சிம்ம ராசி பொதுப்பலன்கள்
சிம்ம ராசி அன்பர்களுக்கு, இந்த மாதம் பல வகைகளிலும் அனுகூலமான ஒன்றாக அமையும். கடினமாக உழைத்து, அதிக உற்பத்தித் திறனை அடையும் காலம் இது. தொழில் ரீதியாக, நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். பயணங்கள் மகிழ்ச்சியையும், புதிய அனுபவத்தையும் தரும். தொலைதூரத் தொடர்புகள் புதிய நட்புகளை உருவாக்கித் தர வாய்ப்புள்ளது. இவை வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல ஆதரவாக இருக்கும். சூழ்நிலைகள், சில சமயங்களில், உங்கள் பொறுமையை சோதிக்கலாம். ஆயினும் எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். நண்பர்களுடன் சிறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. குடும்ப விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
சிம்ம ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை
காதலைப் பொறுத்தவரை, இந்த மாதம் நீங்கள், நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். உங்களில் சிலரது காதல், திருமணத்தில் முடியும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக, உங்கள் காதலும், உறவும் உண்மையானதாக இருக்கும். இல்லற வாழ்விலும் நீங்கள் இனிமை காணலாம். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.
சிம்ம ராசி நிதி
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செய்தொழிலில் அதிக லாபங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி தொடர்பான அனைத்து விஷயங்களிலும் நீங்கள் படிப்படியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். அதனால் உங்கள் சேமிப்பை பெருக்குவதற்கு இது சரியான நேரம் எனலாம்.
சிம்ம ராசி வேலை
வேலையில் இருப்பவர்களுக்கு இது சிறப்பான காலமாகும். சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த நேரத்தில், உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்களிடம் நட்புடன் பழகுவதும், முடிந்தவரை பணிகளை நிலுவையில் வைக்காமல், விரைந்து முடிப்பதும் நன்மை தரும்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
சிம்ம ராசி தொழில்
பொதுவாக, இந்தக் காலகட்டத்தில் உங்கள் தொழில் முன்னேற்றம், உங்கள் திறமையை சார்ந்து அமையும். எனினும், உங்கள் துணிவான அணுகு முறையும், சுதந்திரமான இயல்பும் உங்களது தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இப்பொழுது நீங்கள் எந்தப் பணியை எடுத்துச் செய்தாலும், அதில் சிறப்பாகவே செயல்படுவீர்கள்.
சிம்ம ராசி தொழில் வல்லுநர்கள்
சிம்ம ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது அனுகூலமான மாதமாகும். சில தாமதங்கள் ஏற்பட்டாலும், தொழில் முன்னேற்றம் காணும். பதவி உயர்வு அல்லது புதிய வேலை போன்றவற்றிற்கான வாய்ப்புகளும் உருவாகும். உங்களுடைய செயல்திறன் மூலம் நன்மையான பலன்களை அடையலாம்.
சிம்ம ராசி ஆரோக்கியம்
இந்தக் காலகட்டத்தில், உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சிறு பிரச்சினை என்றாலும் அதை உடனே கவனித்து விடுவது அவசியம். குறிப்பாக, எண்ணெய் அதிகமுள்ள உணவுகள் உட்கொள்வதன் காரணமாக, செரிமானப் பிரச்சினைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். பச்சைக்காய்கறிகள் உட்கொள்வது, இந்த தருணத்தில் உங்களுக்கு ஆற்றலும், சுறுசுறுப்பும் அளிக்கும்.
சிம்ம ராசி மாணவர்கள்
மாணவர்களைப் பொறுத்தவரை, இது ஒரு சாதாரணமான காலமாக இருக்கும். உங்கள் கல்வி சீராகவே அமையும். வாழ்க்கையில் புதிய அனுபவங்களை வழங்கக்கூடிய பயணங்களை சிலர் மேற்கொள்ள நேரிடலாம். நண்பர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது நன்மை தரும்.
மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்
சுப தினங்கள் : 1,2,3,6,7,19,20
அசுப தினங்கள் : 8,9,12,13,21,22,23,26,27,28
சிம்ம ராசி பரிகாரங்கள்
சிவபெருமான் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
சூரியன், சனி, ராகு, கேது போன்ற நவக்கிரகங்களை, ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
குழந்தைகளின் கல்விக்கு உதவுதல். நோயாளிகளுக்கு மருத்துவ உதவி செய்தல்.
**

Leave a Reply