Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மேஷம் ராசி பலன் பிப்ரவரி 2021 | February Month Mesham Rasi Palan 2021

January 7, 2021 | Total Views : 740
Zoom In Zoom Out Print

மேஷம் ராசி பிப்ரவரி 2021 பொதுப்பலன்கள்: 

மேஷ ராசியினரைப் பொறுத்தவரை இந்த மாதம் வரவேற்கும் மாதமாகத் தான் இருக்கும் எனலாம். பல விஷயங்களில் நீங்கள் சாதகமான பலன்களைப் பெற இயலும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்திலும் பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். நீங்கள் திறம்பட பணியாற்றி சாதனைகளைப் புரிவதற்குக் கூட வாய்ப்பு உள்ளது. பெயரும் புகழும் உங்களை நாடி வரும் என்று கூறினால் கூட மிகை ஆகாது. அனுகூலமான பணியிடச் சூழல் ஆதரவான நண்பர்கள் என்றால் கேட்கவும் வேண்டுமா? இதற்கு மேலும் மெருகு ஊட்டும் வகையில் உங்கள் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். தமிழ் மாத ஜோதிடம் குறித்த முழு விவரம் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள் 

காதல் உறவு :

காதல் என்றாலே இனிமை தானே. மேஷ ராசியினருக்கு இந்த மாதம் காதல் உறவு கரும்பு போல இனிக்கும். சில மேஷ ராசி இளம் வயதினருக்கு மனதில் காதல் அரும்பு மலரும். கணவன் மனைவி  இருவரும் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமையுடன் வாழ்க்கை நடத்துவீர்கள். மனம் ஒன்றுபட்டால் அன்னியோன்யத்திற்கு கேட்கவும் வேண்டுமா?  உங்களின் அழகு மற்றும் கலை நயம் எதிர்பாலினத்தவரை ஈர்க்கும் வகையில் இருக்கும்.  

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரம் பூஜை 

நிதிநிலை :

நிதிநிலையைப் பொறுத்தவரை இது உங்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம் என்று கூறலாம். நீங்கள் பொருளாதாரத்தில் படிப்படியாக ஏற்றம் காணுவீர்கள். உங்கள் வருமானம் பெருக உங்கள் நண்பர் ஒருவர் காரணமாக இருப்பார். அல்லது அவர் மூலம் உங்களுக்கு நிதி சம்பந்தமான ஆலோசனைகள் கிட்டும். பங்கு நிறுவனங்களில் முதலீடு செய்ய இந்த மாதம் ஏற்ற காலமாக இருக்கும். 

வேலை:  

நீங்கள் தடைகள் ஏதுமின்றி பணியில் முன்னேற இந்த மாதம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். பணியிடச் சூழல், சக பணியாளர்கள், மேலதிகாரிகள் என அனைத்து பணியிட அம்சங்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு மேலதிகாரிகளின் அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். என்றாலும் நீங்கள் உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பல புதிய பணிகள் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் வருமானமும் உயரும். பணி நிமித்தமான பயணங்கள் அனுகூலமாக இருக்கும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் பணியாற்றி தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்துவீர்கள் பணியிடத்தில் உங்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிட்டும். 

தொழில்:

தொழில் என்றால் போட்டிகளும் பொறாமைகளும் இருக்கத் தானே செய்யும். அத்தகைய சவால் நிறைந்த தருணங்களை நீங்கள் சந்திக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். நீங்கள் தொழிலில் பல புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் நீங்கள் வெற்றிப் படிகளின் உச்சத்தை அடைவீர்கள். உங்கள் தொழிலை சிறப்புடன் நடத்த புதிய ஆட்களை பணிக்கு நியமிப்பீர்கள். 

தொழில் வல்லுனர்கள் :

மேஷ ராசி தொழில் வல்லுனர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி  நீங்கள் முன்னேற்றமும் காண்பீர்கள். தொழிலில் உரிய அங்கீகாரத்தையும் பெறுவீர்கள்.  உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறப்பாக செயலாற்றி குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். தொழில் மூலம் சிறந்த ஆதாயம் காண்பீர்கள். பிறரின் விமர்சனங்களை இலேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் வெற்றி காண : சூரியன் பூஜை 

ஆரோக்கியம் :

சுவர் இருந்தால் தான்  சித்திரம் வரைய முடியும் என்பது போல நல்ல ஆரோக்கியம் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும் என்பதை உணர்ந்து நீங்கள் உங்களின் ஆரோக்கியத்தைக்  காத்துக் கொள்வீர்கள்.  இதற்கு முன்பு நீங்கள் சந்தித்து வந்த அஜீரணக் கோளாறு உபாதைகள் நீங்கும்.  உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள்  மேலும் வலுப்படுத்திக் கொள்ளலாம். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை 

மாணவர்கள் :

மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில்வார்கள். குறிப்பாக உயர்  கல்வி படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்  மற்றும் பெற்றோரின் ஆதரவைப் பெறுவார்கள். சிறப்பாக  கல்வி பயின்று வெற்றி காண்பார்கள். படித்து முடித்து வேலை தேடும் மாணவர்கள் சிறந்த சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கப் பெறுவார்கள். வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பார்கள். 

கல்வியில் மேம்பட :  அனுமான் பூஜை 

சுப நாட்கள் :  2,3, 4 8, 9, 19, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29
அசுப நாட்கள் :  1, 5, 6, 7, 14, 15, 16, 17, 18 10, 11, 12, 13, 23, 30, 31

banner

Leave a Reply

Submit Comment