AstroVed Menu
AstroVed
search
search

மீனம் ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Kumbam Rasi Palan 2020

dateMay 19, 2020

மீனம் ஜூன் மாத பொதுப்பலன்கள்:

மீன ராசி அன்பர்களே! பெரும்பாலும் இது உங்களுக்கு, ஒரு சாதகமான மாதமாகவே அமையும். உங்கள் தைரியம் பெருகும். தொழில் ரீதியாக உங்கள் மதிப்பை நிரூபிப்பதற்கு இது சரியான நேரமாக விளங்கும். ஊதிய உயர்வும் உங்களுக்குத் திருப்தி அளிக்கும். சமூக வட்டத்தில் புதிய தொடர்புகளும் அதிகரிக்கும். உங்கள் உடல்நிலையும் சாதாரணமாக இருக்கும். எனினும், உணவுக் கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளியுங்கள். தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. இந்தக் காலகட்டத்தில், உங்களில் சிலர், ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளலாம். அதற்கு உரிய செலவும் செய்யலாம். அப்பொழுது, ஆன்மீக குருமார்களை சந்திக்கும் வாய்ய்பு கிடைக்கக் கூடும். இதன் மூலம், அவர்கள், உங்கள் வாழ்க்கையைச் சிறந்த முறையில் நடத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்குவார்கள். உங்கள் இந்த மாத வாழ்க்கை பயணத்தை திட்டமிட நீங்கள் இந்த மாத ராசி பலனைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

மீனம் ஜூன் மாத காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதல் வாழ்க்கை இனிக்கும். சில காதல் உறவுகள், இப்பொழுது திருமணத்தில் முடியும் வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் குதூகலமாக மேற்கொள்ளும் பயணங்களால், நீங்கள் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவீர்கள். 

மீனம் ஜூன் மாத நிதி நிலை :

பொருளாதார விஷயங்களில், படிப்படியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். உங்களில் சிலர், நிலம் தொடர்பான சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். பணத்தைச் சேமிப்பதற்காக நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும், இப்பொழுது சுலபமாக வெற்றி பெறக்கூடும். 

மீனம் ஜூன் மாத வேலை:

பணியில் உள்ளவர்களுக்கு, புதிய இடத்தில் நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வேலை முன்னேற்றமும் சிறப்பாகவே இருக்கும். உங்கள் நேர்மறை எண்ணங்களும், உடனடியாகச் செயலில் இறங்கும் ஆற்றலும், உங்களுக்குப் பெரும் நன்மைகளை விளைவிக்கும்.  

மீனம் ஜூன் மாத தொழில் :

வியாபாரத்தில் நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகள், உங்களுக்கு நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். தொழிலில் முன்னேற்றங்கள் வந்து சேரும். கூட்டு வர்த்தகமும் லாபத்தை அளிக்கும். ஆயினும், சில நேரங்களில் உங்களுக்கு வெற்றி தாமதமாகக் கிடைக்கலாம். 

மீனம் தொழில் வல்லுநர்: 

மீன ராசி தொழில் வல்லுநர்கள், இந்த மாதம், நேரத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப அவர்களது திட்டங்களைத் தீட்ட வேண்டியது அவசியம். பணிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, உங்கள் முயற்சிகளைத் தொடர்வது, உங்கள் திறமைகளை நன்கு வெளிப்படுத்தி, சிறப்பாக செயலாற்ற உதவும். இதன் மூலம், நீங்கள் எதிர்பார்த்த பலன்களையும் பெறலாம். 

மீனம் ஜூன் மாத ஆரோக்கியம்:

உடல் நலம் சிறப்பாக இருக்கும். நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கூட, இந்த மாதம் குணமடையும் வாய்ப்புள்ளது. எனினும், அதிக  வேலைகள் காரணமாக, உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் உரிய முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போக நேரிடலாம். எச்சரிக்கையாக இருக்கவும். மருத்துவர்களின் அறிவுரைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றவும்.  

மீனம் ஜூன் மாத மாணவர்கள்:

மாணவர்களின் கல்வி, சுமாராகவே இருக்கும் எனலாம். சில நேரங்களில், உங்களது அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை, பாடங்களைப் படிப்பதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல், கேளிக்கையாக இருக்கத் தூண்டும். இதனால் படிப்பில் பிரச்னைகள் ஏற்படலாம். எனினும், மனமுடைந்து போகாமல், தொடர்ந்து தீவிரமாகப் படித்தால், நல்ல பலன் கிடைக்கும். 

சுப தினங்கள் :  5,6,9,10,11,24,25  
அசுப தினங்கள் :  3,4,12,13,26,27,30 

பரிகாரம்

ஸ்ரீ திருச்செந்தூர் முருகப் பெருமான் மற்றும் ஸ்ரீ கால பைரவர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
சனி, குரு, ராகு, கேது ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்தல், நாய்க்கு உணவு அளித்தல், பாம்புப் புற்றுக்கு பால் வார்த்தல்.


banner

Leave a Reply