Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

துலாம் ராசி பலன் ஜனவரி 2020 | Thulam Rasi Palan January 2020 in Tamil

December 31, 2019 | Total Views : 1,428
Zoom In Zoom Out Print

பொதுப்பலன்கள் :  


துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் மிகவும் சாதகமான மற்றும் அனுகூலமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தின் ஆரம்பத்தில் உங்கள் மனதில் தெளிவு இருக்கும். உங்கள் எண்ணங்கள் சீரானதாக இருக்கும். நீங்கள் மிகவும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் ஜீவனத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும் பண வரவும் பணப் புழக்கமும் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். இந்த மாதம் நீங்கள் காதலில் சிக்காமல் கவனமாக இருங்கள். அதனால் உங்களுக்கு நீங்களே பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளும் அபாயம் உண்டு. எனவே காதல் விவகாரங்களில் அதிக கவனம் தேவை. தொழில் செய்யும் துலா ராசி அன்பர்கள் இந்த மாதம் தாங்கள் செய்யும் தொழிலின் மூலம் மூலம் நல்ல லாபங்களை அடைவார்கள். உடன் பிறந்த சகோதரர் மூலம் சில நஷ்டங்கள் ஏற்படும். திருமணமான தம்பதிகள் தங்களுக்குள் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முடியும். உங்கள் தாய் மற்றும் தநதையின் உடல் நிலையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். அவர்களிடம் பகைமை பாராட்டாதீர்கள். 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!


காதல் மற்றும் திருமண உறவுகள்  :

துலாம் ராசி காதலர்களுக்கு இந்த மாதம் சாதாரண பலன்களே கிட்டும். இருவருக்கும் இடையே உறவு முறை சாதாரணமாக இருக்கும். திருமணமான  தம்பதிகள் தங்களுக்குள் நல்லுறவு பராமரிப்பார்கள். அதன் காரணமாக உறவில் இனிய சூழல் இருக்கும். இந்த இனிய  சூழலை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டியதாயிருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்கள் உற்ற துணை தேடும் முயற்சியில் மும்மரமாய் இருந்தாலும் உங்களுக்கு பொருத்தமான வரன் அமைய இன்னும் சிறிது காலம் காத்திருக்க நேரும்.

நிதி : 


துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு சிறந்த பண வரவு இருக்கும். கையில் தாராளமாக பணம் புழங்கும். எனவே உங்கள் எதிர்கால தேவைகளுக்காக பணத்தை சேமித்து வைத்துக் கொள்ள இந்த மாதம் தக்க தருணமாக அமையும். இப்பொழுது நீங்கள் சேமிக்கும் பணம் உங்கள் நீண்ட காலத் தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே சிறந்த நிதி திட்டங்களைத் தேடி ஆராய்ந்து அவற்றில் முதலீடு செய்யலாம்.


வேலை :


வேலை செய்யும் துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் வேலையில் மாற்றங்கள் காணும் நேரமாக அமையும். நீங்கள் புதிய சூழலில் வேலை செய்வீர்கள். உங்களுக்கு இடமாற்றம் ஏற்படும். சில துலாம் ராசி அன்பர்களுக்கு வீட்டிற்கு அருகிலேயே வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்தப் புதிய சூழலில் நீங்கள் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். புதிய இடத்தில் உடன் பணிபுரிபவர்க்ளுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். மேலதிகாரிகள் மூலமாகவும் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். எனவே பணியிடத்தில் கவனமாகவும் அனுசரித்தும் நடந்து கொள்வது நல்லது. 


தொழில் :


தொழில் செய்யும் துலாம் ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் மூலம் சிறந்த பலன்களைக் காணலாம். ஏற்கனவே செய்யும் தொழில் மட்டுமன்றி புதிய தொழில்களையும் நீங்கள் இந்த மாதம் தொடங்கலாம். குறிப்பாக நிலம் சம்பந்தமான தொழில் தொடங்குவது சிறந்த லாபத்தை  அளிக்கும். தொழிலில் சிறப்பான பலன்கள் ஏற்படும் மற்றும் பண வரவு சிறப்பாக இருக்கும் என்ற போதிலும் சில சின்னச் சின்ன பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரும். உங்களைச் சுற்றியிருக்கும் எதிரிகள் செய்யும் சூழ்ச்சி காரணமாக உங்கள் தொழிலில் பாதிப்பு ஏற்படாமல் கவனமாகக் கையாளுங்கள். 


தொழில் வல்லுனர்களுக்கு :

துலாம் ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் வளர்ச்சி காண்பார்கள். நீங்கள் இந்த மாதம் மிகவும் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்களை ஆதரிக்கும் வகையில் உங்கள் மேலதிகாரிகளிடம் நட்புடன் பழகுங்கள். உங்களின் சிறந்த செயல்கள் மூலம் நீங்கள் உங்கள் விருப்பங்களை எளிதில் பூர்த்தி செய்து கொள்வீர்கள். 

ஆரோக்கியம் :

துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதாரண நிலை இருக்கும். உடலில் சக்தி குறைவதன் காரணமாக நீங்கள் மந்தமாக செயல் பட நேரலாம். எனவே உட்கொள்ளும் உணவில் கவனம் செலுத்துங்கள். சத்துள்ள உணவை உண்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் காத்துக் கொள்ளலாம். உடல் அசௌகரியம் சிறிய அளவில் இருக்கும் போதே மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள இயலும். 

மாணவர்கள் :

துலாம் ராசி மாணவர்கள் இந்த மாதம் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். கல்வியில் கடின முயற்சி தேவை. மனதை ஒருமுகப்படுத்தி படிப்பதன் மூலமும் கல்வியில் கூடுதல் நேரம் செலவழித்து படிப்பதன் மூலமும் நீங்கள் முன்னேற்றம் காண இயலும். தகவல் பரிமாற்றத்தின் போது கவனம் தேவை.


சுப நாட்கள்     : 1,10,11,14,15,27,28,29.
அசுப நாட்கள்     : 2,3,4,7,8,9,30

பரிகாரம்:

ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் மற்றும் மஹாலக்ஷ்மி பூஜை மற்றும் வழிபாடு செய்தல் மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

சுக்கிர பகவானுக்கு பூஜை மற்றும் ஹோமம் செய்து வழிபடுதல்.

மாற்று திறனாளிகள், முதியோர், ஏழை, எளியோர்க்கு உணவு, உடை அளித்து உதவுதல்.

banner

Leave a Reply

Submit Comment