AstroVed Menu
AstroVed
search
search
x

ரிஷபம் ஜூலை மாத ராசி பலன் 2023 | July Matha Rishabam Rasi Palan 2023

dateJune 14, 2023

ரிஷபம் ஜூலை மாத ராசி பலன் 2023 | July Matha Rishabam Rasi Palan 2023

ரிஷபம் ஜூலை மாத பொதுப்பலன் 2023:

உங்களின் கவனம் இந்த மாதத்தில் வீடு மற்றும் வசதிகளை நோக்கி இருக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் ஆதாயங்களும் அனுகூலமான காலகட்டமும் இருக்கும். நீங்கள் மன அமைதியை அடைவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். குழந்தைகளும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி காண்பார்கள். இம்மாதத்தில் தகவல் தொடர்பு அம்சங்களை நன்றாகச் சரிசெய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.

காதல் /குடும்ப உறவு :

இந்த மாதத்தில் ஒட்டுமொத்த உறவு விஷயங்களும் கலவையான முடிவுகளை அளிக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில் பங்குதாரர்/மனைவி ஆதரவாக இருந்தாலும், வாக்குவாதங்கள் மற்றும் ஈகோ மோதல்கள் ஏற்படலாம். இந்த மாதத்தில் தம்பதிகள் சொத்துக்கள் மற்றும் வாகன விஷயங்களில் ஒன்றாக முதலீடு செய்யலாம். சுமூகமான குடும்ப வாழ்க்கையை உறுதிப்படுத்த அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை

நிதிநிலை :

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதிநிலை நன்றாக இருக்கும். சேமிப்புகள் குவியும். ரியல் எஸ்டேட் விஷயங்களில் முதலீடுகள் இருக்கலாம். இந்த மாதத்தில் வீடு புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு செலவுகள் இருக்கலாம். இந்த காலகட்டத்தில் பண வரவு அதிகரிக்கலாம். பங்குச் சந்தையில் முதலீடு மற்றும் வர்த்தகத்தில் இந்த மாதத்தின் பிற்பகுதியில் நல்ல பலன்களைக் காண்பார்கள்.

உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை

உத்தியோகம் :

ரிஷப ராசிக்காரர்களின் உத்தியோகம் நல்ல முன்னேற்றத்தைக் காணும். ஆனால் இந்த மாதத்தில் பணியிடத்தில் ஈகோ மோதல்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய மற்றும் புதுமையான யோசனைகள் மூலம் நீங்கள் அதிக வருமானத்தை ஈட்டக்கூடும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இந்த மாதம் பணியிடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

தொழில் :

ரிஷப ராசிக்காரர்கள் மேற்கொள்ளும் வியாபாரம் நல்ல வளர்ச்சியைக் காணும். இந்த மாதத்தில் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை நீங்கள் மேற்கொள்ளலாம். அதிக முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். இந்த காலகட்டத்தில் வணிக கடன்களை திருப்பிச் செலுத்தலாம். உங்கள் பங்குதாரர்கள் சில முதலீடுகளைக் கொண்டு வருவதன் மூலம் வியாபாரத்தில் நீங்கள் நன்மையடையலாம். தொழிலில் ஒட்டுமொத்த நிதி வரவு நன்றாக இருக்கும்.

தொழில் வல்லுனர்கள் :

ஜூலை மாதத்தில் நீங்கள் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். சாதுரியமாகச் செயல்படுவீர்கள். தொழிலில் பங்குதாரர்கள்  ஆதரவை வழங்கலாம் என்றாலும் அவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கடின முயற்சிகளுக்குப் பிறகு வாடிக்கையாளர் எண்ணிக்கையயை விரிவுபடுத்த  முயற்சிகள் மேற்கொள்ளலாம். நீங்கள் உணர்ச்சிகரமான முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளது.

உத்தியோகத்தில் சிறந்து விளங்க : சனி பூஜை

ஆரோக்கியம் :

ரிஷப ராசிக்காரர்களின் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். தூக்கமின்மை பிரச்சினை தொடர்ந்து கவலையை ஏற்படுத்தும். மன அழுத்தம் இருக்கலாம். நீங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக தியானம் மற்றும் யோகாவை நாடலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை

மாணவர்கள் :

ரிஷப ராசி மாணவர்களுக்கு கல்வி அம்சங்கள் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் மாற்றம் பெறலாம் மற்றும் செயல்பாட்டில் சில தடைகளை இந்த மாதம் சந்திக்கலாம். இந்த காலகட்டத்தில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் போக்கு இருக்கலாம், ஆனால் அதற்கு ஒரு எல்லையை வகுத்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் உயர்கல்வி பெற இந்த மாதம் சிறப்பாக கருதப்படுகிறது.

கல்வியில் சிறந்து விளங்க : அங்காரகன் பூஜை

சுப தேதிகள் : 1, 6, 7, 8, 9, 18, 19, 20, 21, 22, 26, 27, 28 & 29.

அசுப தேதிகள் : 2, 3, 10, 11, 12, 13, 14, 30 & 31.

Tags Tags:

    Leave a Reply