மகரம் டிசம்பர் மாத ராசி பலன் 2022 | December Matha Magaram Rasi Palan 2022

மகரம் டிசம்பர் மாத பொதுப்பலன்கள் 2022
மகர ராசி அன்பர்களே! உங்கள் திருமண வாழ்வில் இனிமை நிறைந்து இருக்கும். மனதில் அன்பு பொங்கும். வார்த்தைகளில் இனிமை இருக்கும். காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு ஏற்படலாம். கவனம் தேவை. உத்தியோகத்தைப் பொறுத்தவரை முன்னேற்றம் இருக்கும். இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக இருக்கும். தொழிலில் வெற்றி இலக்கை எட்டுவீர்கள். குறிப்பாக வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில் புரிபவர்களுக்கு இது சிறந்த பலன்களை அளிக்கும் மாதம் ஆகும். முறையான உடற்பயிற்சியும் சத்தான உணவும் உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும். மாணவர்கள் நன்றாகப் படித்து தேர்வில் வெற்றி காண்பார்கள்.
காதல் / குடும்பம்:
காதலர்களுக்கு இது ஏற்ற மாதம் அல்ல. கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். நீங்கள் திருமணம் ஆனவர் எனில் உங்கள் மனதில் அன்பு மலரும். வார்த்தைகளில் இனிமை இருக்கும். இதன்மூலம் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையைக் கவர்வீர்கள். இதனால் உறவில் நெருக்கமும் அந்நியோன்யமும் கூடும்.
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
உங்கள் நிதிநிலை இந்த மாதம் சாதகமாக இல்லை. பாதகமான பலன்களை தவிர்க்க வரவு மற்றும் செலவுகளில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். நீங்கள் புதிய கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவசரம் காட்டக் கூடாது. பண விஷயங்கள் குறித்த அவசர முடிவுகள் எதையும் இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ள வேண்டாம்.
நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை அனுகூலமான நிலை இருக்கும். நீங்கள் அரசுத் துறையில் பணியில் இருப்பவர் எனில் இந்த மாதம் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிட்டும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் தனியார் துறையில் உத்தியோகத்தில் உள்ளவர் எனில் நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள். உங்கள் பணிக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்று உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். கல்வித்துறை மற்றும் ஊடகத் துறையில் பணி புரிபவர்களுக்கு உத்தியோகத்தில் ஏற்றத்தை கொடுக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும்.
தொழில்:
சுய தொழில் செய்பவர்கள் இந்த மாதம் புகழின் உச்சிக்கு செல்வார்கள். பொதுவாக எந்தத்தொழிலும் இந்த மாதம் உங்களுக்கு சிறந்த வெற்றியை அளிக்கும். குறிப்பாக ஆடை மற்றும் ஆபரணத்தொழிலில் ஈடுபட்டு வரும் மகர ராசி அன்பர்கள் பெயரும் புகழும் பெறுவீர்கள். ஏற்றுமதி தொழில் தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நன்மை அளிக்கும். பால் சம்மந்தப்பட்ட வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த மாதம் சிறந்த லாபம் கிட்டும்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் சாதகமான பலன்கள் கிட்டும் என்றாலும். கடுமையாக உழைப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். அரசுத் துறையில் பணி புரியும் தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். கடுமையாக உழைப்பதன் மூலம் நீங்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
தொழில் மற்றும் உத்தியோக உயர்வுக்கு முருகன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் மத்திம வயதை கடந்த மகர ராசி அன்பர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வயிற்றுப் பகுதி அல்லது இடுப்புப் பகுதியில் பிரச்சினை ஏற்பட வாய்புள்ளது. சிறிய பிரச்சினை என்றாலும் அளடசியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள். உணவில் அதிக அளவு காய்கறி மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்வது நன்மையை அளிக்கும்.
உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக்கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு கல்வியில் வெற்றி காண்பார்கள். அறிவியல் துறையில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் மனதை ஒருமுகப் படுத்துவதன் மூலம் கவனச் சிதறலுக்கு ஆளாகாமல் தங்களை காத்துக் கொள்ளலாம். கவனமுடன் படித்தால் எளிதில் வெற்றி பெறலாம். முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
கல்வியில் வெற்றி கிடைக்க கணபதி பூஜை
சுப நாட்கள்:
2, 3, 4, 5, 6, 10, 11, 13, 14, 18.
அசுப நாட்கள்:
1, 7, 9, 12, 14, 15, 16, 17.
