Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

கன்னி ராசி பலன் ஜனவரி 2021 | January Matha Kanni Rasi Palan 2021

December 3, 2020 | Total Views : 540
Zoom In Zoom Out Print

கன்னி ஜனவரி மாத 2021 ராசி பலன்:

பொதுப் பலன்கள்: கன்னி ராசி அன்பர்களே! அன்பால் ஆகாதது எதுவும் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து நடந்து கொள்ளும் மாதம்  இந்த மாதம்.  நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் அன்பு மற்றும் பாசத்தைப் பகிர்ந்து கொள்வீர்கள். அவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.  உங்கள் வேலை, பொருளாதாரம், நிதிநிலை இவற்றை விட உங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். குழந்தைகள் தொடர்பான சில மாற்றங்களை ஏற்படுத்த நீங்கள் முனைவீர்கள். நிலையற்ற நிலை கொண்டது பணம், அதை  எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் அன்பு பாசம் காட்ட வேண்டிய தருணத்தில் காட்ட வில்லை என்றால், அதிலும் குறிப்பாக வாழ்க்கைத் துணை குழந்தை இவர்களிடம் ,  உறவை சரி செய்ய இயலாது என்பதை உணர்ந்து நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க எண்ணுவீர்கள்.  அவர்களிடம் அன்பை வெளிக்காட்டுவீர்கள்.கன்னி ராசி மாத பலன் 2021 குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

வேலை : வேலை அல்லது பணி புரியும் கன்னி ராசி அன்பர்களின் பணியிடச் சூழல் இந்த மாதம் அந்த அளவிற்கு அனுகூலமாக இருக்காது. இது உங்கள் தன்னம்பிக்கையை குறைக்கும். உங்கள் பணிக்கு உரிய அங்கீகாரம் மேலதிகாரிகளிடம் இருந்து கிடைக்கவில்லை என்று நினைப்பீர்கள்.   மேலதிகாரிகளுடன் சில மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் அனுகூலம் என்பது குதிரைக் கொம்பாக இருக்கும். உள்நாட்டுப் பயணம் ஓரளவு அனுகூலமாக இருக்கும்.  இந்த மாதம் நீங்கள் வீட்டில் இருந்தே பணி புரிய விருப்பம் கொள்வீர்கள். 

காதல் உறவு: இளம் வயது கன்னி ராசி அன்பர்களின் காதல் உறவு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். இதுவரை உங்கள் பெற்றோருக்கு தெரியாமல் இருந்த உங்கள்  காதல் உறவு இப்பொழுது வெளிச்சத்திற்கு வரும்.   காதலில் நம்பிக்கை முக்கியம் என்பதும், மற்றவர்களின் தவறுகளை மன்னிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் உணர்வீர்கள்.  மன்னிக்காத இயல்பும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளாமையும் உறவை முறிக்கும். திருமணமானவராக இருந்தால் உங்கள் வாழ்க்கைத் துணையின் குடும்பத்தாரிடம் சில கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் பெருக : அங்காரக பூஜை

நிதிநிலை :நிதி நிலையைப் பொறுத்தவரை கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த மாதம், குறிப்பாக இந்த மாதத்தின் நடுப்பகுதியில்  ஓரளவு சாதகமாக இருக்கும். சுப விரயங்களை நீங்கள் மேற்கொள்ளவேண்டிய அவசியம் இருக்கும். குறிப்பாக உங்கள் தாய் மற்றும் குழந்தைகளுக்காக செலவுகளைச் செய்வீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செலவாகவே இருக்கும். வரவை விட செலவுகள் அதிகம் இருக்கும். இதனால் உங்களுக்கு மன வருத்தம் ஏற்படும்.  எனவே செலவுகள் குறைக்க வேண்டியும் கடன்கள் அடைக்க பணம் தேவை போன்ற விஷயங்களில் உங்கள் குடும்பத்தாருடன் வாக்குவாதங்கள் ஏற்படும். குடும்பத்தாரின் இடையூறுகள் இல்லமால் நீங்கள் பண விஷயங்களில் சுதந்திரமாகச் செயல்பட விரும்புவீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : குரு பூஜை 

ஆரோக்கியம் : சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய  முடியும். உடலின் ஆரோக்கியம் மனதின் நிலையைப் பொறுத்தும் அமையும் இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் குடும்பத்தில் காணப்படும் பதட்டமான சூழ்நிலை காரணமாக  உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கூடும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை உங்களுக்கு ஏற்பட்டாலும் அவரவர் தலை விதி என்ற ஒன்று உண்டு என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். இந்த மாதம் விடுமுறையை நீங்கள் வெளியே சென்று  உங்கள் வாழ்க்கையின் மலரும் நினைவுகள் தரும் நாட்களாக ஆக்கிக் கொள்வீர்கள். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மூச்சுப் பயிற்சி  மேற்கொள்வதும்  சரியான நேரத்தில் முறையான உணவை உண்ணுவதும்  உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :  சூரியன் பூஜை 

தொழில் : தொழில் செய்யும் கன்னி ராசி அன்பர்கள் தங்கள் தொழிலில் லாபம் காண்பது கடினம். உற்பத்தித் துறையில் இருப்பவர்கள் திறமையாகவும் படைப்பாற்றலுடனும் செயல்படுவீர்கள். உங்கள் குழந்தை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் தொழிலில் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள்.   தொழில் சம்பந்தமான ஆவணங்களை கவனமுடன் பரிசீலித்து கையொப்பம் இட வேண்டும். தொழில் சம்பந்தமான வரிகள் மற்றும் சட்ட விஷயங்களை புறக்கணிக்காதீர்கள். அந்த விஷயங்களில் நேர்மையுடன் செயல்படுங்கள்.

தொழில் வல்லுனர்கள் : ஊடகத்துறை மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இருக்கும் தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் சிறப்புடன் இருக்கக் காண்பார்கள். தொழிலில் சிலர் உங்களை போட்டியாளர்களாகக் கருதுவார்கள். என்றாலும் அவர்கள் மூலம் உங்களுக்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படாது. பணி நிமித்தமான சில பயணங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள். பயணங்களின் போது நீங்கள் சில சவால்களை சந்திப்பீர்கள். என்றாலும் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். 

வேலையில் முன்னேற்றம் காண : புதன் பூஜை 

மாணவர்கள் : கன்னி ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கக்  காண்பார்கள். பிரகாசமான எதிர் காலத்திற்கான அடிப்படையாக இந்த மாதம் இருக்கும். மாணவர்கள் புத்தி கூர்மையுடன் செயல்பட்.டு  தங்கள் இலக்குகளை  அடைவார்கள். பொறியியல் படிக்கும் மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில்வார்கள். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் சிறப்பாகத் தேர்வுகளை எழுதி  எளிதில் வெற்றி இலக்குகளை அடைவார்கள். மாணவர்களின் கவனிப்புத் திறன் அதிகரிக்கும். கடின முயற்சிகளை மேற்கொண்டால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.  

கல்வியில் மேம்பாடு அடைய : சனி பூஜை

சுப நாட்கள் :  1,2,3, 8, 9, 10, 11, 18, 19, 20, 23, 25, 26, 27
அசுப நாட்கள் : 4, 5, 6,7, 15,  16, 17, 12, 13, 14, 21, 22, 24, 28, 29, 30, 31.

banner

Leave a Reply

Submit Comment