Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 | Guru Peyarchi Palangal 2021 to 2022 in Tamil

September 24, 2021 | Total Views : 856
Zoom In Zoom Out Print

குரு பெயர்ச்சி - 2021 – மேஷ ராசி பலன்கள் 

மேஷ ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 9 மற்றும் 12 ஆம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் நவம்பர் மாதம் 21, 2021  அன்று மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு பதினொன்றாம் வீடான கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். பதினொன்றாம் இடம் என்பது லாபஸ்தானம் என்று அழைக்கப்படும். எனவே லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குரு,  இந்த வருடம் உங்களுக்கு எல்லா விதத்திலும் லாபங்களை அள்ளித் தர தயாராக இருக்கிறார். குரு தான் இருக்கும் இடத்தை விட தான் பார்க்கும் இடத்தை வளம் பெறச் செய்வார் என்று கூறுவார்கள்.  குருவிற்கு 5,7,மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 3,5,மற்றும் 7 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார். இந்தப் குரு பெயர்ச்சி 2021 உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும் என்று காணலாம் வாருங்கள். இளைய மற்றும் மூத்த உடன் பிறப்புகளுடன் நல்ல உறவு இருக்கும். அவர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். குடும்பத்தில் தாய், தந்தை, குழந்தை, மருமகன், மருமகள் மற்றும் உறவினர்கள் என அனைவரிடமும் உறவு சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். காதல் கைகூடும். உங்களுக்கு பொழுது போக்கு மற்றும் சுற்றுலா மீது ஆர்வம் அதிகரிக்கும்.  வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியில்  இருப்பவர்களுக்கு  அலுவலகத்தில் அதிகப் பணிகள் காணப்படும். புதிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிட்டும். மேலதிகாரிகளின் பாராட்டும் அங்கீகாரமும் கிட்டும். கடின  உழைப்பிற்கேற்ற பலன்கள் கிட்டும். தொழில் சிறப்பாக நடக்கும். புதிய தொழில் வாய்ப்புகள்  கிட்டும். பொருளாதாரத்தில் ஏற்றமான நிலை இருக்கும். வருமானம் கணிசமாக அதிகரிக்கும். ஊக வணிகம் மற்றும் பங்கு வர்த்தகம் மூலம் லாபமும் ஆதாயமும் கிட்டும்.  மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். தூக்கமின்மை, மற்றும்  செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே நல்ல ஒய்வு தூக்கம் மற்றும் சரியான நேரத்தில் முறையான உணவு அவசியம். 

பரிகாரம் : வியாழக் கிழமை அன்று மஞ்சள் ஆடை உடுத்தவும். குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு வஸ்திர தானம் செய்யவும். சிறு யானை சிலையை வாங்கி வீட்டு வறவேற்பு அறையில் வைக்கவும். 

குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

குரு பெயர்ச்சி -2021 – ரிஷப ராசி பலன்கள் 

ரிஷப  ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 8 மற்றும் 11 ஆம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் நவம்பர் மாதம் 21, 2021  அன்று மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். பத்தாம் இடம் என்பது கர்ம, ஜீவன ஸ்தானம் என்று அழைக்கப்படும்.  குருவிற்கு 5,7,மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 2,4,,மற்றும் 6 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும் என்று காணலாம் வாருங்கள். குடும்பத்தில் குதூகலம் இருக்கும். அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். குறிப்பாகப் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாகப் பேச வேண்டும். விட்டுக் கொடுத்து நடப்பது நன்மை அளிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நல்லுறவு இருக்கும். வீட்டில் சுப நிகழ்சிகள் நடக்கும். குடும்ப உறுப்பினர்களாக புது வரவு சேரும். நீங்கள் புனித ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். காதலில் அனுசரித்து நடந்து கொள்ள  வேண்டும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.  உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். முதலீடுகளின் மூலம் லாபம் பெறுவீர்கள்.  பங்கு வர்த்தகம் மூலம் லாபம் கிட்டும்.  அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பின் மூலம் சக பணியாளர்கள் மத்தியில் பெயரும் புகழும் பெறுவீர்கள். வியாபாரம் மூலம் லாபம் பெருகும். புதிய தொழில் தொடங்க ஏற்ற நேரம் என்றாலும் முடிவு  எடுக்கும் முன்பு நன்கு  ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும்.  கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.   மாணவர்கள் மனதை ஓருமுகப்படுத்தி கல்வி பயில வேண்டும். பொறியியல் படிக்கும் மாணவர்கள் சிறப்பாகப் கல்வி பயில்வார்கள். ஆராய்ச்சித் துறை மாணவர்கள் சிறப்பாகப் பயின்று கல்வியில் வெற்றி பெறுவார்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. 

