AstroVed Menu
AstroVed
search
search
x

மிதுனம் டிசம்பர் மாத ராசி பலன் 2022 | December Matha Mithunam Rasi Palan 2022

dateNovember 10, 2022

மிதுனம் டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2022

துன ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிறைந்து இருக்கும். குடும்ப உறவில் ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும். காதலர்களுக்கு காதல் கைகூடும். உங்கள் நிதிநிலை ஏற்றமுடன் இருக்கும். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். நீங்கள் பணிபுரியும் இடத்தில் அனைவரிடமும் இணக்கமான சூழ்நிலை ஏற்படுவதால் உங்களுக்கு அனைவர் மத்தியிலும் நல்ல பெயர் உண்டாகும். தொழில் சிறப்பாக நடக்கும். இந்த மாதம் அதிக பணிச்சுமை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மிதுனம்  டிசம்பர் மாத ராசி பலன் 2022 | December Matha Mithunam Rasi Palan 2022

காதல் / குடும்பம்:

காதலர்களுக்கு இடையேயான உறவு நிலை சிறக்கும். காதலர்களுக்கு இடையே அன்னியோன்யம் கூடும். தம்பதிகளுக்கு இடையே நல்லிணக்கம் அதிகரித்து காணப்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அன்பும் அமைதியும் நிலவும். குழந்தைகளுக்கு இடையேயான உறவு நிலை நன்றாக இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

உங்கள் பொருளாதாரம் இந்த மாதம் ஏற்றமுடன் இருக்கும். கடந்த காலத்தில் நீங்கள் பிறருக்கு கொடுத்த கடன் தொகைகளை இந்தமாதம், வசூல் செய்வீர்கள். இதன் மூலம் உங்கள் நிதிநிலை உயரும்.  வீட்டிற்கு வெள்ளை அடித்தல் மற்றும் ஹோமம் செய்தல் போன்ற வகைகளில் செலவுகள் ஏற்படும். கல்லூரியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகள் அதிகரித்து காணப்படும். பங்கு மற்றும் பொருள் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பங்கு வர்த்தக முதலீடுகள் செய்யவதை தவிர்ப்பது நல்லது.

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை

வேலை:

பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்றாலும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்களுக்கு கூடுதல் பணிகள் வழங்கப்படும். சக பணியாளர்களிடம் சுமூகமான உறவு மற்றும் தோழமை உணர்வு நீடிக்கும். தொழிற்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் புதிய வழிமுறைகளை பின்பற்றி வெற்றிகாண்பீர்கள்.

தொழில்:

இந்த மாதத்தில் உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். அதிலும் குறிப்பாக கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஒரு சிலர் வெளிநாட்டில் தங்கள்  தொழிலை நடத்தும் வாய்ப்பினைப் பெறுவார்கள்.. பூ வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய தொழில் முதலீடுகள் செய்வதற்கும் புதிய தொழிலை தொடங்குவதற்கும் இந்த மாதம் ஏற்றதாக உள்ளது.

தொழில் வல்லுனர்கள்:

மிதுன ராசி தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் சாதகமான பலன்கள் கிட்டும். உங்கள் தொழிலை நீங்கள் சிறப்பாக நடத்திச் செல்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். சிறந்த சேவை செய்து அவர்களின் பாராட்டுதலையும் பெறுவீர்கள்.  மருத்துவத் துறையில் உள்ள தொழில் வல்லுனர்களுக்கு சுயதொழில் தொடங்குவதன் மூலம் அதிக தன லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சட்டத்துறை நிபுணர்கள் தங்கள் உத்தியோகத்தில் சாதனைகளைப் புரிவதற்கு வாய்ப்பு உள்ளது.

உத்தியோகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு கணபதி பூஜை

ஆரோக்கியம்:

மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைகிறது. இந்த மாதம் அதிகப் பணிச்சுமை காரணமாக நீங்கள் பதட்டம் கொள்வீர்கள். இது உங்கள் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். கை வலி மற்றும் தோள்பட்டை வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் மனது மற்றும் தேகம் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்வது நன்மை பயக்கும்.

உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை

மாணவர்கள்:

மிதுன ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூடும். பொறியியல் கல்வி படிக்கும் மாணவர்கள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். அறிவியல் துறையில் இளங்கலை படிப்பு படிக்கும் மாணவர்கள் வழக்கத்தை விட படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டியதாக இருக்கும்.  

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை

சுப நாட்கள்:

2, 3, 4, 5, 6, 8, 10, 11, 13, 14, 15, 18, 19, 20, 21, 28, 29.

அசுப நாட்கள்:

1, 7, 9, 12, 16, 17, 22, 23, 24, 25, 26, 27, 30, 31.

Tags Tags:

    Leave a Reply