AstroVed Menu
AstroVed
search
search
x

Rishabam Rasi Palan January 2020 in Tamil

dateDecember 31, 2019

பொதுபலன்கள் :

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு நன்மையையும் தீமையும் கலந்த பலன்கள் காணப்படும்.  பொருளாதார நிலையைப் பொறுத்த வரை இந்த மாதம்  பல சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும் அதனை சமாளித்து முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுக்கு வர வேண்டிய பணமோ அல்லது லாபமோ சிறிது கால தாமதத்திற்குப் பிறகு வந்து சேரும்.  தாயார் வழி ஆதரவு உங்களுக்கு கிட்டும். நீங்கள் தேவையில்லாமல் பிறர் விஷயங்களில் தலையிடுவதன் மூலம் உங்களுக்கு பிரச்சினையை வரவழைத்துக் கொள்வீர்கள். எனவே அதனை தவிர்ப்பது நல்லது.  இந்த மாதம் விபத்து பற்றிய ஆபத்து இருப்பதன் காரணமாக  நீங்கள் வெளியில் செல்லும் போது கவனமுடன் இருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்களை இந்த மாதம் நீங்கள் தவிர்த்து விடுங்கள். இதற்கு முன்பு இருந்த உடல் அசௌகரியங்கள் இப்பொழுது சீராகி விடும். உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் மேம்படும். 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

காதல் மற்றும் உறவு முறை :

காதல் உறவோ திருமண உறவோ இந்த மாதம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய மாதம் ஆகும். கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமணமான தம்பதிகள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். குடும்ப விவகாரங்களை வெளியில் கூறாதீர்கள். பிறரை உங்கள் குடும்ப விவகாரங்களில் தலையிடவும் அனுமதிக்காதீர்கள். வாழ்க்கைத் துணையின் பெற்றோர் மூலமாக பிரச்சினை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. 

பொருளாதாரம் : 

ரிஷப ராசி அன்பர்களுக்கு பொருளாதார நிலையைப் பொறுத்த வரை மந்தமான நிலையே காணப்படும். ஏற்ற இறக்கம், மற்றும் சுப அசுப பலன்கள்  கலந்து காணப்படும். செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நீங்கள் கடன்களை தீர்க்க இயலும்.

வேலை :

பணி புரியும் ரிஷப ராசி அன்பர்கள் இந்த மாதம் வேலையில் முன்னேற்றம் காண்பார்கள்.  சில சமயங்களில் மந்த நிலை இருந்தாலும் அதனை சமாளித்து நீங்கள் பணியில் வெற்றி காண்பீர்கள். நீங்கள் தனித்து நின்று செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள முயற்சி மேற்கொள்ளுங்கள். 

தொழில் :

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம். குழப்பமான மன நிலை காரணமாக உங்களால் சுயமாக எந்தவொரு முடிவையும் இந்த மாதம் எடுக்க முடியாத நிலை இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவையும் இந்த மாதம் நீங்கள் எதிர்பார்க்க இயலாது. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி காண நீங்கள் பொறுமை காக்க வேண்டிய மாதம் இது. 

தொழில் வல்லுநர் : 

ரிஷப ராசி அன்பர்கள் இந்த மாதம் தொழில் சம்பந்தமான எந்தவொரு முடிவையும் எடுப்பதற்குமுன் ஒரு முறைக்கு இரு முறை நன்கு யோசித்து செயல்பட வேண்டும். நீங்கள் தொழில் சம்பந்தமாக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் தேடி வரும். புதிய தொழில் நீங்கள் தொடங்கலாம். என்றாலும் நீங்கள் கூட்டு வர்த்தகத்தை மேற்கொவதை தவிர்க்க வேண்டும்.  

ஆரோக்கியம் :

ரிஷப ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறந்த ஆரோக்கியத்தை அனுபவிப்பீர்கள். சிறந்த ஆரோக்கியம் காரணமாக நீங்கள் சுறுசுறுப்புடனும் ஆற்றலுடனும் நீங்கள் செயலப்டுவீர்கள். என்றாலும் உங்கள் ஆரோக்கியம் குறித்த அலட்சியப் போக்கு கூடாது. தூக்கத்திற்கும் ஓய்விற்கும் முக்கியத்துவம் அளியுங்கள். உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள். 

மாணவர்கள் :

ரிஷப ராசி மாணவர்களே! இந்த மாதம் உங்களுக்கு கல்வியில் சாதாரண பலன்கள் கிடைக்கும் என்றாலும் நீங்கள் சுறுசுறுப்பாக ஊக்கத்துடன் பாடங்களை கற்றுக் கொள்வீர்கள். அதற்கான திறன் இந்த மாதம் உங்களிடம் அதிகமாக காணப்படும். இந்த திறன் காரணமாக நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.


சுப தினங்கள் :  1,2,3,4,7,8,9,10,11,16,17,25,27
அசுப தினங்கள் : 5,6,18,22,23,24


பரிகாரம்:

ஸ்ரீ நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு மற்றும் பூஜை செய்தல். ஆலயம் சென்று வழிபடுதல்.
சுக்கிர பகவானுக்கு பூஜை மற்றும் ஹோமம் செய்து வழிபடுதல்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை, எளியோர்க்கு உணவு அளித்தல் மற்றும் தேவையான உதவி செய்தல்.


banner

Leave a Reply