Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

June Month (Matha) Rasi Palan 2020 in Tamil - ஜூன் மாத ராசி பலன் 2020

May 19, 2020 | Total Views : 816
Zoom In Zoom Out Print

விருச்சிகம்  ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Viruchigam Rasi Palan 2020

விருச்சிக ராசி அன்பர்களே! இது உங்களுக்கு ஒரு சுமாரான மாதமாகவே இருக்கும். குடும்பத்தில் நீங்கள் பலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பலன்கள் உங்களுக்குச் சாதகமாக அமைய, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையும் சரி, தொழிலும் சரி, சவால்கள் நிறைந்ததாகவே காணப்படும்.  

வேலையில் உங்கள் கவனக்குறைவு காரணமாக நீங்கள் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். செய் தொழில் லாபங்களில் முடக்கம் ஏற்படலாம். மனைவி மூலம் செலவுகளும் ஏற்படக் கூடும். அனைத்து விஷயங்களிலும், இப்பொழுது நீங்கள் உறுதியாக இருப்பது அவசியம். இதன் மூலம், சோதனைகளுக்குப் பின் சாதனை செய்யும் காலமாக இதை நீங்கள் மாற்றிக் கொள்ள இயலும். இப்பொழுது சிலருக்குத் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. உங்களுடைய தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய இந்த லிங்க கிளிக் பண்ணுங்க

ரிஷபம் ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Rishabam Rasi Palan 2020

ரிஷப ராசி அன்பர்களே! பேச்சிலும் சரி, செயலிலும் சரி, இந்த மாதம் நீங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், இவற்றால் மற்றவர்கள் உங்களுக்கு எதிரிகளாக மாறக் கூடும். எனவே, எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இருப்பினும், நீங்கள் அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தன வரவு சுமாராக இருக்கும்.

 

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தின் ஆதரவும், உங்களுக்குப் பல வகையிலும் கிடைக்கும். தொழில் துறையில் மிதமான பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் புகழ் மற்றும் கெளரவம் சிறப்பாக இருக்கும். உங்களது நீண்ட நாள் ஆசைகளும், இப்பொழுது நிறைவேறும் வாய்ப்புள்ளது. எனினும், உடல் நல பாதிப்புகள் வந்து நீங்கலாம். இருப்பினும், குழந்தைகள் நன்றாகப் படிப்பதால், நீங்கள் ஆனந்தம் அடைவீர்கள். உங்களுடைய தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய இந்த லிங்க கிளிக் பண்ணுங்க

தனுசு ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Dhanusu Rasi Palan 2020

தனுசு ராசி அன்பர்களே! இது உங்களுக்கு ஒரு சாதகமான மாதமாக விளங்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்திக் கொள்ள இது மிகவும் உகந்த நேரம் எனலாம். பொதுவாக, இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் உங்கள் கையே ஒங்கி இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு இது சிறந்த காலமாகத் திகழும்.

சிலர், அவர்கள் விருப்பப்படி சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். அன்றாட நடவடிக்கைகளில் கூட, இப்பொழுது நீங்கள் காட்டும் தீவிர ஈடுபாடு, எல்லோரையும் ஈர்த்து, உங்களுடன் இணைந்து செயலாற்ற வைக்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். சிலருக்கு நாகரீகமான பொருட்களின் மீது அதிக ஆர்வம் ஏற்படும். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். உங்களுடைய தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய இந்த லிங்க கிளிக் பண்ணுங்க

கும்பம் ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Kumbam Rasi Palan 2020

கும்ப ராசி அன்பர்களே! இது உங்களுக்கு, சவால்கள் நிறைந்த, சற்றே கடினமான மாதமாக இருக்கும். நிதி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் சுமாராகவே இருக்கும். எனவே இவற்றில் கவனம் தேவை. வருவாய் இருந்தாலும், அதிக செலவுகள் காரணமாக, பாதிப்பு ஏற்படலாம். சிலர் பணம் போட்டு, புதிய தொழில்கள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது.

எனினும் உங்களுடைய கவனக்குறைவு காரணமாக, சில நேரங்களில் உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் ஏற்படாமல் போகலாம். எச்சரிக்கையாக இருக்கவும். பயணங்களிலும் அதிக கவனம் தேவை. உங்களுக்கு, உடல் நல பாதிப்புகளும் ஏற்படலாம். உங்களுடைய தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய இந்த லிங்க கிளிக் பண்ணுங்க

மகரம் ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Magaram Rasi Palan 2020

மகர ராசி அன்பர்களின் மனதை, இந்த மாதம், ஏதோ ஒரு கவலை அரித்துக் கொண்டே இருக்கக் கூடும். சிலருக்கு, அடிக்கடி தலைவலியும், மன குழப்பங்களும் கூட ஏற்படலாம். குடும்பத்திலும், சண்டை சச்சரவுகள் ஏற்படக் கூடும். கவனம் தேவை. உடல் நிலையில் சிறு பாதிப்புகள் வந்து நீங்கும். தொழில் துறையில் சிறிது கவனம் தேவை. இருப்பினும், அங்கு லாபம் எதிர்பார்க்கலாம். தாய் வழியில் வரவுகள் உண்டாகும்.

 

இளைய சகோதரர்கள் உங்களுடன்  நட்புடன் இருப்பார்கள். உறவினர்களால் நன்மை விளையும். சிலரது வாழ்க்கையில் காதல் மலரும். குழந்தைகளும் நன்மை அடைவார்கள். சிலருக்கு வாகன யோகமும் உண்டு. வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தெய்வீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலர் புனிதப் பயணங்களை மேற்கொள்வார்கள்.

