Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

தனுசு ராசி பலன் ஜனவரி 2021 | January Matha Dhanusu Rasi Palan 2021

December 4, 2020 | Total Views : 605
Zoom In Zoom Out Print

தனுசு ராசி ஜனவரி மாத 2021 ராசி பலன்:

பொதுப் பலன்கள்:  தனுசு  ராசி அன்பர்களே! இந்த வருட ஆரம்பம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான பலன்களுடன் தொடங்குகின்றது. உங்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.  கல்வி, குடும்பம், காதல் வாழ்க்கை, பொருளாதாரம் என அனைத்து அம்சங்களிலும் அதிர்ஷ்டம் உங்களை நாடி  வரும். உங்கள் தோற்றம் பளிச்சிடும்.  மிடுக்கு கூடும். உங்கள் நடவடிக்கைகளில் சாதகமான மாற்றம் இருக்கும்.  உங்கள் நடை, உடை, பாவனை என அனைத்தும் சிறந்து விளங்கும். மனதில் தெளிவு பிறக்கும். நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். வீட்டில் உள்ள பெரியோர்கள், ஆச்சாரியர்கள் மற்றும் மத குருமார்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடந்து கொள்வீர்கள். உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக  அன்பர்களுடன் கலந்து உறவாடுவீர்கள். அவர்களின் வழிகாட்டுதல் உங்கள் வளர்ச்சிக்கு உதவும். தனுசு ராசி மாத பலன் 2021 குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.தனுசு ராசி மாத பலன் 2021 குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

வேலை: இந்த மாதம் நீங்கள் எறும்பு போல சுறுசுறுப்பாகவும் கடினமாகவும் உழைப்பீர்கள்.  முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கிணங்க நீங்கள் உங்கள் முயற்சிக்கேற்ற பலன்களையும் பெறுவீர்கள்.  மேலதிகாரிகளின் பாராட்டு உங்களை ஊக்குவிக்கும். பணிக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தரும் உங்கள் முயற்சி. உங்களுக்கு பதவி உயர்வும். ஊதிய உயர்வும் மேலதிகாரிகளால் வழங்கப்படும். உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் உங்கள செயல் பணியிடத்தில் வெற்றியைப் பெற்றுத் தரும். 

காதல் உறவு : இந்த மாதம் தனுசு ராசி இளம் வயதினருக்கு சாதகமான மாதம் என்று கூறலாம்.   பணியிடத்தில் அல்லது நட்பு வட்டாரத்தில் உங்களுக்கு அறிமுகமான நபர்களின்  தொடர்பு மூலம் காதல் மலரும்.  உங்கள் தோற்றத்தில் பொலிவு கூடும்.  உங்கள் தோற்றத்தில் வனப்பு அதிகரிக்கும். தோற்றம் மட்டுமின்றி  உங்கள் பேச்சில் அன்பும், காதல் ரசமும் சொட்டும். நீங்கள் பக்குவமாகப் பேசுவீர்கள். இது உங்களுக்கு சரியான துணையை நீங்கள்  அமைத்துக் கொள்ள உதவும். இந்த மாதம் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

திருமண வாழ்வில் நல்லிணக்கம காண ; சுக்கிரன் பூஜை 

நிதிநிலை: செலவைக் குறைப்பதும் ஒருவகை சேமிப்பு என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொண்டு நடந்து கொள்ளும் மாதமாக இந்த மாதம் இருக்கும். பண விஷயங்களில் உங்கள் கட்டுப்பாடு உங்களுக்குத் துணை நிற்கும். நல்ல பண வரவும் உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும். வண்டி மற்றும் வாகனங்களை நன்கு பராமரிப்பீர்கள். குழந்தைகளுக்கு தேவைப்படும் பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பரிசுகளை வாங்கி அளிப்பீர்கள். உங்கள் செலவுகளைப் பற்றி உங்கள்  வாழ்க்கைத்துணை தெரிந்து கொள்ள விரும்புவார். உங்கள் நேர்மை உறவில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும். உங்கள் குடும்பத்தாரை நீங்கள் பரிசு மழையில் நனைய வைப்பீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரக பூஜை

ஆரோக்கியம் : சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சிறிய உடல் உபாதை காண நேரிட்டாலும் நீங்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது சிறந்தது. உங்கள் ஆரோக்கியத்திற்கேற்ற உணவை உட்கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைப் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : ஸ்ரீ விஷ்ணு பூஜை

தொழில் : தொழில் செய்யும் தனுசு ராசி  அன்பர்கள் இந்த மாதம்  சாதகமான பலன்களைக் காண்பார்கள். குறிப்பாக  இந்த மாதம் உங்களுக்குக் கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். உங்கள் வீட்டுப் பெரியோர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவுவார்கள். எனவே அவர்களின் ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பதன் மூலம் நீங்கள் தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். தொழில் சம்பந்தமான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது ஆவணங்களை ஒன்றிற்கு இரண்டு முறை சரிபார்த்து கையொப்பமிடுவதன் மூலம் எதிர் காலத்தில் பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

தொழில் வல்லுனர்கள் : தனுசு ராசி தொழில் வல்லுனர்களின் திறமை பளிச்சிடும் நேரமாக இந்த மாதம் அமையும். நீங்கள் திறமையை வெளிப்படுத்தியும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றுவீர்கள். உங்கள் செயல் திறன் பிறர் வியக்கும் வகையில் இருக்கும். நீங்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள். தொழில் புரியும் இடத்தில் நீங்கள் தலைமை ஏற்று நடத்திச் செல்வீர்கள். பணியிடத்தில் அனைவரும் உங்களை விரும்புவார்கள்.

வேலை மற்றும் தொழிலில் மேன்மை பெற : சூரியன் பூஜை’

மாணவர்கள் : தனுசு ராசி மாணவர்கள் இந்த மாதம் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவர்கள் கல்வியில்  சிறந்த முயற்சிகளை மேற்கொள்வார்கள். உங்கள் மீது ஆசிரியப் பெருமக்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படும். கல்வியில் உங்கள் கவனம் சிறந்து விளங்கும். உங்கள் ஞாபக சக்தி கூடும். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியரையும் பெற்றோரையும் மதித்து நடந்து கொள்வீர்கள். உங்களின் இந்தப் பணிவான குணம்  உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். இதன் மூலம் நீங்கள் எளிதில் வெற்றி பெறும் பாக்கியத்தை அடைவீர்கள். தியானம் மேற்கொள்வது, ஆலயம் சென்று இறைவனை பிரார்த்திப்பதன்  மூலம் நீங்கள் மேலும் சிறந்த பலன்களை அடையலாம்.

கல்வியில் மேன்மை பெற : அங்காரக பூஜை 

சுப நாட்கள் :   5, 6, 7, 8, 17, 18, 19, 20, 22, 23 24, 25, 26, 27, 28, 29
அசுப நாட்கள் : 1,2,3, 4, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 21, 30, 31

banner

Leave a Reply

Submit Comment