AstroVed Menu
AstroVed
search
search
x

மீனம் ஜூன் மாத ராசி பலன் 2023 | June Matha Meenam Rasi Palan 2023

dateMay 26, 2023

மீனம் ஜூன் மாத ராசி பலன் 2023 | June Matha Meenam Rasi Palan 2023

மீனம் ஜூன் மாத பொதுப்பலன் 2023:

இந்த மாதம் குடும்பத்தில் சௌகரியங்கள் கூடும் என்றாலும் குடும்பத்தில் சில சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். கடந்த கால தோல்விகளில் இருந்து உங்கள் பிள்ளைகள் மீண்டு வருவார்கள்.  உங்கள்  பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் தொழிலில் சிறப்பாக செயல்படுவீர்கள். பங்கு வர்த்தகம் மற்றும் ஊக வணிகம் மூலம் நீங்கள் பண வரவைக் காணலாம். சொத்து சம்பந்தமான விஷயங்களைப் பொருத்தமட்டில் ஆவணங்களில் கையொப்பமிடுமுன் ஒன்றிருக்கு இரண்டு தடவை யோசித்து செயல்பட வேண்டும்.  

காதல்/ குடும்ப உறவு:

கணவன் மனனவி ஓருவருக்கொருவர் பரஸ்பரம் தங்கள் நேரத்தை ஒன்றாக செலவிட விரும்பலாம். இது இருவருக்கும் இடையிலான பிணைப்பில் நெருக்கத்தை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் பேச்சில் கவனம் தேவை.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை:

இந்த மாதம் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். பணத்தை ஈட்டுவதிலும் பணத்தை சேர்ப்பதிலும் இந்த மாதம் நீங்கள் ஆர்வம் செலுத்துவீர்கள். நேரமும் அதற்கு அனுகூலமாக இருக்கும்.  பங்கு சந்தை மூலம் பண வருவாய் மற்றும் லாபம் காணலாம்.அதன் மூலம் பணப்புழக்கம் கூடும். உங்களில் ஒரு சிலர் அசையாச் சொத்து மற்றும் வாகனம் வாங்கும் நோக்கத்திற்காக கடன் பெறலாம். பரம்பரை சொத்துக்களைப் பெறுவதில் சில குழப்பங்கள் ஏற்படலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை

உத்தியோகம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உத்தியோகத்தில் சிறந்த வாய்ப்புகள் கிட்டும். பணியிடத்தில் உங்களுக்கு அதிகாரம் வழங்கப்படலாம். நீங்கள் புத்திசாலித்தனத்துடனும் சாதுரியமாகவும் செயல்படுவீர்கள். உங்கள் கருத்துகள் பணியிடத்தில் செல்லுபடியாகும்.  உத்தியோகத்தில் உங்களுக்கு மேலதிகாரி மற்றும் சக ஊழியர்கள் தற்காலிகமாக சாதகமாக இருக்கலாம்.

தொழில்:

இந்த மாதம் நீங்கள் தொழிலை சிறப்பாக நிர்வகிப்பீர்கள். திட்டமிட்டு அதன்படி செயலாற்றுவீர்கள். மேலும் இந்த மாதம் நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் கொள்வீர்கள். அதில் நீங்கள் வெற்றியும் காணலாம். பங்குதாரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம்   காணலாம். இருப்பினும், எதிர்பாராத இழப்புகளை புறக்கணிக்க முடியாது என்பதால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சொந்தமான ஆலை மற்றும் இயந்திரங்களுக்கு போதுமான காப்பீடு இருப்பது நல்லது.

தொழில் வல்லுனர்கள்:

சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் தொழில் சிறப்பாக நடக்கும். நீங்கள் தன்னம்பிக்கையுடனும் புத்திசாலினத்துடனும் செயல்படுவீர்கள். தொழிலில் நீங்கள் பிறருக்கு வழி காட்டுவீர்கள். உங்கள் தகவல் தொடர்பு திறன் மேம்படும்.

தொழிலில் மேன்மை பெற : பிருகஸ்பதி பூஜை

மீன ராசிக்காரர்களைப் பொறுத்த வரையில் ஆரோக்கியத்தில் பெரிதாக கவலைப்பட ஒன்றுமில்லை. போதுமான தூக்கம் கொள்வதில் மட்டும் கவனமாக இருங்கள்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை

மாணவர்கள்:

இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் வெற்றி காண கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தாங்கள் விரும்பும் கல்வி பயில நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.  இந்த காலகட்டத்தில் திடமான முடிவெடுப்பதோடு நல்ல திறமையையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தலாம். இந்த மாதத்தில் ஆசிரியர்கள் / வழிகாட்டிகளுடன் தவறான புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளாது இருக்க வேண்டும். வெளிநாடுகளில் உயர் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் அதில்  வெற்றி பெறுவார்கள்.

கல்வியில் சிறந்து விளங்க : முருகர் பூஜை

சுப தேதிகள் : 5, 6, 7, 8, 16, 17, 18, 19, 20, 23, 24, 25, 26 & 27.

அசுப தேதிகள் : 1, 2, 9, 10, 11, 12, 13, 28, 29 & 30.

Tags Tags:

    Leave a Reply