ரிஷபம் டிசம்பர் மாத ராசி பலன் 2020 | December Matha Rishabam Rasi Palan 2020

ரிஷபம் டிசம்பர் மாத பொதுப்பலன்கள்:
ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு இருக்கும் பலம் மற்றும் பலவீனத்தை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளும் மாதமாக இருக்கும். இந்த மாத கிரக நிலைகளின் தாக்கத்தை நீங்கள் அதிக அளவில் உணர்வீர்கள். ஊழ்வினை வந்து உறுத்தும் என்பார்கள். நாம் செய்த கர்ம வினைகள் காரணமாகத் தான் நாம் இன்பமும் துன்பமும் அடைகிறோம். ஊழ்வினை வந்து உறுத்தினாலும் நீங்கள் சமாளித்து அதில் இருந்து வெளி வந்துவிடுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை இந்த விஷயத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். ‘இந்த மாதம், எது வந்த போதும் சரியாகி விடும்’ என்று கூட, உங்களில் சிலர் நினைக்கக் கூடும்! பொதுவாக, இந்த நேரத்தில், உங்களுக்குள் இருக்கும் பலம், திறமை போன்றவற்றை, உங்களில் பலரால் நன்கு உணர முடியும். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
ரிஷப ராசி இளம் வயதினர் மனதில் காதல் உணர்வுகள் தலை தூக்கும். திருமணமான தம்பதிகள் தங்கள் உறவை நன்கு பராமரிப்பார்கள். உறவை நல்லுறவாக மாற்றவும் நல்லிணக்கம் பெருகவும் நீங்கள் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையைக் கவரும் வகையில் நீங்கள் நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். தம்பதியர் இருவருக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு இருக்கும்.
மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை
நிதி:
இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் முதலீடுகள் மூலம் நீங்கள் லாபம் காண்பீர்கள் என்றாலும் பெரிய அளவிலான முதலீட்டு விஷயங்களில் நீங்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதம் சுக்கிரன் கிரக நிலை காரணமாக உங்கள் நிதிநிலையில் படிப்படியான முன்னேற்றம் காண்பீர்கள்.
நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: குபேர பூஜை
வேலை:
பணியில் இருக்கும் ரிஷப ராசி அன்பர்கள் வேலையின் மூலமும் பணியிடத்திலும் சாதகமான பலன்களைக் காண்பார்கள். சிறப்பாக செயலாற்றி உயர் அதிகாரிகளின் அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெறுவீர்கள். இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். அதனால் உங்கள் செயல் திறன் மேலும் கூடும். சனி குரு சேர்க்கை உங்களுக்கு மேலும் பல சிறந்த பலன்களை அளிக்கும்.
தொழில்:
தொழில் செய்யும் ரிஷப ராசி அன்பர்கள் இந்த மாதம் கூட்டாக தொழில் செய்ய நினைத்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அதன் மூலம் லாபம் பெருகும். நீங்கள் தொழில் நிமித்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். மற்றவர்களுடனான தொடர்பு மூலம் வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். புதிய கூட்டுத் தொழில் மூலமாகவும் நீங்கள் இந்த மாதம் ஆதாயம் பெறுவீர்கள்.
தொழில் வல்லுநர்கள்:
ரிஷப ராசி தொழில் வல்லுநர்கள், குறிப்பாக, படைப்புத் துறையில் உள்ளவர்கள், தங்கள் பணியில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் தொழிலுக்கு அனைவரின் ஆதரவும் கிடைக்கும். பிறரின் ஒத்துழைப்பையும் நீங்கள் பெறுவீர்கள். உங்கள் தொழிலில் நீங்கள் சில எதிர்பாராத நன்மைகளைப் பெறுவீர்கள்.
வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: சுக்ர பகவான் பூஜை
ஆரோக்கியம்:
தேக ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் பிறப்பு உறுப்புகளில் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே, உடல் இன்பம் குறித்த செயல்களில் அதிகம் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உங்கள் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் வகையில் கவனித்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்திற்கு இடம் அளிக்காதீர்கள். உடல் நலனுக்கு ஏற்ற உணவுகள் உட்கொள்வதும், யோகா, உடற்பயிற்சி செய்வதும், நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: தன்வந்த்ரி பூஜை
மாணவர்கள்:
மாணவர்களுக்கு இது, சவாலான காலகட்டமாக இருக்கக்கூடும். நீங்கள் வெற்றி பெறுவதற்கு எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். சாதாரண பலன்களைப் பெறுவதற்குக் கூட, நீங்கள் இரண்டு மடங்கு முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கலாம். மாதத்தின் முதல் பகுதியில் புதனின் விருச்சிக ராசி சஞ்சாரம் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமாக அமையக்கூடும். ஆனால், மாதத்தின் பிற்பாதியில் புதன், தனுசு ராசியில் இருப்பது, ஓரளவு சவாலாக அமையக் கூடும். எனினும், உயர் கல்விக்கு உரிய கிரகமான சனி, குருவுடன் இணைந்திருக்கிறார். எனவே, குழப்பங்கள் பல இருந்தாலும் உங்களுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும்.
படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: குரு பகவான் பூஜை
சுப தினங்கள்: 1, 2, 3, 8, 9, 10, 11, 12, 13, 14, 21, 22, 23, 26, 27, 28, 29, 30
அசுப தினங்கள்: 4, 5, 6, 15, 16, 17, 18, 19, 20, 24, 25, 31
