இந்த மாதம் உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அது பெரிய அளவில் பாதிப்பை அளிக்காது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வந்து போகும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. இந்த மாதம் புதிய ஆடைகள் மற்றும் வாகனம் வாங்கலாம். இந்த மாதம் நிலம் அல்லது சொத்து வாங்கும் யோகம் உண்டு. கடன் வேண்டி விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.