AstroVed Menu
AstroVed
search
search

மேஷம் ராசி பலன் ஜனவரி 2020 | Mesham Rasi Palan January 2020 in Tamil

dateDecember 31, 2019

பொதுபலன்கள் :    


மேஷ ராசி அன்பர்களே ! இந்த மாதம் உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் காணப்படும். எனவே நீங்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.  உறவைப் பொறுத்தவரை நீங்கள் கவனமுடன் பழக வேண்டும். குறிப்பாக இளைய சகோதரரிடம் நீங்கள் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். உறவு மட்டுமன்றி உடல் நிலையிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.   உடல் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிக்க நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தந்தையின் உடல் நலத்திலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பணிபுரிபவராக இருந்தால் இடம் மாற்றம் போன்ற சில பல பிரச்சினைகளை எதிர் கொள்ள நேரும்.  எனவே பணியில் கவனம் செலுத்தி செயலாற்ற வேண்டும். நீங்கள் சொந்தத் தொழில் செய்பவராக இருந்தால் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியாது.  குழந்தைகள் மீது நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும். அவர்கள் படிப்பில் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும்.  தாய் வழி உறவினர் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஆன்மீகப் பயணங்கள் அல்லது புனிதப் பயணங்கள் மேற்கொண்டு மகிழ்ச்சி காண்பீர்கள்.  

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!


காதல் மற்றும் உறவுமுறை :


மேஷ ராசி காதலர்களுக்கு இது மிகவும் இனிமையான மாதமாக இருக்கும் என்று கூற முடியாவிட்டாலும் உங்கள் உறவு முறை சுமாராக இருக்கும். திருமணம் ஆன தம்பதியர் நல்லிணக்க உறவு மேற்கொள்வார்கள். கணவனின் அன்பும் பாசமும் மனைவிக்கு கிடைக்கும். வாழ்க்கைத் துணை மூலம் நல்ல பலன்களை அடைவீர்கள். மேஷ ராசி அன்பர்கள் குடும்பப் பொறுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு அதனை வெற்றிகரமாக முடிப்பீர்கள். 


.பொருளாதாரம் :


பொருளாதாரத்தைப் பொறுத்த வரை மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சுமாரான பலன் தரும் மாதம் என்று தான் கூற வேண்டும்.  எனவே நீங்கள் பணத்தை செலவு செய்யும் போது சிக்கன நடவடிக்கை மேற்கொள்வது நல்லது. நீங்கள் எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கும்  பணம் கையில் கிடைக்க  ஏற்படும் தாமதம் உங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கும். மொத்தத்தில் பண விஷயத்தில் நீங்கள் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் 


வேலை :


வேலை செய்யும் மேஷ ராசி அன்பர்கள் இந்த மாதம் இட மாற்றம் போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் பணியிடத்தில் எதிரிகளும் அதிகரிப்பார்கள். பணியிடச் சூழலும் உங்களுக்கு திருப்தி தரும் வகையில் இருக்காது. நீங்கள் கடினமாக உழைத்தால் தான் நல்ல பலன்களை எதிர்பார்க்க இயலும். எனவே நீங்கள் விவேகத்துடனும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும். 


வியாபாரம் : 


சொந்தத் தொழில் செய்யும் மேஷ ராசி அன்பர்கள் இந்த மாதம் நன்மையும் தீமையும் கலந்த பலன்களைத் தான் பெறுவார்கள். தொழிலில் வெற்றி காண அதிக அளவில் அலைச்சல்களை மேற்கொள்ள நேரும். கடினமாக உழைத்தாலும் நமக்கு வெற்றி கிடைக்கவில்லையே என்று நீங்கள் வருந்துவதை விட, விடா முயற்சி செய்ய முன்றால் வெற்றி வாய்ப்பு உங்களைத் தேடி வரும். 


தொழில் வல்லுனர்கள் :

தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் சூழ்ந்து காணப்படும். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் எந்த முடிவுகளை எடுத்தாலும் அதில் சிறந்த பலன்களை காண்பது அரிதாகவே இருக்கும். எனவே இந்த மாதம் நீங்கள் எந்த புதிய முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. சவால்களை சந்திக்கும் இயல்பு உங்களுக்குள் இருந்தால், நீங்கள் புதிய முடிவுகளை எடுத்தால், அதில் நஷ்டம் ஏற்பட்டாலும் நீங்கள் அந்தத் தோல்வியை உங்கள் எதிர்கால வெற்றிக்கு படிக்கட்டாக அமைத்துக் கொள்ள அது உதவியாக இருக்கும். 

ஆரோக்கியம் :


ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மேஷ ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறிது கவனமுடனும் ஆரோக்கியத்தில் அக்கறையுடனும் செயல்பட வேண்டும்.வருமுன் காப்பது நல்லது என்பதால்  தியானம் மற்றும் உடற்பயிற்சி செய்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முயலுங்கள். நீங்கள் ஆங்கில மருத்துவத்தை நாடுவதைவிட ஆயுர்வேதம் அல்லது சித்த வைத்தியம் மேற்கொள்வது நல்லது.

மாணவர்கள் :


மேஷ ராசி மாணவர்கள் சில நாட்கள் சுறுசுறுப்புடனும் சில நாட்கள் மந்தமாகவும் செயல்படுவார்கள். இந்த ஏற்றத் தாழ்வு நிலை காரணமாக ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தியானம் அல்லது யோகம் மேற்கொள்வது நல்லது. நீங்கள் பொறுமையுடனும் தன்னம்பிக்கையுடனும்  நடந்து கொள்ள வேண்டும். கலவிக் கடவுளாம் சரஸ்வதி தேவியை வழிபடுங்கள். 


சுபநாட்கள் : 11,14,15,23,24,27,28,29.


அசுப நாட்கள் : 1,2,3,8,12,13,16,17,18,30,31.

பரிகாரம்:

ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு மற்றும் பூஜை செய்தல். ஆலயம் சென்று முருகப்பெருமானை வழிபடுதல்.
செவ்வாய் பகவானுக்கு பூஜை மற்றும் ஹோமம் செய்து வழிபடுதல்.
பெற்றோர் மற்றும் குருவின் ஆசீர்வாதம் பெற்று அவர்களுக்கு தேவையான உதவி செய்தல்.


banner

Leave a Reply