AstroVed Menu
AstroVed
search
search
x

கும்பம் டிசம்பர் மாத ராசி பலன் 2022 | December Matha Kumbam Rasi Palan 2022

dateNovember 9, 2022

கும்பம் டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2022

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிட்டும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவி கருத்து ஒருமித்து வாழ்க்கை நடத்துவார்கள். நண்பர்கள் உடனான நல்லுறவு நீடிக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வெளியூர்களுக்கு சுற்றுலா செல்ல சாதகமான மாதமாக இருக்கிறது. இந்த மாதம் நீங்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்வீர்கள். இந்த மாதம் அனுகூலமான நிதிநிலை இருக்கக் காண்பீர்கள். உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். நீங்கள் தொழிலில் முன்னேறுவதற்கான வாய்ப்பும் இந்த மாதம் கிடைக்கப் பெறுவீர்கள்.  உங்களுக்கு சிறு சிறு உடல் உபாதைகள் வந்து போகும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கவனமுடன் படிக்க வேண்டும். முயற்சிக்கேற்ற பலன்கள் கிட்டும்.  

கும்பம் டிசம்பர் மாத ராசி பலன் 2022 | December Matha Kumbam Rasi Palan 2022

காதல் / குடும்பம்:

இந்த மாதம் காதலர்களுக்கு ஏற்ற மாதம். காதல் உறவில் இனிமை இருக்கும். ஒரு சில கும்ப ராசி இளம் வயதினர் மனதில் புதிய காதல் அரும்பு மலரும், தம்பதிகளுக்கு இடையே சுமுகமான நல்லிணக்க உறவு மேம்படும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒற்றுமை நிலவும். அன்னியோன்யம் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் நல்லிணக்கம் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும்.

குடும்ப உறுப்பினர்களிடம் நல்லுறவு நீடிக்க பால திரிபுர சுந்தரி பூஜை

நிதி நிலை: 

இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் ஏற்றம் காணப்படும். உங்கள் வருமானம் பெருகும். நீங்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியும் முன்னேற்றமும் காண்பீர்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் உங்கள் கையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். உங்கள் கடந்த கால பரஸ்பர நிதி சம்மந்தப்பட்ட முதலீடுகளின் மூலம் வருமானம் கிட்டும். தொழில் மூலம் தன லாபங்கள் அதிகரிக்கும்.

தன நிலையில் ஏற்றம் ஏற்பட லக்ஷ்மி பூஜை

வேலை:

உத்தியோகத்தைப் பொறுத்தவரை அனுகூலமான நிலை உள்ளது. இந்த மாதம் நீங்கள் உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பதில் தடைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.  இந்த மாதம் உங்கள் பணியிடச் சூழல் சிறப்பாக காணப்படும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு குறித்த நேரத்தில் பணிகளை முடித்து அதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள். 

தொழில்:

இந்த மாதம் ஒரு சிலருக்கு தொழிலில் போட்டிகள் அதிகம் இருக்கும். என்றாலும் நீங்கள் திறமையை பயன்படுத்தி அதனை எதிர் கொண்டு சமாளிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள் தங்கள் தொழிலில் சிறந்த வெற்றியை காண்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களும் இந்த மாதம் தொழிலில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். 

தொழில் வல்லுனர்கள்:

கும்ப ராசி தொழில் வல்லுனர்கள் ஒரு சிலருக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிட்டும். அதனை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த வெற்றியைக் காணலாம். முன்னேற்றத்தையும் காணலாம். நீங்கள் சிறப்பாக செயலாற்றி வாடிக்கையாளர்களின் அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  நீங்கள் மற்றவர்களின்  கருத்து மற்றும் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்வதன் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். வெளிநாட்டில் தொழிலை நடத்த எண்ணம் கொண்டவர்கள் தங்கள் எண்ணங்கள் கை கூடக் காண்பார்கள். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் வெற்றிபெற லக்ஷ்மி பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சீராக  இருக்கும் என்றாலும் இந்த மாதம் உங்களுக்கு சிறிய அளவிலான உபாதைகள் வந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. வயதில் மூத்தவர்கள் உடல் நலனை காத்துக் கொள்ள அவ்வப்பொழுது மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. முறையான உடற்பயிற்சியும் சத்தான உணவும் உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும். 

நல்ல உடல் ஆரோக்கியம் பெற சனி பூஜை

மாணவர்கள்:

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதனைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வி படிக்கும் கும்ப ராசி  மாணவர்கள் அதிக முயற்சியுடனும் கவனமுடனும் படிக்க வேண்டும். தங்களது ஞாபகத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் சிறிது கவனச்சிதறல்கள் ஏற்படலாம். படிப்பில் கவனம் செலுத்தி படித்தால் வெற்றி நிச்சயம். வெளி நாட்டில் தகவல் தொழில்  நுட்பத் துறையில் படிக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை பெறுவார்கள்.

மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை

சுப நாட்கள்:

3, 4, 5, 6, 8, 9, 10, 11, 13, 14, 15, 18, 19, 20, 21.

அசுப நாட்கள்:

1, 2, 7, 12, 16, 17, 22, 23, 26, 30, 31.

Tags Tags:

    Leave a Reply