AstroVed Menu
AstroVed
search
search

மகரம் ராசி பலன் ஜனவரி 2021 | January Matha Magaram Rasi Palan 2021

dateDecember 4, 2020

மகரம் ஜனவரி மாத ராசி பலன் 2021:

பொதுப்பலன்கள்: மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் பல விதமான  சவால்களை சந்திக்க  வேண்டியிருக்கும். நான்கு கிரகங்கள் உங்கள் ராசியில் இணைந்து காணப்படுவதால் நீங்கள் இந்த மாதம் சற்று கடினமான நிலையை சந்திப்பீர்கள். என்றாலும் உங்கள் தகுதி மற்றும் திறமையை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் வாழ்வில் அனைத்து அம்சங்களிலும் வெற்றி காண்பீர்கள். ஆன்மீகத்தில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். கடவுள் நம்பிக்கை உங்களுக்கு கை கொடுக்கும். வீட்டில் மூத்தவர்களின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்வதன் மூலம் நீங்கள் வெற்றி காணலாம். மகரம் ராசி மாத பலன் 2021 குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

வேலை : பணி செய்யும் மகர ராசி அன்பர்கள் இந்த மாதம் கடினமாகப் போராட வேண்டியிருக்கும். முன்னேற்றம் என்பது எட்டாக் கனியாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைப்பது கடினம். இந்தச் சூழ்நிலையில் உங்களுக்கு மனச் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.  பணியிடத்தில் நல்லுறவை வளர்த்துக் கொள்வதன் மூலம் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின்  ஒத்துழைப்பு மற்றும் ஆதரவைப் பெற இயலும்.

காதல் உறவு : இளம் வயதில் இருக்கும் மகர ராசி அன்பர்களின் மனதில் காதல் அரும்பு மலரும். நீங்கள் திருமணமானவராக இருந்தால் உங்கள் துணையின் மீது ஆதிக்கத்தை செலுத்துவீர்கள்.  இது உங்கள் இருவருக்கும் இடையிலான பரஸ்பர நல்லுறவை பாதிக்கும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. உங்கள் கோபம் காரணமாக உறவு பாதிக்கப்படும்.  எனவே கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை 

நிதிநிலை : இந்த மாதம் உங்கள் கையில் பணம் புரளும் என்றாலும் நிதிநிலை ஸ்திரமாக இருக்க வாய்ப்பில்லை. ஏற்றத் தாழ்வான நிலையே காணப்படும். இந்த மாதம் நீங்கள் உங்கள் வசதிகளை பெருக்கிக் கொள்ள முற்படுவீர்கள். அதன் காரணமாக நீங்கள் ஆடம்பர செலவுகளை மேற்கொள்வீர்கள்.  பணம் கையில் புரள்கிறது என்பதால் நீங்கள்  ஆபத்தான முதலீடுகளில் இறங்காதீர்கள். சரியான முறையில் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். பண விஷயங்களில் வீட்டில் மூத்தவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரக பூஜை

ஆரோக்கியம் : நமது ஆரோக்கியம் என்பது உடல் மற்றும் மனம் இரண்டும் சார்ந்தே அமையும். மனதில் இருக்கும் பதட்டம் காரணமாக நீங்கள் தலைவலி, வாய்வுத் தொல்லை  போன்ற உபாதைகளுக்கு ஆளாக நேரலாம். உங்கள் ஆரோக்கியத்தைச் சிறந்த முறையில் காக்கும் வகையில்  தினமும் உடற்பயிற்சி மற்றும்  சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : குரு பூஜை

தொழில் : மகர ராசி அன்பர்கள் இந்த மாதம் கூட்டுத் தொழிலில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.  தொழில் விரிவாக்கம் கருதி புதிய தொழில் மற்றும்  புதிதாக கூட்டாளி அமைத்துக் கொள்ள பேச்சு வார்த்தை நடத்துவீர்கள். என்றாலும் உங்கள் கடுமையான வார்த்தைகள் மூலம் அந்த வாய்ப்பினை இழப்பீர்கள். இதனை தவிர்ப்பதற்கு நீங்கள் “தான்” என்னும் அகந்தையை விட்டு விட்டு பேச்சில் மென்மையான வார்த்தைகளை பிரயோகிக்க  வேண்டியது அவசியம். அதன் மூலம் நீங்கள் தொழிலில் வெற்றி காண்பீர்கள். 

தொழில் வல்லுனர்கள் : இயல்பிலேயே மகர ராசி அன்பர்கள்  எதையும் ஆராயாமல் செய்யமாட்டார்கள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் அதன் நிறை குறைகளை அலசி ஆர்யாந்த பின் தான் தொடங்குவார்கள். மேலதிகாரிகள் உங்கள் ஆராயும் திறனை பாராட்டுவார்கள். என்றாலும் நீங்கள் பணிவுடன் நடந்து கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும்.

வேலையில் மேன்மை பெற : சனி பூஜை 

மாணவர்கள் : கல்வி பயிலும் மகர ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உங்கள் தாயின் ஆதரவு உங்களை வெற்றிப் பாதையில் இட்டுச்  செல்லும். தாயின் ஆலோசனைப் படி நடந்தால் நீங்கள் விரும்பும் நிறுவனம் அல்லது கல்லூரியில் இடம் கிடைக்கப் பெறுவீர்கள். இது உங்கள் எதிர்கால பணிக்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் கல்விக் கடன் பெற்று இருந்தால் அதனை திருப்பிச் செலுத்துவதில் சில சிரமங்களை சந்திக்க நேரும். என்றாலும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.  உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் கவனமுடன் கடினமாக உழைத்துப் படித்து வெற்றி பெறுவார்கள். சிலர் பெற்றோர் அல்லது நண்பர்களின் உதவு மூலம் வேலை கிடைக்கப் பெறுவார்கள்.

கல்வியில் மேன்மை பெற : செவ்வாய் பூஜை 

சுப நாட்கள்: 1,2,3,7, 12, 13, 14, 15, 16, 19, 20, 22, 21, 30, 31.
அசுப நாட்கள் :  4, 5, 6, 8, 9, 10, 11, 17, 18, 23 24, 25, 26, 27, 28, 29


banner

Leave a Reply