AstroVed Menu
AstroVed
search
search

ரிஷபம் டிசம்பர் மாத ராசி பலன் 2022 | December Matha Rishabam Rasi Palan 2022

dateNovember 10, 2022

ரிஷபம் டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2022

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்ப உறவுகள் சுமுகமாக இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். உங்கள் நிதிநிலை ஸ்திரமாக இருக்கும். அயல் நாட்டுப் பயணங்கள் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். சுற்றுப்பயணம் பயணம் தொடர்பான செலவீனங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் படிப்பில் வெற்றி காண்பார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேலும் உங்கள் தாய் மற்றும் தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. 

காதல் / குடும்பம்:

காதலர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர்   பரிசுப்பொருட்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் அன்யோன்யமாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கு  இடையே புரிந்துணர்வு காரணமாக நல்லுறவு காணப்படும். நீண்ட நாட்களாக திருமணம் தடை மற்றும் தாமதம் சந்தித்தவர்களுக்கு  இந்த மாதம் திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையே உள்ள உறவுநிலை நன்றாக இருக்கும்.

திருமண முயற்சி கைகூட செவ்வாய் பூஜை

நிதி நிலை:

உங்கள் நிதிநிலை வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். இந்த மாதம் பங்கு வர்த்தகம் மூலம் நீங்கள் ஆதாயம் பெறலாம்.  பொருள் வர்த்தக முதலீடுகள் மூலம் லாபம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிட்டும். புதிய நிரந்தர வைப்பு நிதி சேமிப்பு கணக்கை துவங்குவது நன்மை பயக்கும். இந்த மாதம் நண்பர்கள் உங்களிடம் கடன் உதவியை எதிர்பார்க்கலாம். . நீங்கள் வாங்கிய கடனையும் அடைக்கும் வாய்ப்புகள் உருவாகும்.

தன நிலையில் ஏற்றம் ஏற்பட லக்ஷ்மி பூஜை

வேலை:

இந்த மாதம் உங்கள் பணியிடச் சூழல் திருப்தி தரும் வகையில் இருக்கும். என்றாலும் அலுவலகத்தில்  ஊதிய உயர்வு பதவி உயர்வு போன்ற உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற இன்னும் சிறிது காலம் நீங்கள் காத்திருக்க வேண்டும்.  அதனைப் பற்றிய பேச்சு வார்த்தைகளை இந்த மாதம் தவிர்ப்பது நல்லது.  செவிலியர் படிப்பு படித்து முடித்து வெளிநாட்டில் உத்தியோகம் தேடுபவர்களுக்கு வெளிநாட்டில் செவிலியர் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 

தொழில்:

பின்னலாடை சம்பந்தப்பட்ட கூட்டுத்தொழில் புரிபவர்களுக்கு நல்ல லாபங்கள் ஏற்படும். மொபைல் போன் விற்பனை தொழில் செய்பவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு தொழிலில் வெற்றி காண்பார்கள். உழவு தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக அமையும். நெல் மற்றும் கோதுமை விளைச்சல் அதிகமாக இருக்கும் காரணத்தினால் லாபம் அதிகரிக்கும்.

தொழில் வல்லுனர்கள்:

மனிதவள மேம்பாட்டு துறையை சார்ந்த தொழில் வல்லுனர்களுக்கு வெளிநாட்டுக்கு சென்று உத்தியோகம் பார்க்கக்கூடிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அயல் நாட்டில் பணியில் உள்ள தொழில் வல்லுனர்கள் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. ஊட்டச்சத்து உணவியல் துறையை சார்ந்த தொழில் வல்லுனர்களுக்கு தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகும்.  

உத்தியோகம் மற்றும் தொழ் உயர்விற்கு கணேசா பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களில் ஓரு சிலர் குறிப்பாக அறுபது வயதிற்கு மேற்பட்டு இருப்பவர்கள் கழுத்து வலி, சுளுக்கு மற்றும் தசை பிடிப்பு போன்ற உபாதைகளை சந்திக்க நேரும்.  கடந்த காலத்தில் இருந்த இருதயம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தலை தூக்கும் என்பதால் முழு உடல் மருத்துவ பரிசோதனைகளை செய்துகொண்டு மருத்துவ நிபுணரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லது.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை

மாணவர்கள்:

வணிகவியலில் முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் படித்து படிப்பில் வெற்றி காண்பார்கள். விலங்கியல் பாடத்தில் முதுகலை படிக்கும் மாணவர்கள் பேராசிரியர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடப்பதன் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். 

கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை

சுப நாட்கள்:

11, 13, 14, 15, 18, 19, 20, 21, 27, 28, 29.

அசுப நாட்கள்:

7, 12, 16, 17, 22, 23, 24, 25, 26, 30, 31.


banner

Leave a Reply