ஹரிவராசனம் பாடல் வரிகள் (Harivarasanam Lyrics in Tamil)

Get Rid of Snake Curses and Doshas - Avail Naga Chaturthi and Garuda Panchami Packages Join Now
x
x
x
cart-added The item has been added to your cart.

ஹரிவராசனம் பாடல் வரிகள் (Harivarasanam Lyrics in Tamil)

May 23, 2022 | Total Views : 29
Zoom In Zoom Out Print

ஹரிவராசனம் பாடல் வரிகள் (Harivarasanam Lyrics in Tamil)

ஹரிவராசனம் விஸ்வமோகனம்

ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்

அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சிறப்பு வாய்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே மோகிக்கச் செய்பவரும், குதிரையில் பவனி வரும் சூர்ய பகவானால் ஆராதிக்கப்படும் திருவடிகளை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்யம் ஆனந்த நர்த்தனம் செய்பவருமாகிய ஹரிஹரபுத்ரனை சரணடைகிறேன்.

சரணகீர்த்தனம் பக்தமானஸம்

பரணலோலுபம் நர்த்தனாலயம்

அருணபாசுரம் பூதநாயகம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

கீர்த்தனங்கள் பாடி சரணாகதி அடையும். பக்தர்களின் மனதில் நிறைந்து இருப்பவரும். பக்தர்களை ஆள்பவரும், ஆடலை விரும்புபவரும் உதிக்கும் சூரியன் போல பிரகாசிப்பவரும், பூத நாயகராக விளங்குபவரும். ஆகிய ஹரிஹர புத்ரனை சரணடைகிறேன்

பிரணயசத்யகம் பிராணநாயகம்

ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்

பிரணவமந்திரம் கீர்த்தனப்பிரியம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சத்தியத்தின் உணர்வாக இருப்பவரும், உள்ளங்களின் விருப்பமாக இருப்பவரும்,  பேரண்டத்தைப் படைத்தவரும், சுடரொளி வீசும் ஒளிவட்டமாய் திகழ்பவரும். ஓம் எனும் ஓங்கார ஸ்வரூப இசையில் பிரியமுள்ளவரும் ஆகிய  ஹரிஹர புத்ரனைச் சரணடைகிறேன்.

துரகவாகனம் சுந்தரானனம்

வரகதாயுதம் தேவவர்ணிதம்

குருகிருபாகரம் கீர்த்தனப்பிரியம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

குதிரையை வாகனமாகக் கொண்டவரும், அழகிய திருமுகம் உடையவரும்,  தண்டாயுதத்தை ஏந்தியவரும், தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும் குருவைப் போல பிரியம் உடையவரும், கீர்த்தனங்களில் பிரியம் உடையவருமான ஹரிஹர புத்ரனை சரணடைகிறேன்

திரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம்

திரிநயன பிரபும் திவ்யதேசிகம்

திரிதசப்பூஜிதம் சிந்திதப்பிரதம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

மூன்று உலகத்தாராலும் வணங்கப்படுபவரும், அனைத்து தெய்வங்களின் அம்சமாகத் திகழ்பவரும் மூன்று கண்களை உடையவரும் சிவனின் உருவமாக இருப்பவரும், தேவர்களால் வணங்கப்படுபவரும் வேண்டுவதை உடனே அளிப்பவரும் ஆகிய ஹரிஹர புத்ரனை சரணடைகிறேன்

பவபயாபகம் பாவுகாவகம்

புவனமோகனம் பூதிபூசணம்

தவளவாகனம் திவ்யவாரணம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சம்சார சாகர பயத்தை போக்குபவரும்.  அருள் புரிவதில் தந்தையைப் போன்றவரும், இந்த உலகத்தை மாயையால் மோகிக்கச் செய்பவரும், திருநீற்றை ஆபரணமாக அணிந்தவரும். வெள்ளை யானையை வாகனமாக கொண்டவரும் ஆகிய ஹரிஹர புத்ரனைச் சரணடந்தேன்.

களம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்

களபகோமளம் காத்ரமோகனம்

களபகேசரி வாஜிவாகனம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

இனிமையான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், அழகிய திருமுகத்தை உடையவரும்,  இளமையும், மென்மையும் உடையவரும், சொக்க வைக்கும் பேரழகையும், யானை, சிங்கம், குதிரை போன்றவற்றை வாகனமாகவும் கொண்டவருமாகிய ஹரிஹர புத்ரனைச் சரணடைகிறேன்.

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரிதம்

ச்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்

ச்ருதிமனோகரம் கீதலாலசம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணடைந்த பக்தர்கள் மீது பிரியம் உடையவரும், வேண்டியதை  உடனேயே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், பரமாத்மாவும், வேதங்களால் இனிமையாகப் போற்றப்படுபவரும்,

கீதங்களில் பிரியமுள்ளவருமான ஹரிஹர புத்ரனைச் சரணடைகிறேன்.

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos