Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

மிதுனம் டிசம்பர் மாத ராசி பலன் 2020 | December Matha Mithunam Rasi Palan 2020

November 9, 2020 | Total Views : 659
Zoom In Zoom Out Print

மிதுனம் டிசம்பர் மாத பொதுப்பலன்கள்:

மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் உங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும் வெற்றியும் முன்னேற்றமும் காணலாம். உங்கள் தனிபப்ட்ட வாழ்க்கை மட்டும் அன்றி வேலை மற்றும் தொழிலும் நீங்கள் மாற்றங்களைக் காண்பீர்கள். இந்த மாற்றங்கள் நீடித்து நிலைக்கும் எனலாம்.  இளம் வயது மிதுன ராசி அன்பர்கள் தங்கள் காதல் நிறைவேறக் காண்பார்கள். திருமணமான தம்பதிகள் தங்கள் உறவு சிறப்பாக இருக்கக்  காண்பார்கள். பணியிடத்தில் நீங்கள் வாக்கு வாதங்களில் ஈடுபடுவது வரவேற்கத் தக்கது அல்ல. நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், சக பணியாளர்கள் என தொழில் சார்ந்த அனைவரிடமும் நீங்கள் கவனமுடன் பழக வேண்டும். எதிர் வாதம் செய்யாமல் அவர்கள் கூறும் கருத்துக்களை புரிந்து கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் கருத்து வேறுபாடுகள் விலகும். உறவுகள் வலுக்கும். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

மிதுன ராசியைச் சேர்ந்த இளம் வயதினர் காதல் வயப்படக் கூடும். செவ்வாய் மற்றும் சுக்ரன் கிரக அமர்வு நிலை  உங்களை, காதல் உணர்வு மிக்கவராகவும், கவர்ச்சிகரமாகவும் தோற்றமளிக்க வைத்து, முன்னிலைப்படுத்தக் கூடும். எனவே, உங்களுள் சிலருக்கு இந்த மாதம் மனதில் காதல் அரும்பு மொட்டு விடும். உங்கள் மனதிற்கு பிடித்த துணை உங்களுடன் பணி புரிபவராகவே அல்லது உங்கள் சமூக வட்டாரத்தில் பழக்கம் உள்ளவராகவோ இருக்க வாய்ப்பு உண்டு. இந்த மாதம் நீங்கள் தன்னபிக்கையுடன் காதல் தொடர்பான முடிவுகளை எடுப்பீர்கள்.

மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: செவ்வாய் மற்றும் சுக்ர பகவான் பூஜை

நிதி:

இந்த மாதம் நீங்கள் சில பொருளாதார சிக்கல்களை சந்திப்பீர்கள் என்றாலும் அது நீடித்த பிரச்சினயாக இருக்காது. என்றாலும் நீங்கள் பணம் அல்லது நிதி சம்பந்தமான எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது அவரது பெற்றோர் மூலம் நீங்கள் சில பண ஆதாயங்களைப் பெறும் வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத திடீர் பணம் கிடைப்பதற்கான  வாய்ப்பும் உள்ளது. இந்த மாதத்தில் நீங்கள் பணம் ஈட்டும் வாய்ப்பு அதிகம் உள்ளது. 

நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: அன்னை மகாலக்ஷ்மி பூஜை   

வேலை:

வேலைக்குச் செல்லும் மிதுன ராசி அன்பர்கள் இந்த மாதம் பணியில் சில சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். புதிய பணி வாய்ப்புகள் உங்களை நாடி வரும். உங்கள் பேச்சாற்றல் மூலம் இந்த மாதம் நீங்கள் பணியில் பிரகாசிப்பீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.  பணியில் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். கர்மகாரகனாகிய சனி கிரகத்துடன் குரு கிரகம் இணைந்து காணப்படுவதால் பணியில் உங்கள் சிந்தனை செழுமையாக இருக்கும். அதன் மூலம் சிறப்பாக பணியாற்றி பதவி உயர்வு மற்றும் சிறந்த பொறுப்புகளை வகிப்பீர்கள். உங்கள் பணியில் சிறந்து விளங்க இந்த மாதம் துவக்கக் காலக்கட்டமாக இருக்கும்.

தொழில்:

நீங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து தொழில் வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்பு இந்த மாதம் உள்ளது. நீங்கள் தனியாக தொழில் செய்வதை விட கூட்டாகத் தொழில் செய்யும் வாய்ப்பு இந்த மாதம் அதிகம் உள்ளது. என்றாலும் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் எந்தவொரு முடிவையும் கூட்டாளியுடன் இனைந்து எடுக்காதீர்கள். இது உங்களுக்கு எதிர் காலத்தில் பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும். எனவே கூட்டாளியை தேர்ந்தெடுக்கும் முன் ஒன்றிற்கு இரு முறை யோசித்து அவரைப் பற்றி நன்கு அறிந்து பின்பு செயலில் இறங்குங்கள். இது உங்கள் இலக்கை நீங்கள் எளிதில் அடைய உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். 

தொழில் வல்லுநர்கள்:

இந்த மாதம் நீங்கள் பல பணிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் முன்னேற சிறந்த வாய்ப்பு அளிக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். என்றாலும் உங்களுக்கு பணிச் சுமை அதிகமாக இருக்கும். குறித்த நேரத்தில் உங்களால் பணிகளை முடிக்க இயலாமல் போகலாம். இதனால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கான வாய்ப்பும் உள்ளது. குறிப்பாக  புத்தக வெளியீட்டாளர்கள், கணக்கு, வழக்குத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையில் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு இது பொருந்தும். எனவே நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் அணுகுமுறையில் திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் நீங்கள் சிறப்பாக செயலாற்றி பிறரின் பாராட்டை பெறுவீர்கள். 

வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: புத பகவான் பூஜை             

ஆரோக்கியம்:

மிதுன ராசி அன்பர்களின் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உடல் நிலையில் எந்த வகையிலும் பெரிய அளவிலான பிரச்சினைகள் எழாது. என்றாலும் மன வருத்தங்கள் உங்களை சோர்வடையச் செய்யும். அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதிக பணிகள் காரணமாக உங்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படக்கூடும். மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். யோகா, தியானம் செய்வதும், சாத்விக உணவு உட்கொள்வதும், இந்த விஷயத்தில் உங்களுக்குத் துணை புரியும். முடிந்தால் மசாஜ், மன அழுத்தத்துக்கான சிகிச்சைகள் போன்றவற்றையும் நீங்கள் மேற்கொள்ளலாம். இவை மனதை இலகுவாக்கி, அமைதிப்படுத்த உதவும்.    

ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: ருத்ர பூஜை     

மாணவர்கள்:

மிதுன ராசி மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும். கடின உழைப்பும் கவனம் சிதறாமல் படிப்பதும் அவசியம்.வெளி நாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற தருணமல்ல. தாமதங்கள் ஏற்படும் என்பதால் சிறிது பொறுமை காக்க வேண்டும்.   இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ளும் கடும் முயற்சிகள் உங்கள் எதிர் கால நலனுக்கு வித்திடும். 

படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: சனி பகவான் பூஜை   

சுப தினங்கள்: 1, 2, 3, 4, 5 8, 9, 10, 11, 12, 15, 16, 19, 20 21, 22, 23, 24, 29, 30, 31
அசுப தினங்கள்: 6, 7, 13, 14, 16, 17, 18, 26, 27, 28

banner

Leave a Reply

Submit Comment