பரிகாரம் : வியாழக்கிழமை அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொண்டக்கடலை சுண்டல் செய்து தானம் செய்யவும். பசுவிற்கு வாழைப்பழம் தானமாகக் கொடுக்கவும். சிவன் கோவிலில் நெய் தானமாகக் கொடுக்கவும். 

குரு பெயர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு விடை தெரிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அழையுங்கள் 

குரு பெயர்ச்சி -2021 – மிதுன ராசி பலன்கள் 

மிதுன   ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 7 மற்றும் 10 ஆம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் நவம்பர் மாதம் 21, 2021  அன்று மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான  கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். ஒன்பதாம் இடம் என்பது பாக்கிய  ஸ்தானம் என்று அழைக்கப்படும்.  குருவிற்கு 5,7,மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 1,3,,மற்றும் 5 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும் என்று காணலாம் வாருங்கள். தந்தை வழி சொத்துக்களால் ஆதாயம் மற்றும் வெளிநாட்டுப் பயணம் போன்ற அதிர்ஷ்டத்துடன் வாழ்க்கையை அமைத்து தரும் வருடமாக அமையப்போகிறது.   காதலர்கள் கவனமாகப் பழக வேண்டும்.   திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமான  தம்பதிகளுக்கு இடையே  நல்லுறவு காணப்படும். குடும்பத்தில் நல்லுறவு நீடிக்கும். நண்பர்களிடமும் நல்லுறவு காணப்படும். நல்ல மனிதர்களின் நட்பும் ஆதாயமும் உண்டு. அரசுத் துறையில் பணி புரிபவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணி புரிபவர்களுக்கு அதிக பணிகள் காணப்படும். மனச் சோர்வு மற்றும் தூக்கமின்மை பாதிப்பு ஏற்படும். தனியார் துறையில் இருப்பவர்கள் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டையும் பெறுவார்கள். பணி நிமித்தமான பயணங்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.   ஊக வணிகம் மூலம ஆதாயம் பெறுவீர்கள். புதிய முதலீடுகள் லாபங்களைப் பெற்றுத் தரும். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். மருத்துவத் தொழிலில் இருப்பவர்களுக்கு தன நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுய தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான பயணங்கள் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். வருமானம் பெருகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தான தருமங்களுக்கான செலவுகளை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் பதட்டமின்றிச் செயல்படுவார்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களால் ஊக்கப்படுத்தப்படுவார்கள். விஞ்ஞானம் மற்றும் தொழில்  நுட்பத் துறையில் இருக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை பெறுவார்கள். முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் வெற்றி காண்பார்கள்.  மற்றும் தூக்கமின்மை பிரச்சனைக்கு தியானம் மற்றும் நடைப் பயிற்சி நன்மை பயக்கும். வயதான பெண்களுக்கு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். மருத்துவ ஆலோசனை பெறுவது நன்மை பயக்கும்.

குரு பெயர்ச்சி -2021 – கடக ராசி பலன்கள் 

கடக  ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 6 மற்றும் 9ஆம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் நவம்பர் மாதம் 21, 2021  அன்று மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான  கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். எட்டாம் இடம் என்பது ஆயுள் ஸ்தானம் என்று அழைக்கப்படும்.  குருவிற்கு 5,7, மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 12, 2,,மற்றும் 4 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும் என்று காணலாம் வாருங்கள். நீங்கள் ஓய்வின்றி செயல்பட நேரும். இதனால் குடும்பத்தின் மீது கவனம் செலுத்த இயலாத நிலை இருக்கும்.  கடுமையாக நடந்து கொள்வது மற்றும் கோபம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதிக பணிகள் காரணமாக நீங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்க நேரும்.  காதலர்களுக்கு காதல் கை கூடும். திருமணமான தம்பதிகள் மனமொத்து வாழ்வார்கள். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் இருக்கும். இருவருக்கும் இடையே அன்னியோன்யம் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பணி நிமித்தமாக நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.  அரசுத் துறையில் இருப்பவர்கள் சிறப்பாகப் பணியாற்றி முன்னேற்றம் காண்பார்கள். சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய தொழிலுக்கான முதலீட்டை மேற்கொள்ள ஏற்ற நேரம். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பணப்புழக்கம் சுமாராக இருக்கும். கலைத் துறையினர் சிறந்த வருமானம் ஈட்டுவார்கள்.  வெளிநாட்டுத் தொழில் செய்பவர்கள் சிறந்த பண வரவைக் காண்பார்கள். பள்ளிக்கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் வெற்றி காண்பார்கள். பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் படிப்பிற்கென நேரம் ஒதுக்கிப் படித்தால் தான் சிறந்த வெற்றிகளைக் காண முடியும். உங்கள் எதிர் கால திட்டங்கள் அமைத்துக் கொள்ள உங்கள் பெற்றோர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வெளிநாடு சென்று  படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சாதகமாக இந்த குருப்பெயர்ச்சி அமைகிறது. ஆராய்ச்சிக் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் வெற்றி காண்பார்கள். மன அழுத்தம்   மற்றும் தவறான உணவு முறை காரணமாக அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். மற்றபடி பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படாது. யோகா மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். 

