ஜாதக கட்டம் - மனிதப் பிறவி என்பது அவரவர் கர்ம வினைப் பயன்களின் அடிப்படையில் தான் அமைகின்றது. கர்ம வினைப்படி நிகழும் பலாபலன்கள் அதாவது உங்கள் வாழ்வின் ரகசியங்கள் பன்னிரு கட்டங்கள் மற்றும் அவற்றில் நிற்கும் கிரகங்களைப் பொறுத்து அமைகின்றது. உங்கள் வாழ்வின் எந்தவொரு நிகழ்வையும் பன்னிரு கட்டங்களில் நிற்கும் கிரகங்கள் தீர்மானிக்கின்றன. உங்கள் இயல்பு, கல்வி, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேறு, ஆரோக்கியம். தொழில், மகிழ்ச்சி, துக்கம், பொருளாதார நிலை, குடும்ப நிலை என உங்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஜாதக கட்டம் மூலம் நீங்கள் அறிய இயலும். ஜாதக கட்டத்தின் ஒவ்வொரு கட்டமும் உங்கள் வாழ்வின் எந்த அம்சத்தைப் பற்றிக் கூறும் என நாம் விரிவாகக் காண்போம் வாருங்கள்.
உங்கள் ஜாதகக் கட்டம் அறிய எங்கள் இலவச ஜாதக கட்டம் கால்குலேட்டர் பயன்படுத்தவும்
ஜாதக கட்டம் - முதல் கட்டம்:
இது முதலாம் வீடு. லக்னம் என்று அழைக்கப்படும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல லக்னத்தை வைத்து ஒரு நபரின் அனைத்து செயல்பாடுகளையும் நாம் அறிய முடியும். லக்னம் உயிர் ஸ்தானம் என்று அழைக்கபடும். இதன் மூலம் ஒருவரின் தனிப்பட்ட அங்க அடையாளங்கள் அதாவது உடலின் நிறம், உலடலின் அமைப்பு, மற்றும் ஆளுமை திறன், செல்வாக்கு, ஆயுள், பலம், பலவீனம், திறமைகள், மரியாதை, அறிவு, வலிமை மற்றும் அந்த நபரின் குணாதிசயங்களைப் பற்றி நாம் அறிய முடியும். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு அவற்றின் நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம்.
ஜாதக கட்டம் – இரண்டாம் கட்டம்:
இது இரண்டாம் வீடு ஆகும். இந்த இடத்தை தனஸ்தானம் என்றும் வாக்கு ஸ்தானம் என்றும், குடும்ப ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த பெயர்களை வைத்தே இந்த இரண்டாம் கட்டத்தின் பலனை நாம் அறியலாம். அதாவது இதன் வாயிலாக ஒரு ஜாதகரின் பணம், பணம் வரும் வழி, குடும்பம், பேச்சு, வாக்கு வன்மை, ஆகியவற்றைப் பற்றி நாம் அறிய இயலும். மேலும் இந்த வீட்டின் மூலம் கல்வி, வாய், உண்ணும் உணவு, கோபம்,வலது கண் ஆகியவற்றைப் பற்றி அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம்.
ஜாதக கட்டம் – மூன்றாம் கட்டம் :
இது மூன்றாம் வீடு ஆகும், மூன்றாம் கட்டம் என்பது தைரிய வீரிய ஸ்தானம் என்றும், சகோதர ஸ்தானம் என்றும் கூறப்படும். இந்த கட்டத்தின் மூலம் உங்கள் இளைய உடன்பிறப்பு, உங்கள் வேலையாட்கள், வெற்றி, இசை, தைரியம், பூமி, கழுத்து, பாதம், சாமர்த்தியம், போர், அண்டை வீட்டார், பயணம், தகவல் தொடர்பு, இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவற்றை பற்றி அறிய இயலும். . இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம்.
ஜாதக கட்டம் – நான்காம் கட்டம் :
இது நான்காம் வீடு ஆகும். இந்த வீடு மாத்ரு ஸ்தானம் என்றும் சுக போக ஸ்தானம் என்றும் கூறப்படும். நான்காம் கட்டம் தாயாரை குறிக்கும். கல்வி, வீடு, வாகனம், சொத்துக்கள், பொது வாழ்க்கை போன்றவற்றை குறிக்கும். மேலும் இந்த கட்டம். வித்தை, தொழில் திறமை, வாகனம், வீடு, நிலம்,வியாபாரம், பசு, பால், மருந்து வகைகள், புதையல், வேடிக்கை, நீர், விரதங்கள் மற்றும் கனவு போன்றவற்றைக் குறிக்கும். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம்.
