Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

விருச்சிகம் ராசி பலன் ஜனவரி 2021 | January Matha Viruchigam Rasi Palan 2021

December 4, 2020 | Total Views : 670
Zoom In Zoom Out Print

விருச்சிகம் ஜனவரி மாத 2021 ராசி பலன்:

பொதுப் பலன்கள் : மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கிணங்க விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் வீடு மற்றும் சமூக உறவுகளில் பல சிறந்த மாற்றங்களை சந்திப்பார்கள். உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருப்பது உங்களுக்கு நன்மை தரும் அமைப்பு ஆகும். நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பழகும் முறை மேம்படும். நீங்கள் நிலம், வீடு அல்லது சொத்து வண்டி, வாகனம், மின்னணு சாதனங்கள்  வாங்குவீர்கள். வீட்டு மராமத்து வேலைகளை மேற்கொள்வீர்கள். சூரியன் மற்றும் குரு சேர்க்கை உங்களுக்கு தைரியத்தை அளிக்கும். உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருக்கும் செவ்வாய் காரணமாக உங்கள் நலம் விரும்பும் மனிதர்களை சந்திப்பீர்கள். சுக்கிரன் காரணமாக உங்கள் குடும்பத்திற்காக சொத்துக்களை வாங்குவீர்கள். விருச்சிக ராசி மாத பலன் 2021 குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்

வேலை: பணி புரியும் விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். பணியிடத்தில் நீங்கள் அனைவருடனும் கலகலப்பாகப் பழகுவீர்கள். நீங்கள் பணி புரியும் விதம் உங்கள்  மேலதிகாரிகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். சக பணியாளர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்க வருவார்கள். உங்கள் திறமையை மதிப்பவர்களிடம் மட்டும் பழகுங்கள். மற்றவர்க்ளிடம்  சிறிது விலகியே இருங்கள். இல்லாவிடில் ஒன்று நீங்கள் அவர்களிடம் கோபப்படலாம் அல்லது அவர்களுக்கு உங்கள் செயல் ஏமாற்றத்தை அளிக்கலாம். எனவே கவனமாகச் செயல்படவும். 

காதல் உறவு : திருமணமான தம்பதிகளுக்கு இல்லறம் நல்லறமாக இருக்கும். பரஸ்பர  புரிதல்  மற்றும் ஒற்றுமையை நீங்கள் தக்க வைத்துக்  கொள்வீர்கள் லௌகீக வாழ்வில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் பொன்னான நேரத்தை கழிப்பீர்கள். அவருடன் வெளியே சென்று வர விரும்புவீர்கள். உங்கள் அன்பை பரிசு மழையாகப் பொழிவதன் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். பரிசு வழங்க நீங்கள் அதிகம் செலவழிக்கத் தேவை இல்லை. உங்கள் அன்பான வார்த்தை மற்றும் அன்புப் பரிமாற்றம் ஒன்றே போதுமானதாக இருக்கும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : அங்காரக பூஜை

நிதிநிலை:  உங்கள் நிதிநிலை இந்த மாதம் சரளமான  பணப்புழக்கத்துடன் காணப்படும். உங்கள் வருமானமும்  அதிகரிக்கும்.  நீங்கள் தன்னம்பிக்கையுடனும் தைரியமாகவும் செயலாற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இணைந்து தொழில் செய்பவர்களுக்கு சிறிது பதட்டமான நிலை காணப்படும். என்றாலும் தொழில் மூலம் எதிர் காலத்தில் நீங்கள் நற்பலன்களை அனுபவிக்க இயலும். கூட்டுத் தொழில் செய்யும் விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம்  பரஸ்பரம் புரிதலுடன்  செயல்படுவார்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட :குபேர பூஜை

ஆரோக்கியம் : வருமுன் காப்பது நல்லது என்பதற்கிணங்க இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம்  சிறப்பாக இருக்கும் என்றாலும் நீங்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது சிறப்பானது. உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள்.  இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பதன் மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். அன்பே சிறந்த மருந்து என்பதால்  அன்பை பரிமாறிக் கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள இயலும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை 

தொழில் : விருச்சிக  ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும்.  தொழில் சம்பந்தமான பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். என்றாலும் தேவைப்பட்டால் மட்டுமே நீங்கள் பயணங்களை மேற்கொள்வது நல்லது. ஏனெனில் பயணம் மூலம்  பணச் செலவும் ஆரோக்கியக் குறைபாடும் ஏற்படும். குடும்பத்துடன் சேர்ந்து நீங்கள் இருக்க விரும்பும் காரணத்தால் நீங்கள் அதிக பயணங்களை மேற்கொள்ள விரும்ப மாட்டீர்கள். 

தொழில் வல்லுனர்கள் : விருச்சிக ராசி அன்பர்கள் இயல்பிலேயே திறமை மிக்கவர்கள்.  தங்கள் திறமை மூலம் வெற்றி காண்பவர்கள். தொழில் இடத்தில் உங்கள் வெற்றியின் பிறர் அறிந்து கொள்ள விரும்புவார்கள். இதன் மூலம் உடன் பணியாற்றுபவர்களுடன்  உங்கள் நெருக்கம் அதிகரிக்கும். என்றாலும் நீங்கள் ஒரு எல்லை வகுத்துப் பழக வேண்டும். இல்லாவிடில் அது எதிர் காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் அதிக நெருக்கத்தை தவிர்ப்பது நல்லது.

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சூரியன் பூஜை

 மாணவர்கள் : விருச்சிக ராசி மாணவர்கள் இந்த மாதம் மிகவும் அனுகூலமான  பலன்களைப் பெறுவார்கள். கல்வி தொடர்பான சில பயணங்களை மேற்கொள்ள  நேரலாம். இதனால் படிப்பில் கவனச் சிதறல் ஏற்படும்.  வீட்டில் நிலவும் அமைதியற்ற சூழல் நீங்கள் சிறப்பாக செயலாற்றத் தடையாக இருக்கும். வீட்டில் அல்லது பள்ளியில் சூடான வாக்கு வாதங்களை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 

கல்வியில் மேன்மை பெற : அங்காரக பூஜை 

சுப நாட்கள் : 7, 9, 10, 11, 12, 13 15, 16, 17, 18, 19, 20, 23, 26, 27.
அசுப நாட்கள் :  1,2,3, 4, 5, 6, 8, 14, 21, 22, 24, 25, 28, 29, 30, 31

banner

Leave a Reply

Submit Comment