AstroVed Menu
AstroVed
search
search

மகரம் ஜூன் மாத ராசி பலன் 2020 | June Matha Magaram Rasi Palan 2020

dateMay 19, 2020

மகரம் ஜூன் மாத பொதுப்பலன்கள்:

மகர ராசி அன்பர்களின் மனதை, இந்த மாதம், ஏதோ ஒரு கவலை அரித்துக் கொண்டே இருக்கக் கூடும். சிலருக்கு, அடிக்கடி தலைவலியும், மன குழப்பங்களும் கூட ஏற்படலாம். குடும்பத்திலும், சண்டை சச்சரவுகள் ஏற்படக் கூடும். கவனம் தேவை. உடல் நிலையில் சிறு பாதிப்புகள் வந்து நீங்கும். தொழில் துறையில் சிறிது கவனம் தேவை. இருப்பினும், அங்கு லாபம் எதிர்பார்க்கலாம். தாய் வழியில் வரவுகள் உண்டாகும். இளைய சகோதரர்கள் உங்களுடன்  நட்புடன் இருப்பார்கள். உறவினர்களால் நன்மை விளையும். சிலரது வாழ்க்கையில் காதல் மலரும். குழந்தைகளும் நன்மை அடைவார்கள். சிலருக்கு வாகன யோகமும் உண்டு. வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தெய்வீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலர் புனிதப் பயணங்களை மேற்கொள்வார்கள்.உங்கள் இந்த மாத வாழ்க்கை பயணத்தை திட்டமிட நீங்கள் இந்த மாத ராசி பலனைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

ஜூன் மாத காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதல் வாழ்க்கை சுவையாக இருக்கும். கணவன், மனைவி உறவில் நிலவும் இனிய சூழலும், உங்களுக்கு மன நிறைவு தரும். எனினும், குடும்ப விஷயங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உங்கள் வரன் தேடும் முயற்சிகள் தொடரும். 

ஜூன் மாத நிதி நிலை:

உங்கள் பொருளாதார நிலை, ஓரளவு சிறப்பாகவே இருக்கும். தாய் மூலம் பொருள் வரவு ஏற்படும் வாய்ப்புள்ளது. நிலம் சம்மந்தப்பட்ட தொழில்களாலும் நன்மை உண்டாகும். இருப்பினும், பணம் தொடர்பான எந்த விஷயத்தைச் செய்வதற்கு முன்பாகவும், ஒரு முறைக்கு, இரண்டு முறை யோசித்துச் செய்யுங்கள். 

ஜூன் மாத வேலை:

பணித் துறை திருப்தி அளிக்கும். எனினும், அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். கூடுதல் பொறுப்புகளும் வந்து சேரலாம். கொடுக்கப்பட்ட கடமைகளை, நீங்கள் சரியாக நிறைவேற்றுவது அவசியம். இதனால் வரும் பாராட்டுகள், உங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், திருப்தியையும் தரும். 

ஜூன் மாத தொழில்:

தொழில் சுமாராக நடைபெறும். இப்பொழுது நீங்கள், உங்கள் வியாபார நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். இது தொழில் முயற்சிகளுக்குப் பணம் ஈட்ட, உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நீங்கள் அதிருப்தி அடையும் வாய்ப்பு உள்ளது. 

ஜூன் மாத தொழில் வல்லுநர் 

மகர ராசி தொழில் வல்லுநர்கள், வேலையில் கவனமாக இருக்க வேண்டிய மாதம் இது. பணிச்சுமை காரணமாக, கூடுதல் நேரம் செலவழித்து, வேலையை முடிக்க வேண்டி வரலாம். இந்த நேரத்தில், வேலையில், அலட்சியப் போக்கையும், கோபத்தையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.  

ஜூன் மாத ஆரோக்கியம் 

உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உட்கொண்டால், உடல் வலிமை பெறும். இதனால், ஏதேனும் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், உங்கள் எதிர்ப்பு சக்தி அவற்றைச் சரி செய்து விடும். 

ஜூன் மாத மாணவர்கள் 

கல்வியைப் பொறுத்தவரை, இது ஒரு சாதாரண மாதமாக இருக்கும்.  இப்பொழுது, மாணவர்களின் கவனம் திசை திரும்ப வாய்ப்பு உள்ளது. இது கல்வி முன்னேற்றத்தைக் குறைக்கும். எனவே எச்சரிக்கை தேவை. கடின முயற்சி செய்து படித்தால், நீங்கள் நல்ல நிலையை அடையலாம்.  

சுப தினங்கள் : 1,2,5,6,19,20,21,28,29
அசுப தினங்கள் : 7,8,22,23,26,27

பரிகாரம்

சிவபெருமான் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

சனி, குரு, ராகு, கேதுவுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.

சன்னியாசிகளுக்கு உணவு அளித்தல், தேவையான உதவி செய்தல்.


banner

Leave a Reply