட்ட மற்றும் உத்தியோக / தொழில் வாழ்க்கையில் இருக்கும் சுமைகள் காரணமாக நீங்கள் பதட்டம் அடைய நேரலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை

தொழில் :

இந்த மாதம் தொழிலில் நீங்கள் சில சவாலான சூழலை சந்திக்க நேரலாம். தொழில் குறித்த ஒப்பந்தங்களில் சில மாறுதல்கள் இருக்கலாம். தொழிலில் சில நஷ்டங்களை நீங்கள் சந்திக்க நேரலாம். ரியல் எஸ்டேட் மற்றும் மருந்து தொழில் சார்ந்தவர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் தற்காலிக முன்னேற்றம் பெறலாம். விற்பனை அளவு மற்றும் பண வரவு சுமாராக இருக்கலாம். உங்களில் ஒரு சிலர் புதிய ஒப்பந்தம் அல்லது கூட்டுத் தொழிலை மேற்கொள்ள விரும்புவீர்கள்.

தொழிலில் முன்னேற்றம் காண :  சனி பூஜை

தொழில் வல்லுனர்கள் :

கும்ப ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் கலவையான பலனைப் பெறுவார்கள். மாதத்தின் முற்பகுதியில் உங்கள் தொழிலில் நீங்கள் அங்கீகாரம் பெறலாம். தொழிலின் நீண்ட கால நிலைத்தன்மைக்கு நீங்கள் போராட வேண்டிவரலாம். விளையாட்டு மற்றும் சேவை துறைகளில் இருப்பவர்கள் இந்த மாதம் கடினமான தருணங்களை சந்திக்க நேரலாம்.

தொழிலில் முன்னேற்றம் காண பிருகஸ்பதி பூஜை

மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். என்றாலும் சில சமயங்களில் சோம்பலை எதிர்கொள்ள நேரலாம். அதனால் வழக்கத்தை விட சற்று கூடுதலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். என்றாலும் தேர்வுகளை சிறப்பாக எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : அங்காரகன் பூஜை


banner

Leave a Reply