Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மிதுனம் பிப்ரவரி மாத ராசி பலன் 2020 | February Matha Rasi Palan 2020 Mithunam

January 28, 2020 | Total Views : 1,472
Zoom In Zoom Out Print

மிதுன ராசி பொதுப்பலன்கள்

மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ளும் எல்லா செயல்களிலும் சாதாரண பலன்களே கிட்டும். குறிப்பாக, தொழில் சார்ந்த பணிகளில் இப்பொழுது நீங்கள் கவனமாக இருப்பது அவசியம். எனினும், குடும்ப வாழ்க்கை அமைதியாகவே செல்லும். குடும்ப உறுப்பினர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். ஆனால், நீங்கள் பலவீனத்தால் பாதிக்கப்படலாம். எனவே, உங்கள் உடல் நலனில் சிறப்பு கவனம் தேவைப்படம். எனினும், ஆரோக்கியம் படிப்படியாக சீரடையும், கவலை வேண்டாம். மேலும், தற்பொழுது செலவுகளும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே, கட்டுப்பாடு அவசியம். இந்த நேரத்தில், எந்த நிலையிலும் உங்கள் கடமைகளை நீங்கள் சரியாக நிறைவேற்ற வேண்டும். சூழ்நிலைகள், சில சமயங்களில் உங்கள் பொறுமையை சோதிக்கலாம். ஆயினும், எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறான அபிப்ராயங்கள், உங்கள் முயற்சியால் தற்பொழுது விலகும்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

மிதுன ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை

காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் துணையுடன் உங்கள் உறவு இணக்கமாக மாறும். உங்கள் முயற்சியால், உங்கள் காதல் திருமணமாக மலரும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையிலும், வாழ்க்கைத் துணையோடு உங்கள் உறவு நெருக்கமாகவும், உறுதியாகவும் அமையும்.

மிதுன ராசி நிதிநிலை

பொருளாதார நிலை சீராக இருக்கும். ஏற்கனவே கொடுத்துள்ள கடன் தொகைகளை, நீங்கள் வசூல் செய்யவும் இயலும். தேவை ஏற்பட்டால், நண்பர்களிடமிருந்து உங்களுக்கு நிதி உதவியும் கிடைக்கும். எனினும், அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற, நீங்கள் வீண் செலவு செய்ய நேரிடலாம். எச்சரிக்கை தேவை.

மிதுன ராசி வேலை

இது உங்களுக்கு ஒரு சாதாரண காலமாக இருக்கும். கடின முயற்சி மூலம், உங்களது அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ள முடியும். உடன் பணியாற்றும் ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். எனினும், வழக்கமான வேலைகளையே செய்து கொண்டிருப்பதை நினைத்து எரிச்சல் அடைய வேண்டாம்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மிதுன ராசி தொழில்

தொழில் ஒப்பந்தங்கள் மூலம் இந்த மாதம் நல்ல பலன் காண இயலாமல் போகலாம். உங்கள் கூட்டாளிகள், பணிகளை நிலுவையில் வைத்திருக்கும் சாத்தியமும் உள்ளது. எனவே, சில பணிகளை நீங்களே முன் நின்று பொறுப்பு எடுத்து நடத்தினால் மட்டுமே, வணிகத்தில் முன்னேற்றம் காண முடியும்.

மிதுன ராசி தொழில் வல்லுநர்

இந்த மாதம், பொதுவாக, உங்கள் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும். வேலையில் தாமதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனினும் அவற்றைக் கண்டு நீங்கள் நம்பிக்கை இழந்து விடாமல் உங்கள் முயற்சிகளைத் தொடர்வது, நன்மை தரும். நேரத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப உங்கள் செயல்களை திட்டமிடுவதும் நலன் பயக்கும்.

மிதுன ராசி ஆரோக்கியம்

மிதுன ராசி அன்பர்களின் ஆரோக்கியம், இந்த மாதம் சிறப்பாகவே காணப்படுகிறது. மிகவும் சுறுசுறுப்புடனும், ஆற்றலுடனும் நீங்கள் பணிகளைச் செய்வீர்கள். எனினும், உங்கள் உடல் நலத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நல்ல ஒய்வும், போதுமான தூக்கமும் உடலுக்கு நலம் பயக்கும்.

மிதுன ராசி மாணவர்கள்

படிப்பதற்கும், சிறந்த கல்வி அனுபவம் பெறுவதற்கும் இது சரியான நேரம் ஆகும். உங்கள் திறந்த மனமும், பக்குவமும் உங்கள் தனித் திறமைகளையும், நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள் செயல்திறனால் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

சுப தினங்கள் : 1,2,3,14,15,24,25,29

அசுப தினங்கள் : 4,5,16,17,18,21,22,23

பரிகாரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

புதன், சனி. ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.

மற்றவர்கள் திருமணத்திற்கு உதவி செய்தல்.

ஏழை, எளியோருக்கு அன்னதானம் அளித்தல்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

banner

Leave a Reply

Submit Comment