Aadi Velli: 5 Goddess Power Fridays For Power, Protection & Prosperity | 10% OFF JOIN NOW
x
x
x
cart-added The item has been added to your cart.

கும்பம் ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Kumbam Rasi Palan 2020

May 18, 2020 | Total Views : 171
Zoom In Zoom Out Print

கும்பம் ஜூன் மாத பொதுப்பலன்கள்:

கும்ப ராசி அன்பர்களே! இது உங்களுக்கு, சவால்கள் நிறைந்த, சற்றே கடினமான மாதமாக இருக்கும். நிதி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் சுமாராகவே இருக்கும். எனவே இவற்றில் கவனம் தேவை. வருவாய் இருந்தாலும், அதிக செலவுகள் காரணமாக, பாதிப்பு ஏற்படலாம். சிலர் பணம் போட்டு, புதிய தொழில்கள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. எனினும் உங்களுடைய கவனக்குறைவு காரணமாக, சில நேரங்களில் உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் ஏற்படாமல் போகலாம். எச்சரிக்கையாக இருக்கவும். பயணங்களிலும் அதிக கவனம் தேவை. உங்களுக்கு, உடல் நல பாதிப்புகளும் ஏற்படலாம். உங்கள் இந்த மாத வாழ்க்கை பயணத்தை திட்டமிட நீங்கள் இந்த மாத ராசி பலனைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

கும்பம் ஜூன் மாத காதல் மற்றும் திருமண வாழ்க்கை  

காதல் வாழ்க்கை சுமாராக இருக்கும். உங்கள் காதல் விவகாரங்களில் தடங்கல்களும் ஏற்படலாம். எனவே பொறுமை தேவை. குடும்பப் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், நீங்கள் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது.  

கும்பம் ஜூன் மாத நிதி நிலை 

உங்கள் நிதி நிலை ஓரளவு மகிழ்ச்சி தருவதாகவே இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில், சுமாரான முன்னேற்றமும் காணப்படும். உங்கள் வருமானம், உங்களது அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இருக்கும்.  

கும்பம் ஜூன் மாத வேலை

உங்கள் வேலையில் நிலையான முன்னேற்றத்தை எதிர்பார்க்க இயலாது.  எனினும், இந்தக் காலகட்டத்தில், பல்‌வேறு காரணங்களால் எழும் சிக்கல்களை, நீங்கள் துணிவுடன் எதிர்கொள்வீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் அன்பாக  நடந்து கொள்வதும், உங்களுக்கு நன்மை தருவதாக அமையும்.   

கும்பம் ஜூன் மாத தொழில் 

தொழில் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம். உங்கள் செயல்திறனும் மந்தமாக இருக்கக் கூடும். இந்தக் காலகட்டத்தில், தொழில் வளர்ச்சியில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். மேலதிகாரிகளுடன் நட்போடு பழகுவதும், அவர்களது ஆதரவை, உங்களுக்குப் பெற்றுத் தரும். 

கும்பம் ஜூன் மாத தொழில் வல்லுநர் 

கும்ப ராசி தொழில் வல்லுநர்கள், அவர்கள் துறையில் கவனம் செலுத்தி, அதில் சிறந்து விளங்கும் மாதம் இது. உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வு, உங்களுக்குப் புதிய பொறுப்புகளைக் கொண்டு வந்து சேர்க்கும். தொழில் துறையில் நீங்கள் முன்பு இழந்ததையும், திரும்ப பெறும் காலமாக இது அமையக் கூடும். 

கும்பம் ஜூன் மாத ஆரோக்கியம் 

உங்கள் உடல் நலன் சுமாராகவே இருக்கும். இது தற்காலிகமான ஒன்று என்றாலும், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுத்துக் கொள்வதும் அவசியம்.

கும்பம் ஜூன் மாத மாணவர்கள் 

இந்தக் கால கட்டத்தில் மாணவர்களின் படிப்பு சீரான போக்கில் இருக்கும். நீங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றமும் காணலாம். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். நண்பர்களுடன்  நல்லுறவை வளர்த்து கொள்வதும், நன்மை தரும்.  

சுப தினங்கள் :  3,4,7,8,22,23,30
அசுப தினங்கள் : 1,2,9,10,11,24,25,28,29 

பரிகாரம்

ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ முருகபெருமான் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

சனி, குரு, ராகு, கேதுவுக்கு பூஜை மற்றும் ஹோமம் செய்து வழிபடுதல்.

ஆலயங்களில் அன்னதானம் செய்தல், ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கு உதவி செய்தல். நாய் மற்றும் பறவைகளுக்கு உணவு அளித்தல்.
 

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos