Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

சிம்மம் ராசி பலன் ஜனவரி 2020 | Simam Rasi Palan January 2020 in Tamil

December 31, 2019 | Total Views : 794
Zoom In Zoom Out Print

பொது பலன்கள் :    


சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் சேர்ந்தே கிடைக்கும். நீங்கள் சிறப்பாக செயலாற்றி இந்த மாதம் உங்கள் திறன்களை வெளிப்படுத்துவீர்கள். உங்களின் சிறப்பான செயல் காரணமாக மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழில் செய்யும் சிம்ம ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் மூலம் பல லாபங்களை சந்திப்பார்கள். பல வழிகளில் இருந்தும் உங்களுக்கு இந்த மாதம் லாபாங்கள் வந்து சேரும். சிம்ம ராசி அன்பர்கள் இந்த மாதம் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். உடல் நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்கள் உடல் நிலையில் சில பிரச்சினைகள் தோன்றும் என்றாலும் அவைகள் படிப்படியாக குணமடையும். உங்கள்  மனைவியின் உடல் நலத்திலும் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் தாயாரின் உடல் நிலையில் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் குழநதைகள் சிறப்பாக படிப்பார்கள். கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இந்த மாதம் நீங்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

காதல் மற்றும் திருமணவாழ்க்கை :


சிம்ம ராசி காதாலர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக இருக்காது. உங்கள் காதல் உறவில் சில குழப்பங்களையும்  பிரச்சினைகளையும் நீங்கள் எதிர் கொள்ள நேரும். உங்கள் மனைவியின் உடல் நிலை காரணமாக நீங்கள் அவர் மீது அதிக அக்கறையும் கவனமும் செலுத்த வேண்டியிருக்கும்.  நீர் சம்பந்தமான நோய்கள் உங்கள் மனைவியை தாக்கும் என்பதால் நீங்கள் சற்று கவனமாக நடந்து கொண்டு அவரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தினால் பாதிப்புகளை குறைத்துக் கொள்ளலாம்.


நிதி : 


சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் நிதிநிலையைப் பொறுத்தவரை சிறிது தடைகளும் அதே சமயத்தில் சில நண்மையான பலன்களும் கிட்டும். நீங்கள் நீண்ட காலமாக காத்திருக்கும் பாக்கி தொகைகள் வந்து சேர்வதற்கு இந்த மாதமும் சாதகமான அமைப்பில் இல்லை. எனவே பழைய பாக்கிகள் வந்து சேர்வதில் சில தடைகளும் தாமதங்களும் காணப்படும். உங்கள் சேமிப்பு மூலம் கிடைக்க வேண்டிய லாபங்கள் வந்து சேரும். மாத இறுதியில் கடன் பிரச்சனைகள் மற்றும் கொடுக்கல் வாங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும்.

வேலை :   


வேலையில் இருக்கும் சிம்ம ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.  நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தி பணியைச் செய்வதன் மூலம் உங்கள் பணிகளை சிறப்பாக முடித்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளுக்கும் உங்கள் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படும். அதன் மூலம் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பினை நீங்கள் பெறுவீர்கள். 


தொழில் :


தொழில் துறையைச் சேர்ந்த சிம்ம ராசி அன்பர்கள் இந்த மாதம் துணிச்சலுடன் சில செயல்களை ஆற்றுவீர்கள். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் நீங்கள் அதனை எதிர்கொள்வீர்கள். உங்களின் இந்த புரட்சிகரமான செயல்கள் காரணமாக நீங்கள் சில நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் சிறந்த செயல்கள் மூலம் நீங்கள் உங்கள் இலக்குகளை எட்டிப் பிடிப்பீர்கள். 


தொழில் வல்லுனர்களுக்கு :


சிம்ம ராசியைச் சேர்ந்த தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக இருக்கும். பணிகள் அதிகமாக காணப்பட்ட சூழ்நிலையில் இருந்து மாற்றங்களைக் காண்பீர்கள். பணிகளில் சுமைகள் சிறிது சிறிதாக குறையத் தொடங்கும். அதனால் நீங்கள் சிறப்பாக செயலாற்ற இயலும். இதன் காரணமாக உங்கள் மதிப்பும் நற்பெயரும் சிறந்து விளங்கும். பல்வேறு பணிகளை நீங்கள் திறமையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கையும் இந்த மாதம் அதிகமாகவே காணப்படும். 


ஆரோக்கியம் :


சிம்ம ராசி அன்பர்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை இந்த மாதம் அவ்வளவு சிறப்பானதாக இருக்க வாய்ப்பில்லை. என்னவென்று இனம் புரியாத உணர்வு மனதில் எழும். அது உங்களை மந்தமாக செயல்பட வைக்கும். எனவே நீங்கள் உங்கள் சூழ்நிலைக்கேற்ப உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்ளுங்கள், உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் மற்றும் தியானப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். 


மாணவர்கள்:


சிம்ம ராசி மாணவர்கள் இந்த மாதம் கல்வியில் முன்பு இருந்த நிலையை விட சிறந்த நிலையில் விளங்குவார்கள். இதுநாள் வரை கல்வியில் காணப்பட்ட பின்னடைவுகள் நீங்கும். நீங்கள் உங்கள் தகுதி மற்றும் திறனை நிரூபிக்க சிறந்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாத இறுதியில் நீங்கள் உங்கள் அனைத்து முயற்சிகளுக்கான வெற்றிகளைக் காண்பீர்கள். உங்கள் உடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் சாதகமான பலன்களையும் அனுகூலங்களையும் பெறுவீர்கள். கல்வியில் மட்டுமன்றி விளையாட்டிலும் நீங்கள் கலந்து கொண்டு அதிலும் சிறந்த சாதனைகளைப் படைப்பீர்கள்.  


சுப நாட்கள் : 5,6,10,11,22,23,24


அசுப நாட்கள் : 1,2,3,4,7,8,9,12,13,25,26.  


பரிகாரம்:


சிவபெருமான் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு, பூஜை செய்வதும் மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுவதும் நல்லது.
சூரிய பகவானுக்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல்.
தாய், தந்தையரை வணங்கி ஆசீர்வாதம் பெறுதல், வயதில் மூத்தோருக்கு உதவுதல். சூரிய நமஸ்காரம் செய்தல்.

banner

Leave a Reply

Submit Comment