Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

கன்னி ஜூன் மாத ராசி பலன் 2023 | June Matha Kanni Rasi Palan 2023

May 26, 2023 | Total Views : 836
Zoom In Zoom Out Print

கன்னி  ஜூன் மாத பொதுப்பலன் 2023 :-

இந்த மாதம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். தொழில் சிறப்பாக நடக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வரலாம். அதன் மூலம் லாபம் மற்றும் ஆதாயம் பெறலாம். குறிப்பாக வீடு விற்றல் வாங்கல் தொழிலில் நல்ல லாபம் கிட்டும். இந்த மாதம் பெண்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். எதிரிகளை வெற்றி காண்பீர்கள். இந்த மாதம் ஆன்மீகப் பயணத்தை நீங்கள் மேற்கொள்வீர்கள்.

காதல் / குடும்ப உறவு:

குடும்பத்தில் சில குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகள் இருக்கும். என்றாலும். குடும்ப வாழ்க்கை மற்றும் உறவு விஷயங்களில் பிரச்சினை அளிப்பவர்களை நீங்கள் இனம் கண்டு கொள்வீர்கள்.  குடும்பத்தில் வாகுவாதங்களைத் தவிருங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : பிருகஸ்பதி பூஜை

நிதிநிலை:

உங்களின் நிதிநிலை இந்த மாதம் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் பூர்வீக சொத்து உங்கள் கைக்கு வந்து சேரும். பங்கு சந்தை மூலம் லாபமும் ஆதாயமும் காண்பீர்கள். தந்தையின் நல்வாழ்வு கருதி செலவுகளை மேற்கொள்வீர்கள். சக பணியாளர்களில் ஒருவர் உங்களின் நிதி உதவியை நாடுவார். நீங்கள் அவருக்கு உதவும் வகையில் செலவுகளை மேற்கொள்வீர்கள்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை

உத்தியோகம்:

உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடை போடுவீர்கள். சாதுரியமாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் உங்கள் உழைப்பு மற்றும் முயற்சி நல்ல பலன்களை பெற்றுத் தரும். நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவீர்கள்.

தொழில்:

இந்த மாதம் தொழில் ஏறுமுகத்தில் இருக்கும். குறிப்பாக தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிட்டும் காலமாக இந்த மாதம் அமையும். புதிய தொழிலை மேற்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிட்டும். தொழில் மூலம் வருமானம் பெருகி பணப்புழக்கம் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.  அரசாங்க விதிமுறைகளை தொழிலில் பின்பற்ற வேண்டி இருக்கும். புதிய திட்டங்களை தீட்டி தொழிலில் வெற்றி காண்பீர்கள்.

தொழில் வல்லுனர்கள்

இந்த மாதம் நீங்கள் சில கட்டுப்பாடுகளுடன் தொழில் நடத்துவீர்கள். உங்கள் அதிகாரம் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும். தொழிலில் வெற்றி காண நீங்கள் சாதுரியமாகச் செயல்பட வேண்டியிருக்கும். உங்கள் பேச்சாற்றல் மூலம் தொழிலில் வெற்றி வாகை சூடுவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் தொழிலுக்கு சாதகமாக செயல்படுவார்கள். மேலும் வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

தொழிலில் மேன்மை பெற  : புதன் பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் ஆரோக்கியம் சீராக இருக்கும். இருப்பினும், உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனமாக இருக்கவும், நிலையான ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயிற்சி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. சில சமயங்களில் தந்தையின் உடல்நலம்  கவலையை ஏற்படுத்தலாம் மற்றும் இந்த மாத தொடக்கத்தில் மருத்துவமனை செலவுகள் ஏற்படலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை

மாணவர்கள்:

மாணவர்கள் இந்த மாதம் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நிச்சயம் வெற்றி காண்பார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தைரியத்துடன் செயல்பட வேண்டியிருக்கும். ஆசிரியர் கூறும் கருத்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்கு எதிர்மாறாக செயல்படுவது அல்லது வாக்கு வாதம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். விளையாடும் போதும் வாகனம் ஓட்டும் போதும் எச்சரிக்கை தேவை.

கல்வியில் சிறந்து விளங்க : பிருகஸ்பதி பூஜை  

சுப தேதிகள் : 3, 4, 5, 6, 9, 10, 11, 12, 18, 19, 20, 21, 22 & 30.

அசுப தேதிகள் : 13, 14, 15, 23, 24, 25, 26 & 27.

banner

Leave a Reply

Submit Comment