AstroVed Menu
AstroVed
search
search
x

கும்பம் ஜூன் மாத ராசி பலன் 2023 | June Matha Kumbam Rasi Palan 2023

dateMay 26, 2023

கும்பம் ஜூன் மாத ராசி பலன் 2023 | June Matha Kumbam Rasi Palan 2023

கும்பம் ஜூன் மாத பொதுப்பலன் 2023:

கும்ப ராசி அன்பர்கள் இந்த மாதம் சில சோதனையான தருணங்களை சந்திக்க நேரலாம். உங்கள் பிள்ளைகளால் நீங்கள் சுக போகத்தை அனுபவிப்பீர்கள். இந்த மாதத்தில் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவதன் மூலம் வாழ்க்கையின் பல அம்சங்களில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இயலும். இந்த காலகட்டத்தில் உடன்பிறந்தவர்களுடன் கடுமையான பிரச்சினைகள் மற்றும் தவறான புரிதல்கள் இருக்கலாம்.

காதல்/ குடும்ப உறவு :

காதலர்கள் தங்கள்  துணையின்  மீது அதிகாரம் செலுத்துவார்கள். உறவு நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே தாம்பத்ய உறவு சிறப்பாக இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் திருமணம் நிச்சயமாக வாய்ப்புள்ளது. தக்க துணை கிடைக்கப் பெற்று மகிழ்வீர்கள்.   

திருமண உறவில் நல்லிணக்கம் காண  : சுக்கிரன் பூஜை

நிதிநிலை:

இந்த மாதத்தில் உங்களின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை மிதமாக இருக்கும். இந்த மாதத்தின் ஆரம்ப பகுதியில் உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது.  தந்தைக்கு அல்லது தந்தையின் சார்பில்  கடன் வாங்க நேரலாம். அதை விரைவில் நீங்கள் திருப்பிச் செலுத்தி விடுவீர்கள். சிலருக்கு  இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம்  காரணமாக பணம் வரக்கூடும். பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடு உங்களுக்கு நியாயமான அளவு ஆதாயங்களைத் தரலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை

உத்தியோகம்:

உத்தியோகத்தைப் பொறுத்தவரை நீங்கள் இந்த மாதம் சில சோதனைக் கட்டங்களை கடக்க நேரலாம்.  இது  வாழ்க்கையில் நீங்கள் இதுவரை கண்டிராத சோதனையின் உச்சமாக கூட இருக்கலாம்.  பணியிடத்தில் உங்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படலாம்.  பணியிடத்தில் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.  பணியிடத்தில் ஒழுக்கத்தை பராமரிக்க வேண்டிய அவசியம் இருக்கும். பணியிடத்தில் எதிரிகள் இருக்கக்கூடும், அவர்களை புத்திசாலித்தனத்துடன் கையாள்வது உங்கள்  கைகளில் உள்ளது.

தொழில்:

இந்த மாதம் உங்கள் தொழிலில் நீங்கள் சில நெருக்கடியான தருணங்களை சந்திக்க நேரலாம். எனவே உங்களுக்கு  நிபுணர்களின் ஆலோசனை தேவைப்படலாம். மற்றும் வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட  வழிகாட்டிகளின் அறிவார்ந்த பங்களிப்பை நம்பியிருக்க வேண்டியிருக்கும்.  இந்த மாதம் புதிய வியாபாரங்களில் முதலீடு செய்வது உசிதம் அல்ல. உங்கள் வியாபரத்தை சிறப்பாக நடத்த உங்கள் தந்தை வழி சொத்துக்கள் இந்த காலக்கட்டத்தில் உதவிகரமாக இருக்கும். தொழிலில் உள்ள பணியாளர்கள் / தொழிலாளர் வர்க்கத்தினரிடையே ஏற்படும்  பிரச்சினைகளை நீங்கள் கையாண்டு தீர்வு காண வேண்டியிருக்கும்.

தொழில் வல்லுனர்கள்:

இந்த மாதம் தொழிலைப் பொறுத்தவரை கடினமான காலகட்டமாக இருக்கலாம். என்றாலும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்வதன் மூலம் நிலைமையை சமாளிக்கலாம். தொழில் சார்ந்த விஷயங்களில் புதிய உக்திக்ளைக் கையாள்வீர்கள். அது உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.

தொழிலில் மேன்மை பெற : அங்காரகன் & சனி பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு / ஊனமுற்றவர்களுக்கு உதவுவது ஆரோக்கியம் தொடர்பான கர்மாவிற்கான நிவர்த்தியாக இருக்கும். தியானம் மற்றும் ஆன்மீகத்தில் நேரத்தை செலவிடுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் & சனி பூஜை

மாணவர்கள்:

கும்ப ராசி மாணவர்களின் கல்வியைப் பொறுத்தவரை இந்த மாதம் ஏற்ற இறக்க நிலை இருக்கும். மாணவர்கள் வழியில் தடைகளை எதிர்கொண்டாலும், பொதுவாக தேர்வு / கல்வியில் வெற்றி பெற முடியும். படிப்பில் மாணவர்கள் சோர்வடையாமல் கடின முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும். கல்வி விஷயங்களில் பல முயற்சிகளுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும்.

கல்வியில் சிறந்து விளங்க : பிருகஸ்பதி பூஜை

சுப தேதிகள் : 3, 4, 5, 6, 14, 15, 16, 17, 21, 22, 23, 24 & 30.

அசுப தேதிகள்: 7, 8, 9, 10, 11, 25, 26 & 27.

 

Tags Tags:

    Leave a Reply