பொதுப்பலன்கள் :
மீன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் நல்ல மற்றும் தீய பலன்கள் இரண்டும் கலந்து காணப்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தன வரவு தாராளமாக இருக்கும். திடீர் பண வரவு உங்களை திக்கு முக்காட வைக்கும். சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் மாதமாக இந்த மாதம் அமையும். பல வகைகளில் உங்களுக்கு லாபம் வரும் என்றாலும் அதில் சில தடைகளும் தாமதங்களும் ஏற்படும். தொழில் துறையைப் பொறுத்தவரை இந்த மாதம் மீன ராசி அன்பர்கள் தங்கள் துறையில் சிறப்புற்று விளங்குவார்கள். நீங்கள் பல்வேறு தொழில்களை செய்வீர்கள். பல்வேறு பணிகள் ஒரே சமயத்தில் செய்ய வேண்டிய சூழல் வரலாம். அந்த நேரத்தில் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டியிருக்கும். திருமணமான தம்பதியர் வாழ்வில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். என்றாலும் பிரச்சினைகள் தோன்றிய வேகத்திலேயே மறையவும் செய்யும். மீன ராசி அன்பர்கள் தங்கள் சகோதரர் வழியில் சில விரயங்களை அல்லது நஷ்டங்களை சந்திக்க நேரும். உங்கள் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். ஒரு சில மீன ராசி அன்பர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
காதல் மற்றும் திருமண வாழ்க்கை :
ஒரு சில மீன ராசி காதலர்களின் காதல் உறவு திருமண உறவாக மாறும் வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையிடம் உங்கள் எண்ணத்தை புரிய வைக்க நீங்கள் அவருக்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். திருமணமான தம்பதிகள் குதூகலப் பயணங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் மூலம் மகிழ்ச்சியும் திருப்தியும் காண்பீர்கள்.
நிதி :
மீன ராசி அன்பர்களின் பொருளாதார நிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பணப் புழக்கமும் பணப் பரிவர்த்தனைகளும் சிறந்த முறையில் இருக்கும். கையில் பணம் புரளும். நீங்கள் நீண்ட கால முதலீடுகளில் பணத்தை சேமிப்பீர்கள். இந்த மாதம் நீங்கள் பொருளாதார நிலையில் படிப்படியான முன்னேற்றம் காண்பீர்கள்.
வேலை :
வேலை செய்யும் மீன ராசி அன்பர்கள் பணியைப் பொறுத்தவரை சில ஏமாற்றமான சூழ்நிலையை எதிர் கொள்ள நேரும். நீங்கள் எதிர்பார்க்கும் வகையிலோ அல்லது விரும்பும் வகையிலோ உங்கள் முன்னேற்றம் இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் அதீத தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். அதுவே சில சமயங்களில் உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தித் தரும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நீங்கள் சுமூகமாக நடந்து கொள்வதன் மூலம் நீங்கள் நன்மை பெறலாம்.
தொழில் :
தொழில் செய்யும் மீன ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். என்றாலும் கூட்டுத் தொழிலை இந்த மாதம் தவிர்ப்பது நல்லது. தொழிலைப் பொறுத்த எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு யோசித்து முடிவுகளை எடுப்பது நல்லது. தொழிலில் நீங்கள் யோசித்து எடுக்கும் முடிவுகளும் முயற்சிகளும் உங்களுக்கு சிறந்த லாபங்களை பெற்றுத் தரும். தொழில் நிமித்தமான பயணங்கள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தருவதுடன் வெற்றியும் நன்மையையும் உங்களை நாடி வரும்.
தொழில் வல்லுநர் :
தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் தொழிலில் நீங்கள் முன்னேற்றமும் பதவி உயர்வும் காண்பீர்கள். நீங்கள் சிறப்பாக பணியாற்றுவதன் மூலம் பல விதமான நன்மைகளைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி காண்பார்கள். உங்கள் தனிப்பட்ட திறமைகள் பளிச்சிடும் நேரமாக இந்த மாதம் அமையும்.
ஆரோக்கியம் :
மீன ராசி அன்பர்கள் இந்த மாதம் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடல் அசௌகரியம் காணப்பட்டால் சுய வைத்தியம் பார்க்காமல் தகுந்த மருத்துவரை அணுகி அவரது ஆலோசனைகளைப் பெற்று அதனைப் பின்பற்றி நடந்து கொள்வது நல்லது. உண்ணும் உணவில் கவனம் கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள இயலும்.
மாணவர்களுக்கு :
இந்த மாதம் மீன ராசி மாணவர்கள் நேர்மறை எண்ணங்களைக் கொண்டு செயல்பட வேண்டிய காலக் கட்டம் ஆகும். நட்பு வட்டத்திலும் குடும்பத்திலும் நேர்மறையான அணுகுமுறை உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தாத வகையில் காக்கும். நீங்கள் கவனம் செலுத்தி படித்தால் உங்கள் கல்வியில், படிப்பில் ஒரு சீரான போக்கை நீங்கள் காணலாம். உடன் படிக்கும் மாணவர்களிடம் நல்லுறவினை பராமரிக்க வேண்டும்.
சுப தினங்கள் : 14,15,20,21,22,25,26,27
அசுப தினங்கள் : 1,2,3,16,17,18,19,28,29,30.
பரிகாரம்:
திருசெந்தூர் முருகப்பெருமான் மற்றும் குருபகவான் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
குருபகவானுக்கு பூஜை மற்றும் ஹோமம் செய்து வழிபடுதல்.
ஏழை மாணவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்தல். நாய் மற்றும் மீன்களுக்கு உணவு அளித்தல்.

Leave a Reply