மிதுனம் ராசி பலன் பிப்ரவரி 2021 | February Month Mithunam Rasi Palan 2021

மிதுனம் ராசி பலன் பிப்ரவரி 2021 பொதுப்பலன் :
மிதுன ராசி அன்பர்களே! இந்தமாதம் நீங்கள் சுயநலம் இன்றி பொது நலத்துடன் செயல்பட்டால் குடும்ப மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி பிறரின் ஆலோசனகளைக் கேட்டு நடந்து கொள்வதன் மூலம் உங்கள் பணிகளை சிறப்பாக செய்ய இயலும். இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை ஸ்திரமாக இருக்க வாய்ப்பில்லை. எனவே வீட்டில் பணம் சம்பந்தமான முடிவுகளை தனித்து எடுக்காதீர்கள் அலுவலகத்திலும் உங்கள் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளுங்கள். பணியிடத்தில் நீங்கள் சில சவால்களை சந்திக்க நேரும். என்றாலும் நீங்கள் முன்னேற்றம் காண இயலும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் விடா முயற்சி என்ற கொள்கையை பின்பற்றினால் வெற்றி பெற இயலும். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்ப உறவு :
திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்கள் மனதிற்கு பிடித்த மணாளனை கைப்பற்ற கெட்டி மேளம் கொட்டும் நேரமாக இந்த மாதம் அமையும். உங்களுக்கு திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுக்க உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் ஆதரவு தருவார்கள். திருமணமான தம்பதிகள் கருத்து வேறுபாடுகள் ஏதும் இன்றி கருத்தொருமித்து வாழ்வார்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை:
ஸ்திரமான நிதிநிலை இல்லாத காரணத்தால் உங்கள் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்காது. அதிகசெலவுகள் காரணமாக உங்கள் கையிருப்பு கரையும். திடீர் செலவுகள் ஏற்படவாய்ப்புள்ளது. அதனை சமாளிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.. என்றாலும் செலவுகளை சரிகட்ட நீங்கள் கடினமாக உழைத்துப் பணம் சம்பாதிப்பீர்கள். எதிர் கால நலன் கருதி கொஞ்சம் பணத்தை சேமிக்கவும் செய்வீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை
வேலை :
பணியில் இருக்கும் மிதுன ராசி அன்பர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பணிகள் சவால் மிக்கதாக இருக்கக் காண்பார்கள். பணியில் நீங்கள் காணும் முன்னேற்றம் திருப்தி அளிக்கும் வகையில் இருக்க வாய்ப்பில்லை. பணியிடத்தில் மற்றவர்கள் உங்களுக்கு மறைமுகமாக உதவுவார்கள். பிரச்சினைகள் ஏதும் வந்தால் நீங்கள் சுமுகமாக பேசிக் கொள்வதன் மூலம் அதனை தீர்த்துக் கொள்ளலாம்.
தொழில் :
தொழில் செய்யும் மிதுன ராசி அன்பர்கள் இந்த மாதம் சாதகமான பலன்களை எதிர்பார்க்க இயலாது. குறிப்பாக கூட்டுத் தொழில் செய்பவர்கள் தங்கள் கூட்டாளிகள் மூலம் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். இதனால் உங்கள் வளரச்சி தடைபடும். நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் தான் வெற்றி காண இயலும். உங்கள் நண்பரே தொழில் கூட்டாளியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அவரிடம் ஏமாற வாய்ப்பு உண்டு. தொழிலில் லாபம் காண பேராசைப்பட்டால் இந்த மாதம் நீங்கள் சில இழப்புகளை சந்திக்க நேரும்.
தொழில் வல்லுனர்கள் :
வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதம் நீங்கள் எந்த வாக்குறுதியையும் அளிக்காதீர்கள். புதிய தொழில் மேற்கொள்ளும் எண்ணம் இருந்தால் அதனை இந்த மாதம் மேற்கொள்ளாதீர்கள். கையில் இருக்கும் பணியை முதலில் முடிப்பதற்கு கவனம் செலுத்துங்கள். இந்த மாதம் உங்களுக்கு உடன் பணி புரிபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : புதன் பூஜை
ஆரோக்கியம் :
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும். உங்கள் ஆரோக்கியம் சீராக இருந்தால் தான் நீங்கள் சிறப்பாக செயலாற்ற இயலும். அதிக பணிகளை அல்லது பொறுப்புகளை இந்த மாதம் ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அதனால் ஏற்படும் பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. பணிகளில் இருந்து சிறிய விடுப்பு எடுத்துக் கொண்டு புத்துணர்ச்சி பெற்று மீண்டும் உங்கள் பணியைத் தொடருங்கள்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : ருத்ரன் பூஜை
மாணவர்கள் :
மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதமிது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். எனவே உங்கள் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் கவனமுடன் படிக்க இயலும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கூடுதல் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். சட்டம் மற்றும் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாக கல்வி பயில்வார்கள்.
கல்வியில் மேம்பட : சனி பூஜை
சுப நாட்கள் : 1,2,3,4,5, 13, 14, 16, 17, 18, 19, 26, 27, 28, 30, 31.
அசுப நாட்கள் : 6, 7, 8, 9, 10, 11, 12, 15, 20 21, 22, 23, 24, 29.