ஜாதக கட்டம் – ஐந்தாம் கட்டம் :
இது ஐந்தாம் வீடு. ஐந்தாம் கட்டமானது புத்திர ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படும். குழந்தை பாக்கியம் பற்றியும் குழந்தை நல்லவரா? கெட்டவரா? என்பதைப் பற்றியும். முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களை பற்றியும் குறிக்கும். காதல் திருமணமா? என்பதை கூறிவிடும். கலைத்துறை மற்றும் ஆன்மீக நாட்டம் முதலியவற்றை குறிப்பது. பொழுதுபோக்கு, நிர்வாகத் திறமை,தந்தையின் தந்தை, புத்திக்கூர்மை, நீதி சாஸ்திரம், வேதங்கள் பற்றிய கல்வி, ஊக வணிகம் பொதுக் கூட்டப் பேச்சு, முதலியவற்றையும் பற்றி அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம்.
ஜாதக கட்டம் - ஆறாம் கட்டம் :
இது ஆறாம் வீடு ஆகும். இது ருண ரோக, சத்ரு ஸ்தானம் ஆகும். ருணம் என்றால் கடன், ரோக என்றால் நோய் சத்ரு என்றால் எதிரி. எனவே ஆறாம் கட்டம் மூலம் நோய், கடன், எதிரிகள் போன்றவற்றைப் பற்றி அறியலாம். தாய் மாமன், கவலைகள், தொழில், எதிரிகள் போன்றவற்றை பற்றியும், பொருள் இழப்பு, திருட்டு பயம், நீரினால் ஏற்படும் ஆபத்து, தீயவரின் நட்பு,, பிறரை நிந்தனை செய்தல், உயிர் ஆபத்து, சிறை வாசம், காயம் போன்றவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். குறிக்கும். மேலும் முக்கியமாக வேலை, வேலையில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றையும் இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம்.
ஜாதக கட்டம் – ஏழாம் கட்டம் :
இது ஏழாம் வீடு ஆகும். இந்த இடம் களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும். ஏழாம் கட்டமானது திருமணம், வியாபாரம், போன்றவற்றை குறிப்பன. திருமணக் காலம், வாழ்க்கைத்துணை, வெகுமதிகள், வியாபாரக் கூட்டாளிகள் கணவன் மனைவியின் போக சக்தி ஆகியவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம்.
ஜாதக கட்டம் – எட்டாம் கட்டம் :
இது எட்டாம் வீடு ஆகும். இந்த கட்டத்தை அஷ்டம ஸ்தானம் என்றும், ஆயுள் ஸ்தானம் என்றும் கூறுவார்கள். ஆயுள், அவமானம், கண்டம் போன்றவற்றை குறிக்கும். நீதிமன்ற வழக்குகள், காரிய தடங்கல்கள், மாங்கல்ய பலம், செலவுகளால் துன்பம், வீண் அலைச்சல் திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத பணம்,போன்றவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம்.
ஜாதக கட்டம் – ஒன்பதாம் கட்டம் :
இது ஒன்பதாம் வீடு. பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும். ஒன்பதாம் கட்டம் தந்தையை குறிக்கும். தருமம், திருப்பணி, குருவின் உபதேசம், சந்ததி விருத்தி, ஆலய தரிசனங்கள், அதிர்ஷ்டம் ஆகியவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம்.
ஜாதக கட்டம் - பத்தாம் கட்டம் :
இது பத்தாம் வீடு ஆகும். பத்தாம் கட்டம் கர்மஸ்தானம் ஆகும். கௌரவம், ஜீவனம், மரியாதை, கண்ணியம், புகழ், பதவி போன்றவற்றை குறிப்பது. ஒருவரின் தொழில் வலிமையை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். முன்னோருக்குச் செய்யும் கடமை, தெய்வ வழிபாடு, புகழ், மானம், வெளிநாட்டுச் செய்திகள், ஆட்சி, அதிகாரம், அதிகாரம் மிக்க பதிவிகள் போன்றவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம்.
ஜாதக கட்டம் – பதினொன்றாம் கட்டம் :
இது பதினோராம் வீடு ஆகும். இந்த கட்டம் லாப ஸ்தானம் என்றும் மூத்த சகோதர ஸ்தானம் என்றும் கூறப்படும்.பொதுத் தொண்டு புரிவோர், தனது திறமை மூலம் லானம் பெறுதல், வாகன வசதி, கௌரவம், சாஸ்திர அதிகாரம், வெளிநாட்டுப் பிரயாணம் ஆகியவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம்.
ஜாதக கட்டம் - பன்னிரண்டாம் கட்டம் :
இது பன்னிரண்டாம் வீடு ஆகும். இது விரய ஸ்தானம் என்றும் மோட்சஸ்தானம் என்றும் அழைக்கப்படும். இது அயன சயன போக ஸ்தானம் என்றும் கூறப்படும். விரயம், நஷ்டம், ஜெயில் தண்டனை, மறைமுக எதிரிகள் போன்றவற்றை குறிக்கும். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம்.
Leave a Reply