AstroVed Menu
AstroVed
search
search

மகரம் ஜூன் மாத ராசி பலன் 2023 | June Matha Magaram Rasi Palan 2023

dateMay 26, 2023

மகரம் ஜூன் மாத பொதுப்பலன் 2023:

இந்த மாதம் குடும்பத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். உங்கள் பிள்ளைகள் மூலம் அவை தீர்வுக்கு வரலாம். இதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும். உங்களைச் சுற்றி இருக்கும் சில நபர்கள் மூலம் குடும்பத்தில் சில பிரச்சினைகள் எழலாம். இந்த மாதம் நீங்கள் எதிரிகளை எளிதாகக் கையாள்வீர்கள்.

காதல்/ குடும்ப உறவு : 

காதல் மற்றும் உறவு விஷயங்களில் நீங்கள் உங்கள்  ஆசைகளை கட்டுப்படுத்த வேண்டும். உறவு நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் கவனமுடன் பழக வேண்டும். உங்களைச் சுற்றி இருக்கும் நபர்களால் நீங்கள் ஏமாற்றப்படலாம். விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். தவறான புரிந்துணர்வு காரணமாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து  வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன்  & சுக்கிரன் பூஜை

நிதிநிலை:

உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். பூர்வீக சொத்துகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு அது பயன்படும். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் மற்றும் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் சார்ந்த செலவுகளை மேற்கொள்வீர்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நீங்கள் கடன் வானகுவீர்கள்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சனி பூஜை

உத்தியோகம்:

உங்கள் உத்தியோகத்தைப் பொறுத்தவரை நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். மேலதிகாரிகள் உங்களை வழிநடத்துவார்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். பணியிடச் சூழல் சுமுகமாக இருக்கும். என்றாலும் மேலதிகாரி உங்களுக்கு எதிராக செயலாற்றவோ அல்லது பிரச்சினை ஏற்படுத்தவோ வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக செயல்பட வேண்டும்.

தொழில் : 

தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் மிதமான பலன்கள் கிட்டும். நீங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த எண்ணுவீர்கள். அதற்கான ஆதரவும் பங்குதாரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் உங்களுக்கு கிட்டும். இந்த மாதம் தொழில் சம்பந்தமான ஆவணங்களை கவனமாகக் கையாள வேண்டும்.

தொழில் வல்லுனர்கள் :

மகர ராசி தொழில் வல்லுனர்கள் சென்ற மாதத்தை விட இந்த மாதம் சிறப்பாக இருக்கக் காண்பார்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு இந்த மாதம் கிட்டும். தொழில் புரியும் இடத்தில் உங்கள் உணர்ச்சிகளை, கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். புத்திசாலித்தனத்துடனும், சாதுரியமாகவும் செயல்பட வேண்டும்.

தொழிலில் மேன்மை பெற : அங்காரகன் பூஜை

ஆரோக்கியம்:

ஆரோக்கியமே சிறந்த செல்வம் மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம்  இந்த மாதம் படிப்படியாக சீராகும். நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரலாம். தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை

மாணவர்கள்:

கல்வியைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன் தரும் மாதம் என்றாலும் பொறுமை தேவை. நன்றி உணர்வு மறக்காமல் இருக்க வேண்டும். வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைக்கப் பெறுவார்கள். அதன் காரணமாக கல்வியில் கவனச் சிதறல் ஏற்படலாம். எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

கல்வியில் சிறந்து விளங்க :ஹயக்ரீவர் & முருகர் பூஜை

சுப தேதிகள் : 1, 2, 3, 4, 11, 12, 13, 14, 15, 18, 19, 20, 21, 22, 28, 29 & 30.

அசுப தேதிகள் : 5, 6, 7, 8, 23, 24 & 25.


banner

Leave a Reply