AstroVed Menu
AstroVed
search
search
x

மேஷம் ஜூலை மாத ராசி பலன் 2023 | July Matha Mesham Rasi Palan 2023

dateJune 14, 2023

மேஷம் ஜூலை மாத ராசி பலன் 2023 | July Matha Mesham Rasi Palan 2023

மேஷம் ஜூலை மாத பொதுப்பலன் 2023:

மேஷ ராசி அன்பர்கள் இந்த மாதத்தில் குழந்தைகளின் நலனில் அதிக அளவில் கவனம் செலுத்தலாம் மற்றும் யோசனைகள் / அறிவை மேம்படுத்தலாம். குழந்தைகளின் செயல்கள் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தக்கூடும். இந்த மாதத்தில் நீங்கள் உடல்நலம் தொடர்பான பின்னடைவுகளில் இருந்து மீண்டு வரலாம். உங்கள்  முயற்சிகள் ஒட்டுமொத்த அளவில் நல்ல பலனைத் தரும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இந்த மாதத்தில் நல்ல பலன்கள் உண்டாகும்.

காதல்/குடும்ப உறவு :

மேஷ ராசிக்காரர்களுக்கு உறவு அம்சங்கள் சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தில் ஒரு சிலருக்கு திருமணம் நடக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார். கணவன்/மனைவியை விட்டு விலகியிருந்தவர்கள் இந்த மாதம் ஒன்று கூடுவார்கள். மேஷ ராசிக்காரர்களைப் பொறுத்த வரையில் தம்பதியினரிடையே பிணைப்பு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான இணைப்புப் பகிர்வு இருக்கும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஒரே விஷயம், உறவின் அம்சங்களில் தாழ்வு மனப்பான்மையை அனுமதிக்க கூடாது

திருமண உறவில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை

நிதிநிலை:

இந்த மாதம் முழுவதும் உங்கள்  நிதி நிலை நன்றாக இருக்கும். இந்த மாதம் கடனைத் திருப்பிச் செலுத்துவது சற்று விரைவாக நடக்கும். கடின முயற்சிகள் இருந்தபோதிலும், உங்களின்  நிதித் தேவைகளை நீங்கள் சிறப்பாக கையாள முடியும்.  இந்த மாதத்தில் நிதி அம்சங்களில் அதிர்ஷ்டம்  இருக்கும். நீங்கள் கணிசமான பணத்தை சேமிக்கலாம். திட்டமிட்டு பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணலாம். இம்மாதம் உங்களின் கட்டுப்பாட்டிற்குள் செலவுகள் இருக்கும்.

உங்களின் நிதிநிலை மேம்பட :சுக்கிரன் பூஜை

உத்தியோகம் :

இந்த மாதத்தில் பணியிடத்தில் சில குழப்பங்கள் மற்றும் உரசல்கள் தொடர்ந்து இருக்கும். பணியிடத்தில் நெருக்கடியான சூழ்நிலைகளை கையாளும் அளவுக்கு நீங்கள் புத்திசாலியாக செயல்படுவீர்கள். இந்த மாதத்தில் வருமானமும் அதிகரிக்கும். உத்தியோகம் சம்பந்தமான விஷயங்களில் வழிகாட்டிகளின் வழிகாட்டுதலைப் பெற முடியும். இக்காலகட்டத்தில் சக பெண் பணியாளர்களும் உறுதுணையாக இருப்பார்கள்.

தொழில் :

தொழில் அல்லது வியாபாரம் செய்யும்  மேஷ ராசிக்காரர்கள் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் சில போராட்டங்களுக்குப் பிறகு சீரான மீட்சியையும் வளர்ச்சியையும் காணலாம். வெற்றிகரமான தொழில் அமைய உங்கள் வியாபார  செயல்முறையை மறுகட்டமைப்பதற்கான யோசனைகளை மேற்கொள்ளலாம். வருமான ஓட்டம் மேம்பட்ட நிலையில் இருக்கலாம். இம்மாதத்தில் மறுசீரமைப்புத் திட்டத்தின் காரணமாக உங்கள் கடன்களும் குறையும்.

தொழில் வல்லுனர்கள் :

மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் விஷயங்களில் சாதகமான காலம் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொழிலில் புதிய உத்திகளை புகுத்துவீர்கள். இந்த மாதத்தில் தொழிலில் நீங்கள் சாதுரியமாகச் செயல்படலாம். தொழில் செய்யும் இடத்தில் உங்களுக்கு  அதிகாரம் இருக்கலாம். புதிய யோசனைகள் வருவாய் ஈட்டும் காரணியாக மாறலாம்.

உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண : சனி பூஜை

ஆரோக்கியம் :

உடல்நலம் மேம்படும். இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகளில் நம்பிக்கையை வெளிப்படுத்துவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்களின் உணர்வுகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், சொந்த மற்றும் தொழில்முறை கடமைகள் காரணமாக பரபரப்பான காலகட்டத்தை சந்திக்க நேரிடும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : ராகு பூஜை

மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல காலம் இருக்கும். மாணவர்கள்  தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். புதிய யோசனைகள் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். ஆசிரியர்களிடமிருந்து  சிறந்த  வழிகாட்டுதல்களைப் பெறுவார்கள். இருப்பினும், அதிகப்படியான சிந்தனையைத் தவிர்ப்பது நல்லது. உயர்கல்விக்காக வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் இன்னும் சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும்.

கல்வியில் சிறந்து விளங்க : சனி பூஜை

சுப தேதிகள் : 4, 5, 6, 7, 15, 16, 17, 18, 19, 23, 24, 25 & 26.

அசுப தேதிகள்  1, 2, 8, 9, 10, 11, 12, 27, 28 & 29.

Tags Tags:

    Leave a Reply