மிதுனம் ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Mithunam Rasi Palan 2020

மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம், உங்கள் தொழிலிலும் சரி, நீங்கள் மேற்கொள்ளும் செயல்களிலும் சரி, ஒரு தெளிவற்ற நிலை நிலவக் கூடும். பலவித குழப்பங்கள் ஏற்படக் கூடும். எனவே, உங்கள் உடல் நிலையிலும், மன நிலையிலும் அக்கறை தேவை. எந்த முடிவெடுப்பதற்கு முன்னும், நன்கு சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணம் தொடர்பான விவகாரங்களில் பிறரிடம் மனகசப்பு ஏற்படலாம். செலவுகளும் அதிகரிக்கக் கூடும். குறிப்பாக இவை, குழந்தைகளினால் ஏற்படக்கூடும்.

நீங்கள் பலவீனத்தால் பாதிக்கப்படலாம். எனவே, உங்கள் உடல் நலனிலும் சிறப்பு கவனமும், கட்டுப்பாடும் தேவைப்படலாம். எதிரிகளாலும் தொல்லை ஏற்படக் கூடும். இருப்பினும், இவற்றை எல்லாம் நீங்கள் திறமையாகவே சமாளிப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறான அபிப்ராயங்கள், உங்கள் முயற்சியால் விலகும்.

கடகம் ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Kadagam Rasi Palan 2020

கடக ராசி அன்பர்களே! தொழில் சார்ந்த பணிகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய மாதமாக இது இருக்கும். பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இது போன்ற தருணங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். தவிர, பொதுவாக நீங்கள் இப்பொழுது மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும், சாதாரண பலன்களே கிட்டக்கூடும்.

குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடுகள் எழுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனினும், உங்கள் அனைத்துப் பணிகளையும் உங்களால் சிறந்த முறையில் கையாள முடியும். சிலர், சிறு பயணங்களையும் மேற்கொள்ளலாம். இதனால் செலவுகளும் ஏற்படலாம். எனினும், பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். 

சிம்மம் ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Simmam Rasi Palan 2020

சிம்ம ராசி அன்பர்களுக்கு, இது நன்மைகள் தரும் மாதமாக அமையும். தொழில் தொடர்பான எல்லா நடவடிக்கைகளும் சிறப்பாக நடைபெறும். தொலைதூரத் தொடர்புகள் புதிய நட்புகளை உருவாக்கித் தரக் கூடும். இவை வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல ஆதரவை அளிக்கும். தொழில் ரீதியாக, நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகளும் உருவாகலாம்.

எனவே, கடினமாக உழைத்து, அதிக உற்பத்தித் திறனை அடையும் காலம் இது, எனலாம். ஆயினும், சூழ்நிலைகள், சில சமயங்களில், உங்கள் பொறுமையை சோதிக்கலாம். எனினும், எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். குடும்ப விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

கன்னி ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Kanni Rasi Palan 2020

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம், ஓரளவு மிதமான பலன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். பணவரவு நன்றாக இருக்கும். சகோதர வழியிலும் சில ஆதாயங்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை சுமுகமாக இருக்கும். வேலை அல்லது தொழில் சாதாரணமாக நடைபெறும். செய்யும் தொழிலில், சிறு தடைகளுக்குப் பின் லாபங்கள் கிடைக்கும்.

சிலர் வாகனங்கள் வாங்க வாய்ப்பு உருவாகும். உங்கள் உடல் நலனிலும் முன்னேற்றம் ஏற்படும். எனினும், கணவர் அல்லது மனைவி, மற்றும் தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. தந்தையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால், இடையிடையே சிறிது கஷ்டங்களும் வந்து போகும். சிலருக்கு வேலையில் இடமாற்றங்கள் ஏற்படும். ஒரு சிலர், குடும்பத்துடன் வெளியூர்ப் பயணங்களையும் மேற்கொள்ளலாம்.

மீனம் ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Kumbam Rasi Palan 2020

மீன ராசி அன்பர்களே! பெரும்பாலும் இது உங்களுக்கு, ஒரு சாதகமான மாதமாகவே அமையும். உங்கள் தைரியம் பெருகும். தொழில் ரீதியாக உங்கள் மதிப்பை நிரூபிப்பதற்கு இது சரியான நேரமாக விளங்கும். ஊதிய உயர்வும் உங்களுக்குத் திருப்தி அளிக்கும். சமூக வட்டத்தில் புதிய தொடர்புகளும் அதிகரிக்கும். உங்கள் உடல்நிலையும் சாதாரணமாக இருக்கும். எனினும், உணவுக் கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. இந்தக் காலகட்டத்தில், உங்களில் சிலர், ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளலாம். அதற்கு உரிய செலவும் செய்யலாம். அப்பொழுது, ஆன்மீக குருமார்களை சந்திக்கும் வாய்ய்பு கிடைக்கக் கூடும். இதன் மூலம், அவர்கள், உங்கள் வாழ்க்கையைச் சிறந்த முறையில் நடத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்குவார்கள்.

துலாம்  ஜூன் மாத ராசி பலன் 2020

துலாம் ராசி அன்பர்கள், இந்த மாதம், பெரும்பாலும், சாதகமான  பலன்களையே எதிர்பார்க்கலாம். தன வரவு நன்றாக இருக்கும். தொழில் துறையில், அதிக உழைப்பு, கடும் முயற்சி ஆகியவற்றின் துணையால், லாபங்களைப் பெறுவீர்கள். எனினும், இடையிடையே தொழில் சிறிது மந்தமாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. பணி இடத்தில், உயர்பதவிகள் உங்களைத் தேடி வரலாம். கணவன், மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும்.

குடும்ப வாழ்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு, திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும். தகப்பனாரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். எனினும், காதல் விவகாரங்களில் கவனம் தேவை

banner

Leave a Reply

Submit Comment