AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

ரிஷபம் ராசி பலன் பிப்ரவரி 2021 | February Month Rishabam Rasi Palan 2021

January 7, 2021 | Total Views : 560
Zoom In Zoom Out Print

ரிஷபம் ராசி பலன் பிப்ரவரி 2021 பொதுப்பலன்:

ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் வரவேற்கத்தக்க  மாதமாக இருக்கும். வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நீங்கள் புதிய வாய்ப்புகளையும் நன்மையான பலன்களையும் பெறுவீர்கள். பணி செய்யும் ரிஷப ராசி அன்பர்கள் இந்த மாதம்  சிறப்பாக பணியாற்றுவீர்கள். குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும்.  உங்கள் வாழ்க்கைத் துணைக்கென நேரம் ஒதுக்கி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் போட்டிகளை சந்திப்பீர்கள். முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை. எதிர் கால நலன் கருதி உங்கள் செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் கடுமையாக உழைத்துப் படிக்க வேண்டும். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல்/ குடும்ப உறவு :

திருமணமான தம்பதிகளுக்கு இடையில் தொட்டதுக்கெல்லாம் சண்டை சச்சரவு வர வாய்ப்பு உள்ளது.  சிறிய விஷயங்களுக்கெல்லாம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எனவே வாழ்க்கைத் துணையிடத்தில் வாக்கு வாதங்களை மேற்கொள்ளாதீர்கள்.  நீங்கள் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் கணவன் மனைவி உறவில் ஒற்றுமை கூடும். உங்கள் குடும்பத்திற்கென நேரம் ஒதுக்கி அவர்களுடன் கலந்து உறவாடுவதன் மூலம் உங்கள் உறவு மேம்படும். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண :சுக்கிரன் பூஜை 

நிதிநிலை :

ரிஷப ராசி அன்பர்கள் அனைவருக்கும் இது சிறந்த மாதமாக இருக்கும். மருத்துவத் தொழில், சட்டம் மற்றும் எழுத்துத் துறையில் இருப்பவர்கள் இந்த மாதம் கணிசமாக பணம் சம்பாதிப்பார்கள். உங்கள் திறமை மற்றும் படைப்பாற்றல் மூலம் நீங்கள் வருமானம் ஈட்டுவீர்கள். வியாபரிகள் சிறந்த லாபம் காண்பார்கள்.  உங்கள் கனவுகள் யாவும் நிறைவேறும் மாதமாக இந்த மாதம் இருக்கும். புதிய தொழில் முதலீடுகளை இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ளலாம்.  

உங்கள் திநிலை மேம்பட : லக்ஷ்மி பூஜை 

வேலை :

பணியில் இருக்கும் ரிஷப ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறப்பாக பணியாற்றுவார்கள். உங்கள் திறமையை வெளிக்காட்டுவது மட்டுமின்றி நீங்கள் சிறிது கடுமையாக உழைக்க வேண்டும். இந்த மாதம் உங்களுக்கு சிறந்த மாதமாக இருக்கும். என்றாலும் இந்த மாதம் நீங்கள் பணியில் சிறந்து விளங்க கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் பணியாற்றும் விதம்  உங்கள் மேலதிகாரிகளுக்கு பிடித்தமானதாக இருக்கும் என்றாலும் அவர் உங்கள் பலவீனங்களையும் சுட்டிக் காட்டுவார். எனவே பொறுமையைக் கடைபிடியுங்கள். உங்கள் பலவீனங்களை பலமாக மாற்றிக் கொள்ளுங்கள். பணி நிமித்தமான பயணங்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் உங்களுக்கு அளிக்கப்படும். உங்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்விற்கு நீங்கள் இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருக்க வேண்டும்.  

தொழில் :

சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த மாதம் தொழில் சிறப்பாக அமையும். இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். தொழிலில்  நீங்கள் கஷ்டம் என்று கருதும் செயல்களைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.  நீங்கள் புதிய தொழிலை மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம்    உங்கள் வருமானம் பெருகும். கடன்கள் அடையும். ஆனால் நீங்கள் கடினமாகவும் கூடுதலாகவும் உழைக்க வேண்டியிருக்கும். 

தொழில் வல்லுனர்கள் :

நீங்கள் இந்த மாதம் தொழிலில் சிறந்த வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் வளர்ச்சி தொடர்ந்து  முன்னேற்றப் பாதை யில் செல்ல பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டியவற்றைப் பேச வேண்டும். இதன் மூலம் நீங்கள் பிரச்சினைகளை தவிர்க்க இயலும். உங்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : குரு பூஜை

ஆரோக்கியம் :

இந்த மாதம் நீங்கள் தாமரை இலைத் தண்ணீர் போல  பிரச்சினை தரும் மனிதர்கள் மற்றும் சூழ்நிலையில் இருந்து விலகி இருப்பதன் மூலம் மன அமைதியும் உடல் ஆரோக்கியமும் கிட்டும். தொண்டைப் பகுதியில் அல்லது கழுத்துப் பகுதியில் பிரச்சினை ஏற்பட வாய்புள்ளது. சிறிய பிரச்சினை என்றாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள். சரியான நேரத்தில் முறையான உணவை உண்ணுங்கள். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : ருத்ரன் பூஜை 

மாணவர்கள் :

பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாக கல்வி கற்பீர்கள். உங்கள் ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகள் உங்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குவார்கள்.  சட்டம் மற்றும் பொருளாதார அல்லது தொழில் சார்ந்த கல்வியில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த வெற்றி காண்பார்கள். மேல் படிப்பு வேண்டி வெளி நாடு செல்ல விரும்பும் மாணவர்கள்  இந்த மாதம் கிடைக்கும் பொன்னான வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது சிறப்பு.  

கல்வியில் மேன்மை பெற : புதன் பூஜை 

சுப நாட்கள் : 8, 9, 10, 11, 12, 13, 18, 19, 20, 23, 26, 27, 28, 29, 30.
அசுப நாட்கள் : 1,2,3, 4, 5, 6, 7, 14, 15, 16, 17, 21, 22, 24, 25, 31

banner

Leave a Reply

Submit Comment