AstroVed Menu
AstroVed
search
search

சிம்மம் ராசி பலன் ஜனவரி 2021 | January Matha Simmam Rasi Palan 2021

dateDecember 4, 2020

சிம்மம் ஜனவரி மாத 2021 ராசி பலன்:

பொதுப் பலன்கள் : மாற்றம் ஒன்றே மாறாதது என்பது இப்பொழுது உஙகள் எண்ணத்தில் தோன்றும். குடும்பத்தில் சில மாற்றங்களைக் காண்பீர்கள். குறிப்பாக குழந்தைகளிடம் சில மாற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் பணியிடத்திலும் நீங்கள் மாற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் எதிர் கால நலன் கருதி பண விஷயத்திலும் நீங்கள் சில மாற்றங்களைக் காண்பீர்கள் அல்லது ஏற்படுத்திக் கொள்வீர்கள். அந்த மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். உங்கள் செலவுகளை கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் அதில் நீங்கள் வெற்றிக்கு முயற்சிக்கலாம். நீங்கள் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தால் இப்பொழுது அது உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிம்ம ராசி மாத பலன் 2021 குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

வேலை : பணியிடச் சூழலை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள நீங்கள் உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுடன் நல்லுறவு பேணுங்கள். நீங்கள் புத்திசாலித் தனத்துடனும்  ஆக்கப்பூர்வமாகவும்  செயல்படுவதன் மூலம் பணியில் வெற்றி காண்பீர்கள்.

காதல் உறவு: இளம் வயது சிம்ம ராசி அன்பர்களின் காதல் உறவு இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.  நீங்கள் மென்மையான வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் உறவில் நல்லிணக்கத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். உங்கள் மனதில் ஆசைகளை விட பாசம் அதிகம் இருக்கம் மாதமாக இந்த மாதம் இருக்கும். திருமணமான தம்பதிகள் உங்கள் வாழ்க்கைத்துனையுடன் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை : இந்த மாதம் உங்கள் நிதி நிலை ஓரளவு சீராக இருக்கும்.  குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக செலவுகள் வந்து சேரும்.  வேலை மற்றும் தொழில் விஷயமாக நீங்கள் மேற்கொள்ளும் பயணம் மூலமாகவும் செலவுகள் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள். உங்களுக்கு தேவைப்படும் நிதி உதவிகளை உங்கள் தந்தையிடம் கேட்டுப் பெறுவீர்கள்.

உங்கள் நிதிநிலை மேம்பட : லக்ஷ்மி பூஜை 

ஆரோக்கியம் :இந்த மாதம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றாலும் உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பெரிய அளவிலான அசௌகரியங்கள் இருக்காது என்றாலும் சிறு சிறு வலி, வெட்டுக்காயம், கொப்பளங்கள் போன்ற உபாதைகள் வந்து போகும். அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  சத்தான உணவு, உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி  மற்றும் யோகா பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை

தொழில்: இந்த மாதம் தொழில் சிறப்பாக இருக்கும். குறிப்பாக கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். தொழிலை விரிவாக்க நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் அரசு உத்தியோகத்தில் இருப்பவர் என்றால் இந்த மாதம் உங்களுக்கு பதவி உயர்வு கிட்டும். நீங்கள் பொழுதுபோக்குத் துறை அல்லது கலைத் துறையில் இருப்பவர் என்றால் வெற்றி உங்களை நாடி வரும்.  உங்கள் திறமை மற்றும் தலைமை வகிக்கும் திறன் காரணமாக உங்களுக்கு ஊதிய உயர்வும் கிட்டும். 

தொழில் நிபுணர்கள் : நீங்கள் உங்கள் திறமையை எல்லாம் வெளிக் காட்டி சிறப்பாகப் பணிகளைப் புரிந்தாலும் இந்த மாதம் உங்கள் கடின  உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் மற்றும் பாராட்டு கிடைப்பது கடினம். உங்கள் உயர் அதிகாரிகளே உங்களுடன் போட்டியிடும் நிலை இருக்கும். அதன் மூலம்  நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்.   தொழிலை விரிவாக்க நீங்கள் மேற்கொள்ளும்  பயணத்தின் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிட்டும். என்றாலும் சில தடைகளும் தாமதங்களும் காணப்படும். 

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சூரியன் பூஜை

மாணவர்கள் : சிம்ம ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் கனவுகளை நனவாக்க முடியாமல் நீங்கள் கவலை கொள்வீர்கள். இதனால் நீங்கள் உற்சாகம் இழப்பீர்கள்.  பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இந்த மாதம் புத்திசாலித்தனமாக வெற்றிகளைக் காண இயலும். 

கல்வியில் மேன்மை பெற : அங்காரக பூஜை

சுப நாட்கள் :  4, 5, 6, 15, 16, 17, 18, 19, 20, 23, 26, 27, 28, 29, 30.
அசுப நாட்கள் : 1,2,3, 7,8, 9, 10, 11, 12, 13, 14, 21, 22, 24, 25, 31


banner

Leave a Reply