குரு பெயர்ச்சி -2021 – சிம்ம ராசி பலன்கள் 

சிம்ம ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 5 மற்றும் 8ஆம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் நவம்பர் மாதம் 21, 2021  அன்று மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான  கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். ஏழாம் இடம் என்பது களத்திர  ஸ்தானம் என்று அழைக்கப்படும். வாழ்க்கைத் துணை மற்றும் தொழில் கூட்டாளிகளை  குறிக்கும் இடம் ஆகும்.   குருவிற்கு 5,7, மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 11, 1,,மற்றும் 3 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும் என்று காணலாம் வாருங்கள். குடும்பத்தில் இளைய சகோதர சகோதரிகளிடம் நல்லுறவு காணப்படும். வீட்டில் திருமணம் மற்றும் வளைகாப்பு போன்ற விருந்து விசேஷங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களுடனான உறவு பலப்படும்.  நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தாயார் நலனில் அக்கறை தேவை. காதலர்கள் இந்த மாதம் தங்கள் காதலில் வெற்றி பெறுவார்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கி திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியர் மனமொத்து வாழ்வார்கள்.  கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவை விட செலவுகள் குறைவாக இருக்கும். முதலீடுகளில் இருந்து லாபம் பெறுவீர்கள். புதிய வீடு அல்லது நிலம் வாங்குதல் மற்றும் வீடு மராமத்துப் பணி போன்ற வகையில் செலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். வெளிநாட்டில் தொழில் வாய்ப்புக்கு காத்திருந்தவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள்.  கல்வித்துறை, மருத்துவத் துறை மற்றும் நீதித்துறையில் வேலை செய்பவர்கள் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள். பேராசிரியர் தொழிலில் இருப்பவர்களுக்கு தன நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் புதிய வாய்புகளைப் பெறுவார்கள்.  பள்ளிக்கல்வி படிக்கும் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட உடல்நல பாதிப்பு ஏற்படலாம்.

பரிகாரம் : வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட அனைத்திலும் வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். வியாழக்கிழமைகளில் விரதமிருந்து சிவாலயம் சென்று வருவது நன்மை பயக்கும். ஏழை மாணவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுப்பது உங்கள் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். 

குரு பெயர்ச்சி -2021 – கன்னி ராசி பலன்கள் 

கன்னி ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 4 மற்றும் 7ஆம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் நவம்பர் மாதம் 21, 2021  அன்று மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான  கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். ஆறாம்  இடம் என்பது கடன், நோய் மற்றும் எதிரிகளைக் குறிக்கும் இடம் ஆகும்.   குருவிற்கு 5,7, மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 10, 12,,மற்றும் 2 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும் என்று காணலாம் வாருங்கள்.  குடும்பத்தில் உறவு நிலை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்தப் பெயர்சிக் காலங்களில் நீங்கள் அதிக குடும்ப பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. தேவையற்ற வார்த்தைகள் காரணமாக  வீட்டு உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை. காதலர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம். கணவன் மனைவி உறவில் சில சிக்கல்கள் இருக்கும். எனவே உணர்ச்சி வசப்படாமல் நிதானமாகச் செயல்பட வேண்டும்.  அனுசரித்தும் விட்டுக் கொடுத்தும் நடந்து கொள்வதன் மூலம் நல்லுறவை பராமரிக்க முயலும். உங்கள் நிதிநிலையில் ஏற்றமான நிலை காணப்படும். வெளிநாட்டு முதலீடு மூலம் லாபம் அதிகரிக்கும். நீங்கள் வீடு வாங்குதல், வீட்டுப் பராமரிப்பு, மற்றும் பயணச் செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். கடின உழைப்பு, பெயரையும் புகழையும் பெற்றுத் தரும். மாணவர்கள் சிறப்பாகப் படித்து முன்னேற்றம் காண்பார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். 

