AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

துலாம் பிப்ரவரி மாத ராசி பலன் 2020 | February Matha Rasi Palan 2020 Thulam

January 28, 2020 | Total Views : 1,026
Zoom In Zoom Out Print

துலாம் ராசி பொதுப்பலன்கள்

துலாம் ராசி அன்பர்களே! இது உங்களுக்கு, வரவேற்கத்தக்க மாதமாக அமையும். தன வரவு தாராளமாக இருக்கும். தொழில் துறை, இடையிடையே சிறிது மந்தமாக இருந்தாலும், அதில் அதிக லாபங்களும் கிடைக்கும். சிலருக்கு, தாய் வழியில் சொத்துக்கள் சேரும். இளைய சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும். தகப்பனருடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். அவர் உடல் நிலையில் முன்னேற்றமும் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு வர வாய்ப்புக்கள் அதிகம். கணவன், மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். இதனால் இல்லறம் இனிக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படலாம். சிலர் வெளியூர்களுக்கு உல்லாசப் பயணங்களும் செல்லக்கூடும். எனினும், காதல் விவகாரங்களை இந்த மாதம் தள்ளிப் போடுவது நல்லது.

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

துலாம் ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை

காதல் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கவும். இந்த மாதம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். அவருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். குடும்பத்தினருடனும் நல்லுறவு நிலவும். ஆனால், தவறான அணுகுமுறை காரணமாக, திருமணத்துக்கான சில நல்ல வரன்களை நீங்கள் இழக்க நேரிடலாம்.

துலாம் ராசி நிதி

நிதி நிலை சிறப்பாக இருக்கும். தேவைப்படும் நேரத்தில் நண்பர்களிடமிருந்து பண உதவியும் கிடைக்கும். செலவினங்களை கவனமாகத் திட்டமிடுவது பயன் தரும். பிற செலவுகளைக் குறைப்பதன் மூலம், உங்கள் கடன்களையும் நீங்கள் தீர்க்க முடியும்.

துலாம் ராசி வேலை

பணியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான காலம். எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உங்கள் நடவடிக்கைகள் அமையும். உங்கள் நேர்மையும், அர்ப்பணிப்பும் மேலதிகாரிகளின் பாராட்டு பெறும். பணியிடத்தில் உங்கள் மதிப்பை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பும் உங்களைத் தேடி வரக்கூடும். நீங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்த பணிக்கான உரிய அங்கீகாரமும் கிடைக்கும்.

துலாம் ராசி தொழில்

உங்கள் தொழில் முன்னேற்றம் உங்கள் திறமையை சார்ந்தே அமையும். இருப்பினும், உங்கள் விடாமுயற்சி, உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். தனித்தன்மையுடன் செயல்பட்டு பல தடைகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள்.

                                                                                   மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

துலாம் ராசி தொழில் வல்லுநர்

துலாம் ராசி தொழில் வல்லுநர்கள் இந்த மாதம் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவதால், இப்பொழுது உங்கள் திறமைகள் வெளிப்படும். நேரத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப உங்கள் செயல்களை திட்டமிடுவது, அதிக நன்மைகள் தரும்.

துலாம் ராசி ஆரோக்கியம்

உடல்நிலை சாதாரணமாக இருக்கும். பதட்டம் காரணமாக சிலருக்குக் கால் மூட்டுகளில் வலி ஏற்படலாம். கண்டிப்பான உணவுக் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதும், அவ்வப்பொழுது மருத்துவ ஆலோசனை பெறுவதும், ஆரோக்கியத்தைப் நன்கு பேணிக் காக்க உதவும்.

துலாம் ராசி மாணவர்கள்

கல்வியில் கடும் முயற்சிக்குப் பின்னரே எதிர்பார்த்த பலன் கிடைக்கும். நீங்கள் பாடங்களை நன்கு கற்று அறிந்திருந்தாலும், அதை உரிய இடத்தில், முறையாக வெளிப்படுத்தத் திணறுவீர்கள். ஒருமித்த கவனம், கூடுதல் நேரம் எடுத்துப் படிப்பது, படிப்பு தொடர்பான தகவல் பறிமாற்றம் போன்றவை மூலம், இது போன்ற பிரச்சினைகளை வெற்றி கொள்ளலாம்.

சுப தினங்கள் : 6,7,10,11,24,25 அசுப தினங்கள் : 4,5,12,13,26,27,28

                                                                                       மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

துலாம் ராசி பரிகாரம்

அன்னை மஹாலக்ஷ்மி மற்றும் ஸ்ரீ ராகவேந்திரர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

சனி, குரு, ராகு, கேது போன்ற கிரக தேவதைகளுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.

பசு மற்றும் கால்நடைகளுக்கு உணவு அளித்தல். பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்து, ஆவர்களது ஆசீர்வாதம் பெறுதல்.

banner

Leave a Reply

Submit Comment