Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

தனுசு ராசி பலன் ஜனவரி 2020 | Dhanusu Rasi Palan January 2020 in Tamil

December 31, 2019 | Total Views : 1,325
Zoom In Zoom Out Print

பொதுபலன்கள்கள் :


தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செய்லப்டுவீர்கள். இறைவனின் அருளும் இந்த மாதம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். எனவே உங்கள் வாழ்க்கை இந்த மாதம் மிகவும் இனிதாக இருக்கும். உங்களுக்கு அனைத்து  விதத்திலும் இன்பங்கள் சேரும். தாய் தந்தை மற்றும் உற்றார் உறவினர் உங்களுக்கு ஆதரவாகவும் உங்களிடம் அன்பாகவும் இருப்பார்கள். தாயின் மூலம் நீங்கள் சில நன்மைகளைப் பெறுவீர்கள். தந்தை வழியிலும் ஆதாயம் காண்பீர்கள். என்றாலும் உங்கள் உடன் பிறந்த இளைய சகோதரர் வழியில் நீங்கள் சில சங்கடங்களை சந்திக்க நேரும். சில மன வருத்தங்களும் ஏற்படும். கணவன் மனைவிக்குள் சில பிரச்சினைகள் வந்து விலகும். குழந்தை நலனில் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும்.  பண வரவும் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். நீங்கள் பிறருக்கு கொடுத்த பணத்தை அதாவது பாக்கி பணத்தை இந்த மாதம் எளிதில் வசூல் செய்வீர்கள். தொழில் செய்யும் தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதம் அனுகூலமான பலன்களைக் காண்பார்கள். தொழில் மூலம் நீங்கள் லாபம் காண்பீர்கள். பூமி மற்றும் சொத்துக்களை நீங்கள் வாங்குவீர்கள்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

காதல் மற்றும் திருமண உறவுகள் :


தனுசு ராசி காதலர்களுக்கு இந்த மாதம் காதல் உறவு சிறப்பாக இருக்கும். காதலர்கள் ஜோடியாக உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும். எனவே உறவில் கவனமாக இருக்க வேண்டும். தனுசு ராசி அன்பர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு தோஷம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். 


நிதி : 


தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். கையில் பணம் புரளும். கையில் இருக்கும் பணத்தை நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். எனவே பணத்தை சேமிப்பது நல்லது. உங்கள் சேமிப்பை பன்மடங்காக ஆக்க இந்த மாதம் உகந்த நேரம் ஆகும். இந்த மாதம் பணம் கொடுக்கல் வாங்கல் மிகவும் சிறப்பாக இருக்கும். தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதம் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். 


வேலை : 


வேலை பார்க்கும் தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் வேலையில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள்.  நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் செயல் திறன் சிறப்பாக இருக்கும் என்றாலும் உங்கள் திறமையை சோதிக்கும் வகையில் உங்களுக்கு பணிகள் கொடுக்கப்படும். எனவே நீங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டியது அவசியம். இதனால் உங்கள் தகுதியும் திறமும் தரமும் மேம்படும். 


தொழில் :


தொழில் செய்யும் தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதம் தொழிலில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரும். தொழிலில் நீங்கள் யதார்த்தமான வகையில் முடிவு எடுக்க வேண்டும். தொழிலில் புதிய வாய்ப்புகள் எதிர்பார்த்த வகையில் இருக்காது. உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருப்பார்கள். 


தொழில் வல்லுநர் : 


தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதம் தொழில் சம்பந்தமான எந்தவொரு முடிவை எடுத்தாலும் ஆற அமர யோசித்து முடிவு எடுக்க வேண்டியது அவசியம். அவ்வாறு யோசித்து முடிவு எடுத்து நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை பெற்றுத் தரும். நீங்கள் புதிய தொழிலை ஆரம்பிக்கலாம். ஆனால் நீங்கள் கூட்டுத் தொழில் மேற்கொள்வதை தவிர்க்கவும். 

ஆரோக்கியம் :


ஆரோக்கியய்த்தைப் பொறுத்தவரை தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சாதாரணமாக இருக்கும்,  உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடலில் ஏற்படும் அசௌகரியம் சிறிய அளவில் இருக்கும் போதே நீங்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உடலில் சக்தி குறைபாடு காரணமாக உங்களிடம் மந்த நிலை காணப்படும். நீங்கள் உணவில் காய்கறிகள் மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதன் மூலம் உங்கள் தேகத்தில் ஆற்றலும் சுறுசுறுப்பும் காணப்படும். 


மாணவர்கள் :


தனுசு ராசி மாணவர்கள் இந்த மாதம் கல்வியில் உயர்ந்த நிலையைக் காண்பார்கள். இந்த மாதம் உங்களுக்கு சாதகமான மாதமாக இருப்பதால் நீங்கள் உங்கள் பாடங்களை அப்போதைக்கப்போதே படிக்க வேண்டும். அதன் மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். சிறந்த முறையில் படித்து பள்ளி அல்லது கல்லூரியில் முதல் மாணவராகத் தேர்ச்சி அடைவீர்கள்.  சரியான முடிவுகளை எடுக்கும் திறன் உங்களிடம் இருக்கும். 


சுப தினங்கள் :  6,7,8,16,17,18,19


அசுப தினங்கள் : 9,10,14,15,20,21,22.


பரிகாரம்:


ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் திருச்செந்தூர் முருகப்பெருமானை பூஜை மற்றும் வழிபாடு  செய்வதும் மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுவதும் நன்மை தரும். 
குருபகவானுக்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல்.
மாணவர்களின் கல்விக்கு உதவுதல், மற்றவர்களுக்கு கல்வி தானம் செய்தல். ஏழை, எளியோருக்கு உதவுதல்.
 

banner

Leave a Reply

Submit Comment