பரிகாரங்கள்: முதியோர்களுக்கு வஸ்திர தானம் செய்வது வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும். வியாழக்கிழமைகளில் பசுவிற்கு உணவு அளிக்கலாம். ஏழைக் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்யலாம்.

குரு பெயர்ச்சி -2021 – துலாம் ராசி பலன்கள் 

துலாம்  ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6ஆம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் நவம்பர் மாதம் 21, 2021  அன்று மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான  கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். ஐந்தாம்  இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தானம் ஆகும்.    குருவிற்கு 5,7, மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 9, 11,,மற்றும் 1 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும் என்று காணலாம் வாருங்கள். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் இடையே நல்லுறவு காணப்படும். உறவினர்கள் ஆதாரவாகச் செயல்படுவார்கள். குழந்தைகளுடன் நல்லுறவு இருக்கும். இளம் காதலர்கள் வெற்றி காண்பார்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் கை கூடும். கணவன் மனைவி உறவு நல்லுறவாக இருக்கும். அன்னியோன்யம் கூடும்.  வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். மனதில் அமைதி நிலவும். உங்கள் கடின முயற்சிகளின் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் நல்ல லாபம் கிட்டும். முதலீடுகளையும் நீங்கள் மேற்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருக்கும் துலாம் ராசி அன்பர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். பணிச் சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். புதிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும்.  பிறர் பாராட்டும் வகையில் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் அதிக லாபம் காண்பார்கள்.  பள்ளி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உங்கள் உணவில் கவனம் தேவை. 

பரிகாரங்கள்: கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குப் புத்தகம் வாங்கி கொடுக்கலாம். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிவது சிறப்பு. பிரதோஷ வழிபாடு மிகுந்த நன்மைகளை கொடுக்கும்.

குரு பெயர்ச்சி -2021 – விருச்சிகம் ராசி பலன்கள் 

விருச்சிக ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 2 மற்றும் 5ஆம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் நவம்பர் மாதம் 21, 2021  அன்று மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு நான்காம்  வீடான  கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். நான்காம்  இடம் என்பது தாய் மற்றும் சுக போக ஸ்தானம் ஆகும்.    குருவிற்கு 5,7, மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 8, 10,,மற்றும் 12 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும் என்று காணலாம் வாருங்கள். உங்களுக்கு தன வரவு மேம்படும்.  முதலீடு குறித்து குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் உடன் பிறந்தவர்களுடன் பண  விஷயங்களில் சில கருத்து வேறுபாடுகள் வரலாம்.  உங்கள் தாயின் உடல் நலத்தில் அக்கறை வேண்டியிருக்கும்.   இளம் வயதினருக்கு மனதில் காதல் மலரும்.   உங்கள் கடந்த  கால முதலீடுகளின் மூலம் லாபம் காண்பீர்கள். அசையாச் சொத்துக்கள் வாங்குதல் மற்றும் வீட்டுப் பராமரிப்புப் பணிக்காக அதிக செலவுகள் ஏற்படும். தொழில் செய்பவர்கள் லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைத்து அங்கீகாரமும் பாராட்டும் பெறுவீர்கள். மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களின் ஒத்துழைபைப் பெறுவீர்கள்.  மாணவர்கள் அதிக கவனம் செலுத்திப் படிக்க வேண்டியிருக்கும்.  ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து வெற்றி காண்பார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.  ஆரோக்கியமான உணவு உட்கொள்வது மற்றும்  உடற்பயிற்சி  மேற்கொள்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ள இயலும்.

பரிகாரங்கள்: பேராசிரியர்களுக்கு வஸ்திர தானம் செய்து அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி வருவது வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும்.  வியாழக்கிழமை சிவன் கோவிலுக்கு குத்துவிளக்கு தானம் கொடுத்தல் சிறப்பு. கோவிலுக்கு வருபவர்களுக்கு கொண்டக்கடலை சுண்டல் தானமாகக் கொடுக்கலாம்.

