கும்பம் ஜனவரி மாத ராசி பலன் 2022 | January Matha Kumbam Rasi Palan 2022

கும்பம் ஜனவரி 2022 பொதுப்பலன்கள்:
கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் இளம் வயது கும்ப ராசி அன்பர்களின் காதல் உறவில் இனிமையும் மகிழ்ச்சியும் இருக்கும். உங்கள் காதல் வெற்றிப் பாதையில் செல்லும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். பணியிடச் சூழல் அனுகூலம் அளிப்பதாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் சிறந்த லாபம் காண்பார்கள். தொழில் மூலம் வருமானம் பெருகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பிட் காயின், கிரிப்டோ கரன்சி மற்றும் ஃபோரெக்ஸ் டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்து வருவாயை உயர்த்திக் கொள்ள முடியும். யூக வனிகமான பங்கு மற்றும் பொருள் வர்த்தகத்தில் ஏற்றம் காணப்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் ஞாபகத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
இளம் வயது கும்ப ராசி அன்பர்கள் ஒரு சிலருக்கு மனதில் காதல் அரும்பு மலரும். உங்களில் ஒரு சிலரின் காதல் உறவு திருமண உறவாக மாறும். உங்கள் காதலுக்கு குடும்பத்தாரின் அங்கீகாரம் கிட்டும். திருமணத்திற்குக் காத்திருக்கும் கும்ப ராசி அன்பர்கள் தங்களுக்கேற்ற துணை கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நல்லுறவு காணப்படும்.
கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவ துர்கா பூஜை
நிதி நிலை:
உங்கள் பொருளாதாரம் ஏற்றமுடன் இருக்கும். பங்கு வர்த்தகம் மூலம் வருமானம் கிட்டும். ஊக வணிகம் மூலம் நீங்கள் லாபம் காண்பீர்கள். கலைத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். நிலம் மற்றும் வீடு சம்மந்தப்பட்ட முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
நிதி நிலையில் ஏற்றம் உண்டாக அஷ்ட லக்ஷ்மி பூஜை
வேலை:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். அரசுத் துறையில் பணி புரிபவர்கள் பணிச்சுமை அதிகம் இருக்கக் காண்பார்கள். என்றாலும் சிறப்பாகப் பணியாற்றி நீங்கள் முன்னேற்றமும் வளர்ச்சியும் காண்பீர்கள். தனியார் துறையில் பணிபுரியும் கும்ப ராசி அன்பர்கள் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டும் அங்கீகாரமும் பெறுவார்கள்.
தொழில்:
தொழில் செய்யும் கும்ப ராசி அன்பர்கள் இந்த மாதம் தொழில் நிமித்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். நீண்டதூர பயணங்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். உங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிட்டும். அதிக அளவில் வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெற்று வியாபாரத்தில் விருத்தி காண்பீர்கள். வெளிநாடு சம்மந்தப்பட்ட ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் கணிசமான தன லாபத்தை ஈட்டுவார்கள்.
தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் உங்களுக்கு புதிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். அவர்கள் மூலம் உங்கள் தொழிலில் ஆதாயம் பெறுவீர்கள். பேராசிரியர் பணி, மருத்துவம் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்களின் தன நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உத்தியோகம் மற்றும் தொழில் உயர்வுக்கு ராகு பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும். உடல் வலி இடுப்பு வலி மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரும். உங்கள் தாயின் உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும் முறையான உடற்பயிற்சியும் சத்தான உணவும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். துரித உணவு வகைகளைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
மாணவர்கள்:
கும்ப ராசி மாணவ மாணவியர்கள், இந்த மாதம் மனதை ஒருமுகப்படுத்துவதை கடினமாக உணர்வார்கள். இதனால் கவனம் சிதறும். ஞாபகசக்தி குறையும். எனவே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கவனிப்புத் திறன் அதிகரிக்கும். அவர்கள் சிறப்பாக தேர்வுகளை எழுதி வெற்றி காண்பார்கள்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை
சுப நாட்கள்:
5, 7, 9, 12, 14, 15.
அசுப நாட்கள்:
1, 2, 3, 21, 22, 23, 25, 26, 27.
