கடகம் டிசம்பர் மாத ராசி பலன் 2020 | December Matha Kadagam Rasi Palan 2020

கடகம் டிசம்பர் மாத பொதுப்பலன்கள்:
கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் முன்னேற்றப் பாதையில் வெற்றி நடை போடுவீர்கள். பணியிடத்தில் உயரதிகாரிகள் ஆதரவையும், சக பணியாளர்கள் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். இது உங்கள் வெற்றிக்கு காரணமாக இருக்கும். தனித்து சுதந்திரமாக செயல்படுவது சிறந்தது என்றாலும் நீங்கள் அதன் எல்லை அறிந்து செயல்பட வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளும் காலக் கட்டமாக இந்த மாதம் இருக்கும். எனவே கேட்க வேண்டிய தருணத்தில் பிறரின் ஆலோசனை மற்றும் அறிவுரை கேட்டு நடத்து கொள்வீர்கள். “கடமையச் செய்”, “பலனைக் கருதாதே” என்று கீதையில் கண்ணன் கூறியது போல நீங்கள் உங்கள் கடமைகளை மேற்கொள்ளுங்கள். மற்றவற்றை இறைவன் பார்த்துக் கொள்வான்” என்று செயலாற்றுங்கள். குறு பகவானும் சனி பகவானும் உங்களை வழிநடத்திச் செல்வார்கள்.இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
இந்த மாதம் நீங்கள் முன்றால் உங்கள் உறவுகளை நல்லிணக்க உறவாக மாற்றிக் கொள்ள இயலும். உங்கள் உறவை மேம்படுத்திக் கொள்ள உங்களில் சிலர் விரும்புவீர்கள். சமூகத்தில் உங்கள் மீதான அப்பிராயம் பற்றி நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். பிறர் உங்களைப் பற்றி நல்லதாக நினைக்க வேண்டும் என்று நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணமான தம்பதிகள் இடையே அன்யோன்யம் பெருகும். குரு, சனி இணைவு உறவில் நீங்கள் அக்கறை காட்டி நல்லுறவாக மாற்ற நீங்கள் முயற்சி எடுக்க உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: குரு பகவான் பூஜை
நிதி:
இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் ஏற்படும் சில செலவுகளை நீங்கள் தேவையற்ற செலவுகளாகக் கருதலாம். உண்மையிலேயே அவை தேவையற்ற செலவுகளாகத் தான் இருக்கும். எனவே நீங்கள் செலவுகளை கட்டுப்படுத்த முயலுங்கள். அதன் மூலம் உங்கள் நிதிநிலை ஒரு கட்டுக்குள் சீராக இருக்கும். மேலும் நிதிநிலையில் படிப்படிப்பான முன்னேற்றம் நீங்கள் காண முடியும். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு கடன் கொடுக்கும் சந்தர்ப்பம் அமைந்தால் நீங்கள் சிறிது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: லக்ஷ்மி-குபேர பூஜை
வேலை:
பணி செய்யும் கடக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதம் என்று கூற முடியாவிட்டாலும் பாதகமான பலன் தரும் மாதம் என்று கருத இயலாது. பணிநிமித்தமாக நீங்கள் அதிக பயணங்களை மேற்கொள்ள நேரும். மேலும் அதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றியும் கிட்டாது. அதன் காரணமாக நீங்கள் உடல் சோர்வு மற்றும் மனச் சோர்விற்கு ஆளாவீர்கள். எனவே தவிர்க்க முடியும் பயணங்களை தவிர்ப்பது உங்களுக்கு நலம் பயக்கும்.
தொழில்:
தொழில் சம்பந்தமான ஒப்பந்தங்களில் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். இந்த மாதம் கூட்டுத் தொழில் உங்களுக்கு அதிக நன்மைகள் அளிக்காது. குரு மற்றும் சனி இணைவு காரணமாக அதிர்ஷ்டம், கடன், எதிர்பாராத நிகழ்வுகள் என நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் காணப்படும். வெளிநாட்டுடன் தொடர்பு கொண்டு தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் அதில் அதிக கவனம் தேவை. ஆராயாமல் தொழிலில் இறங்கினால் சில சட்டப் பிரச்சினைகளைக் கூட சந்திக்க நேரலாம். எனவே கவனம் அவசியம்.
தொழில் வல்லுநர்கள்:
கடக ராசி தொழில் வல்லுனர்களுக்கு தொழிலில் அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்பிற்கு பலன் கை மேல் கிடைக்கும் மாதம் இந்த மாதம் ஆகும். நீங்கள் உங்கள் உழைபிற்கேற்ற அங்கீகாரம் பெறுவீர்கள். என்றாலும் ஒருசிலருக்கு கிடைக்கவில்லை என்றால் மனம் தளராதீர்கள். கூடிய விரைவில் உங்களுக்கும் அங்கீகாரமும் நல்ல பலன்களும் கைகூடி வரும். விடா முயற்சியைத் தாரக மந்திரமாகக் கொண்டு உங்கள் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் இலக்குகளை நீங்கள் எட்டிப் பிடிப்பீர்கள். தொழில் நிமித்தமாக நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களிலும் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.
வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் முதல் இரண்டு வாரங்கள் உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடைசி இரண்டு வாரங்களில் நீங்கள் கண் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆளாக நேரும். எனவே நீங்கள் சிறிது கவனமாக இருக்க வேண்டும். மேலும் மன அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தை பேணிக் காத்துக் கொள்ளுங்கள்.
ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: சூர்ய நாராயண பூஜை
மாணவர்கள்:
கடந்த மாதங்களை விட, இந்த மாதம், மாணவர்களுக்கு ஓரளவு எளிதான காலமாக இருக்கக்கூடும். நீங்கள் ஊக்கத்துடன் படித்து, உங்கள் கல்வி முயற்சிகளில் எழும் அனைத்துத் தடங்கல்களையும் நீக்கி, வெற்றிபெறும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, மருத்துவம், பொறியியல் மாணவர்களுக்கு இது நல்ல காலம் எனலாம். கலை, படைப்பு போன்ற துறைகளில் இருப்பவர்களும், இப்பொழுது, நன்மைகளை எதிர்பார்க்கலாம். போட்டித் தேர்வுகளையும் நீங்கள் நன்கு எழுதக்கூடும்.
படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: சுக்ர பகவான் பூஜை
சுப தினங்கள்: 1, 2, 3, 9, 10, 11, 12, 13, 14, 21, 22, 23, 26, 27, 28, 29, 30
அசுப தினங்கள்: 4, 5, 6, 8, 15, 16, 17, 18, 19, 20, 24, 25, 31