குரு பெயர்ச்சி -2021 – தனுசு ராசி பலன்கள்

தனுசு  ராசி அன்பர்களே! உங்கள் ராசி மற்றும் 4ஆம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் நவம்பர் மாதம் 21, 2021  அன்று மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு மூன்றாம்  வீடான  கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். மூன்றாம் இடம் என்பது தைரிய வீரிய  ஸ்தானம் ஆகும்.    குருவிற்கு 5,7, மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 7, 9,,மற்றும் 11 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும் என்று காணலாம் வாருங்கள். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும்.  வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.  திருமணம், வளைகாப்பு என சுபநிகழ்ச்சிகள் காரணமாக வீடு களைகட்டும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  குழந்தைகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். மூத்த மற்றும் இளைய உடன் பிறந்தவர்களுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும். உங்கள் தாயின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். தனுசு ராசி இளம் வயதினரின் காதல் உறவு இனிமையாக இருக்கும். மனதில் சந்தோசம் நிலவும். கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். உறவில் நல்லிணக்கம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வருமானம் உயரக் காண்பார்கள். அரசுத் துறையில் பணி புரிபவர்கள் மேலதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பெறுவார்கள்.   தனியார் துறையில் பணி புரிபவர்கள் உத்தியோகம் நிமித்தமாக வெளி நாடு செல்லும் வாய்ப்பு உள்ளது.  தொழில் செய்பவர்கள் சிறந்த லாபம் காண்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். தொழில் மூலம் ஆதாயம் பெறுவார்கள்.  குழந்தைகளின் கல்விக்காக கடன் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு பணம் செலவு செய்வீர்கள்.  பள்ளி மாணவர்கள் கவனச் சிதறலுக்கு ஆளாவார்கள். எனினும், மனதை ஒருநிலைப்படுத்தி கவனமுடன் படித்தால்  கல்வியில் எளிதில் வெற்றி காணலாம். உயர் படிப்பு முடித்த மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்வார்கள். கல்விக்கான உதவித் தொகை விரும்பும் மாணவர்கள், தாங்கள் விரும்பும் வகையில் உதவித் தொகை பெறுவார்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்ற போதிலும் சிறு சிறு உபாதைகள் வந்து போகும். யோகா மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள இயலும். 

பரிகாரங்கள்: சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு.  வியாழக்கிழமை மஞ்சள் வஸ்திரம் அணிவது வெற்றியைக் கொடுக்கும். மாணவர்கள் கல்வி கற்பதற்கு உதவி புரிவது வாழ்கையில் ஏற்றத்தைக் கொடுக்கும்.

குரு பெயர்ச்சி - 2021 – மகரம் ராசி பலன்கள் 

மகர ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 12 மற்றும் 3ஆம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் நவம்பர் மாதம் 21, 2021  அன்று மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு இரண்டாம்   வீடான  கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். இரண்டாம்  இடம் என்பது குடும்பம் மற்றும் தனத்தைக் குறிக்கும் ஸ்தானம் ஆகும்.    குருவிற்கு 5,7, மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 6, 8,,மற்றும் 10 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும் என்று காணலாம் வாருங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சில் கவனம் தேவை. குழந்தைகள் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும்.  காதல் வயப்பட்ட மகர ராசி அன்பர்கள் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வார்கள். கணவன் மனைவி உறவில் இனிமை இருக்கும். இல்லறத்தில் இனிமையும் அந்நியோன்யமும் நெருக்கும் அதிகரிக்கும். உங்கள் பொருளாதார நிலை ஏற்றம் தரும் வகையில் இருக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.  உங்கள் சேமிப்புப் பணம் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவியாக இருக்கும்.  உங்கள் வசதி வாய்ப்புகள் பெருகும். ஆடம்பர வாழ்க்கை வாழ்வீர்கள். அலுவலகத்தில் பணி புரிபவர்கள் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். அரசுத் துறையில் பணி புரிபவர்கள் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் பெறுவார்கள். தொழில் சிறப்பாக நடக்கும். கூட்டுத் தொழில் மூலம் லாபம் பெருகும். பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்களுக்குப் படிப்பில் கவனச் சிதறல்கள் ஏற்படலாம். உயர் கல்வி படிக்கும் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவைப் பெறுவார்கள். சிறப்பாகப் கல்வி பயின்று வெற்றி காண்பார்கள். படித்து முடித்து வேலை தேடும் மாணவர்கள் சிறந்த சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கப் பெறுவார்கள். வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பார்கள். அதிக பணிகள் காரணமாக சோர்வு மற்றும் அசதி உங்களை ஆட்கொள்ளும். சரியான உணவு மற்றும் முறையான தூக்கம் உங்கள் சிறந்த ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். 

பரிகாரங்கள்: குழந்தைகளுக்கு இனிப்பு பதார்த்தங்களை வாங்கிக் கொடுப்பது நன்மை பயக்கும்.  வியாழக்கிழமை விரதமிருந்து தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும். ஏழை மாணவர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம்.

