Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

துலாம் ராசி பலன் ஜனவரி 2021 | January Matha Thulam Rasi Palan 2021

December 4, 2020 | Total Views : 687
Zoom In Zoom Out Print

துலாம்  ஜனவரி மாத 2021 ராசி பலன்:

பொதுப் பலன்கள்: துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் தன்னம்பிக்கை பெருகும். ஊக்கமும் உற்சாகமும் அதிகமாக இருக்கும். நீங்கள் பல புதிய வாய்ப்புகளை சந்திப்பீர்கள்.  தொழிலில் முன்னேற்றம் காண தொழிலை விரிவாக்க விரும்புவீர்கள் சமூகத்தில் பிறருடன் கலந்து உறவாட முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் நடவடிக்கைகளால் பிறரைக் கவரும் வண்ணம் உங்களை  மாற்றிக் கொள்வீர்கள். உடன் பிறப்புகளுடன் அன்பாகப் பழகுவீர்கள். துலாம் ராசி மாத பலன் 2021 குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்

வேலை : இந்த மாதம் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள் என்றாலும் நீங்கள் கவனமாகவும் இருக்க வேண்டும்.  கூட இருந்தே குழி பறிப்பது என்பது போல உங்கள் உடன் பணி செய்பவர்களில் சிலரே உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். உங்கள் முன்னேற்றத்தில்   சில தடைகளை ஏற்படுத்துவார்கள். எனவே அவர்களிடம் இருந்து விலகி இருங்கள் கவனமாகச் செயல்படுங்கள். மேலதிகாரிகளுடன் இதவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். அவர்கள் நேர்மறை எண்ணத்துடன் செயல்படுவார்கள். என்றாலும் நீங்கள் உங்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டும். 

காதல் உறவு : நீங்கள் காதலுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து நேரத்தை கழிப்பதைத் தவிர்த்து வாழ்வின் பிற அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  நீங்கள் திருமணமானவர் என்றால் உங்கள் வாழ்க்கைத் துணையைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். அவர்களிடம் அன்புடனும் அனுசரணையுடனும் நடந்து கொள்ளுங்கள். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : அங்காரக பூஜை

நிதிநிலை : துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் நிதிநிலை சாதகமாகவே இருக்கும்.   நீங்கள் மீண்டும் பழைய தொழிலை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருவாய் ஈட்டுவீர்கள். குழந்தைகளின் நலனுக்காகவும் அவர்களின் படிப்பு மற்றும்பொழுதுபோக்கு குறித்த செலவுகளை இந்த மாதம் நீங்கள் சந்திக்க நேரும். அவர்களை திருப்திப்படுத்த நீங்கள் பட்ஜெட் அமைத்து செலவு  செய்து சேமிப்புகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும். 

உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை 

ஆரோக்கியம் : உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சீராக இருக்கும் என்றாலும் நீங்கள்  காய்ச்சல் அல்லது சளி போன்ற சிறு உபாதைகளை சந்திக்க நேரும். சிறிய அளவிலான  உடல் உபாதைகள் காணப்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. உணவு வகைகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் வகை உணவுகளை நீங்கள் தவிர்ப்பது நல்லது.  உங்கள் தாயாரின் உடல் நலத்திலும் நீங்கள் அக்கறை காட்ட வேண்டியிருக்கும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட “  சனி பூஜை 

தொழில் : தொழில் செய்யும் துலாம் ராசி அன்பர்கள் இந்த மாதம் தொழிலில் தங்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கக் காண்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களும் இந்த மாதம் தங்கள் தொழில் சிறப்ப்பாக இருக்கக் காண்பார்கள்.  கூட்டாளிகளுடன் சேர்ந்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.  தொழிலில் பல புதிய வாய்புகள் உங்களை நாடி வரும்.

தொழில் வல்லுனர்கள் : நீங்கள் தொழிலில் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். நீங்கள்  கலை நயத்துடனும், திறமையுடனும் தொழிலை மேற்கொள்வீர்கள். உங்கள் படைப்பாற்றல் வெளிப்படும் வகையில் நீங்கள் செயல்படுவீர்கள். மேலதிகாரிகள் உங்கள் திறமையை எடுத்துக்காட்டாகக் கொள்வார்கள். உங்கள் சக பணியாளார்கள் உங்கள் அறிவாற்றலைக் கண்டு  உங்களிடம் சில ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடந்து கொள்வார்கள். பணியிடத்தில் நீங்கள் பிறரை வழி நடத்துவீர்கள். 
 
உங்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சுக்கிரன் பூஜை

மாணவர்கள் : துலாம் ராசி மாணவர்கள் இந்த மாதம் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.  சுறுசுறுப்பாகச் செயல்படுவார்கள். மாணவர்கள் மனதில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை நீங்கும். கவனக் குறைவு மற்றும் கவனச் சிதறல் போன்ற குறைகள் யாவும் இந்த மாதம் நீங்கும்.  பள்ளி, மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும்.

கல்வியில் மேன்மை காண : அங்காரக பூஜை

சுப நாட்கள்:  1,2,3, 4, 5, 9, 10, 11, 12, 13, 20, 23, 26, 27 
அசுப நாட்கள் :  6,7, 8, 14, 21, 22, 24, 2515, 16, 17, 18, 19, 28, 29, 30, 31

banner

Leave a Reply

Submit Comment