AstroVed Menu
AstroVed
search
search
x

மீனம் ஜனவரி மாத ராசி பலன் 2022 | January Matha Meenam Rasi Palan 2022

dateDecember 10, 2021

மீனம் ஜனவரி 2022 பொதுப்பலன்கள்:

மீன ராசி  அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் உறவு நிலை சிறப்பாக இருக்கும். குழந்தைகளுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள்.  காதலர்களுக்கு சாதகமான மாதம் ஆகும். காதலில் வெற்றி கிடைக்கும். நிதிநிலை ஓரளவு சாதகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். வெளிநாட்டில் உத்தியோகம் தேடுபவர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில்  ஏற்ற இறக்க நிலை இருக்கும். பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் அதிகரிக்கும். 

மீனம் ஜனவரி மாத ராசி பலன் 2022 | January Matha Meenam Rasi Palan 2022

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

துலாம் ராசி காதலர்கள் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வார்கள். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். சமூகமான உறவு காரணமாக உறவில் நெருக்கமும் அந்நியோன்யமும் இருக்கும். குழந்தைகளிடம் நல்லுறவு மிகுந்து காணப்படும். உங்கள் தந்தையின் மீது நீங்கள் மிகுந்த அக்கறை காட்ட வேண்டியிருக்கும். 
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண புதன் பூஜை 

நிதி நிலை:

மீன ராசி அன்பர்கள் முதலீடுகளின் மூலம் லாபம் காண்பார்கள். குறிப்பாக தங்கம் மற்றும் ரத்தினங்கள் மீது செலுத்தும் முதலீடு அதிக லாபங்களை அளிக்கும். பங்கு வர்த்தகம் மற்றும் ஊக வணிகம் இந்த மாதம் லாபத்தை அளிக்காது. அதில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. செலவுகளைப் பொறுத்தவரை வெளியூர்ப் பயணம் மற்றும் குழந்தைகளின் படிப்பிற்கான செலவுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரும். 

நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை

வேலை:

தனியார் துறையில் பணி புரியும் மீன ராசி அன்பர்கள் தங்கள் பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கக் காண்பார்கள். பணிச்சுமை அதிகம் இருந்த போதிலும் நீங்கள்  சிறப்பாக பணியாற்றுவீர்கள். சக பணியாளர்களிடம் சுமூகமான உறவு நீடிக்கும். அவர்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை அளிப்பார்கள்.  அரசு பணியில் உள்ள உத்தியோக உயர்வை எதிர் நோக்கி காத்திருக்கும் உங்களுக்கு உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. 

தொழில்:

உங்கள் தொழில் இந்த மாதம் சிறப்பாக நடக்கும். கூட்டுத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மீன ராசி அன்பர்கள் தங்கள் தொழில் மூலம் பெயரும் புகழும் பெறுவீர்கள். தொழில் தொடர்பான  வெளிநாட்டு பயணங்கள் அதிக நன்மையை அளிக்கும்.  ஆடை ஏற்றுமதி சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் அதிக லாபங்கள் ஏற்படும். பழ வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் ஏற்றம் மிகுந்து காணப்படும். அதிக லாபத்தையும் காண்பார்கள்.

தொழில் வல்லுனர்கள்:

பொறியியல் துறையில் இருக்கும் தொழில் வல்லுனர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். தகவல் தொழில் நுட்ப துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வெளி நாட்டில் பணிபுரியும் தொழில் வல்லுனர்களுக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வெளி நாட்டு வேலை கிடைக்கும். 

உத்தியோகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு கணேசா பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் உடல் ஆரோக்கியம் இந்த மாதம் ஓரளவு தான் இருக்கும். உடல் உபாதைகள் உங்களை வருத்தினாலும் நீங்கள் சமாளித்து முன்னேறுவீர்கள். சுரம் மற்றும் சளித்தொல்லை போன்ற சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் இருக்கும் வயதானவர்களின் உடல் நலனில் அக்கறை தேவை.

நல்ல உடல் ஆரோக்கியம் பெற சனி பூஜை

மாணவர்கள்:

பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையுடன் கடினமாக உழைத்துப் படித்தால் வெற்றி நிச்சயம். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் தங்கள் துறையில் வெற்றி காண்பார்கள். வெளிநாட்டு வேலைக்கான முயற்சியில் இருக்கும் படிப்பு முடிக்கும் தருவாயில் இருக்கும் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள். 

கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை

சுப நாட்கள்: 

1, 4, 5, 7, 8, 9, 12, 14, 15.

அசுப நாட்கள்:

6, 10, 11, 13, 16.

Tags Tags:

    Leave a Reply