குரு பெயர்ச்சி -2021 – கும்ப ராசி பலன்கள் 

கும்ப  ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 11 மற்றும் 2ஆம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் நவம்பர் மாதம் 21, 2021  அன்று மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசியான கும்ப ராசியில் தனது சொந்த வீட்டில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார்.  குருவிற்கு 5,7, மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 5, 7,,மற்றும் 9 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும் என்று காணலாம் வாருங்கள். குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் உறவு சுமுகமாக இருக்கும். குல தெய்வ வழிபாடு தடையின்றி  நடக்கும்.  குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடை பெறும். குழந்தைப் பேறு பெறும் பாக்கியம் கிட்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயமும், தன லாபமும் உண்டு. காதலர்களுக்கு காதல் கை கூடும், தாமதப்பட்ட திருமணங்கள் இந்தக் காலக் கட்டத்தில் கை கூடும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வெளியூர்களுக்குச் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள்.  நிதிநிலை அதிர்ஷ்டம் அளிக்கும் வகையில் இருக்கும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். ஊக வணிகம் மற்றும் பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை அளிக்கும்.  அரசுத் துறையில் பணி புரிபவர்களுக்கு அதிக பொறுப்புகள் இருக்கும். தனியார் துறை அலுவலர்கள் சிறப்பாகப் பணியாற்றி பாராட்டைப்  பெறுவார்கள். மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களின் ஆதரவு கிட்டும். கூட்டுத் தொழில் மூலம் லாபம் கிட்டும். பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். வயிற்றுப்புண் மற்றும் அஜீரணக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.  உங்கள் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. 

பரிகாரங்கள்: குலதெய்வக் கோவிலில் அன்னதானம் செய்வது சிறப்பு.   வியாழக்கிழமைகளில் பசுவிற்கு வாழைப்பழம் உண்ணக் கொடுக்கலாம். 
கோவில் அர்ச்சகர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம். 

குரு பெயர்ச்சி -2021 – மீன ராசி பலன்கள் 

மீன ராசி அன்பர்களே! உங்கள் ராசி மற்றும் 10ஆம் வீட்டிற்கு அதிபதியாக விளங்கும் குரு பகவான் நவம்பர் மாதம் 21, 2021  அன்று மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீடான  கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். பன்னிரண்டாம் இடம் என்பது அயன, சயன, போக ஸ்தானம் ஆகும்.    குருவிற்கு 5,7, மற்றும் 9 என மூன்று பார்வை உண்டு. அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கும் குரு உங்கள் ராசியின் 4, 6,,மற்றும் 8 ஆம் ராசியைப் பார்வையிடுகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்காக என்னென்ன கொண்டு வரும் என்று காணலாம் வாருங்கள். குடும்ப உறவுகள் சீராகவும் அமைதியாகவும் இருக்க நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. சுயநலமின்றி செய்லபடுவதன் மூலம் குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் இருக்கும். காதலில் கடுமையான முயற்சிக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் எழும் வாய்ப்பு உள்ளது. வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.  பொருளாதார நிலை அதிருப்தி அளிக்கும். கடின உழைப்பின் மூலம் தான் ஏற்றம் பெற இயலும். அசையாச் சொத்துக்கள் வாங்க செலவு மேற்கொள்வீர்கள். அந்நிய முதலீடுகள் லாபம் அளிக்கும். சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.  உத்தியோகம் பார்ப்பவர்கள் மந்தமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். கடின உழைப்பு மேற்கொண்டாலும்  அதற்குரிய பலன் கிடைப்பது கடினம். தொழிலில் போட்டியாளர்களை வெல்வீர்கள். கூட்டுத் தொழில் லாபம் அளிக்கும்.  பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தவற வாய்ப்பு உள்ளது என்பதால் கவனமாகப் படிக்க வேண்டும். உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் கவனிப்புத் திறன் அதிகரிக்கும். தொழில் நுட்பத் துறை சார்ந்த ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள். கண் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் தூக்கக் குறைபாடுகள் போன்ற உபாதைகளை சந்திக்க நேரும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

பரிகாரங்கள்: தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் வாங்குவது வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும்.  வியாழக்கிழமைகளில் மஞ்சள் ஆடை அணிவது நல்லது. வியாழக்கிழமைகளில் சிவாலயம் சென்று வருவது சிறப்பு. 

banner

Leave a Reply

Submit Comment