AstroVed Menu
AstroVed
search
search

துலாம் டிசம்பர் மாத ராசி பலன் 2022 | December Matha Thulam Rasi Palan 2022

dateNovember 9, 2022

துலாம் டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2022

துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் ஒற்றுமை குறைவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். அதிலும் குறிப்பாக மூத்த உடன் பிறப்புகளுடன் பணம் சம்பந்தப்பட்ட விஷயமாக கருத்து வேறுபாடு எழலாம். மேலும் திருமணமான தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படலாம் என்பதால் உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை.. இந்த மாதம் நீங்கள் பணப்பற்றாக்குறையை சந்திப்பீர்கள். செலவுகளும் கட்டுக்குள் இருக்காது. உத்தியோகத்தில் உயர்வு கிட்டும். தொழில் ஓரளவு சிறப்பாக நடக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் சில சவால்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் சிறப்பாகக் கலவி பயில்வார்கள்.

காதல் / குடும்பம்:

காதலர்களுக்கு இது ஏற்ற மாதம் அல்ல. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக வாக்குவாதம் ஏற்படும். நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாகச் செயல்பட வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் உங்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகளுக்கு இடையேயான உறவுநிலை சுமாராக இருக்கும்.

குடும்ப உறவு சிறக்க சந்திரன் பூஜை

நிதி நிலை:

உங்கள் நிதிநிலை சீராக இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் பணப்பற்றாக்குறையை சந்திக்க நேரலாம். ஒரு சில சுய  தொழில் செய்யும் துலாம் ராசி அன்பர்கள் தங்கள் தொழில் மூலம் லாபம் கண்டு  பணப்புழக்கம் சற்று அதிகரிக்கக் காண்பார்கள். பரஸ்பர சகாய நிதி மற்றும் யூக வணிகமான பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபத்தை  எதிர்பார்க்கலாம். இந்த மாதம் நீண்டதூர பயணம் செய்வதன் மூலம் தங்களுக்கு செலவு சற்று அதிகரித்து காணப்படும். பணத்தை சிக்கனமாக கையாள்வது நல்லது.

நிதிநிலையில் உயர்வு பெற ராகு பூஜை

வேலை:

உத்தியோகத்தைப் பொறுத்தவரை அனுகூலமான மாதமாக இந்த மாதம் இருக்கும்.நீங்கள் அரசுத் துறையில் பணியில் இருப்பவர் எனில் உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற சில முன்னேற்றங்களைக் காண்பீர்கள். வெளிநாட்டில் தகவல்தொடர்பு துறை சம்மந்தப்பட்ட உத்தியோகம் தேடுபவர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 

தொழில்:

தொழிலைப் பொறுத்தவரை இந்த மாதம் தொழிலில் சிறிது மந்த நிலை காணப்படும். என்றாலும்  தொழில் மூலம் ஓரளவு லாபம் கிட்டும்.   இந்த மாதம் ஆடை சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் அதிக வாடிக்கையாளர்களை பெறுவார்கள். மற்றும் அதிக லாபத்தை பெறுவார்கள். தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணம் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் அதிக பண வரவைக் காண்பார்கள். 

தொழில் வல்லுனர்கள்:

வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில் செய்யும் துலாம் ராசி தொழில் வல்லுனர்களுக்கு தொழில் மூலம் அதிக பண வரவு மற்றும் அதிக லாபம் கிடைக்கும். சுயமாக தொழில் செய்யும் தொழில் வல்லுனர்களின் பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கும். அரசு துறையில் பணியில் உள்ள தொழில் வல்லுனர்கள் கடினமாக உழைப்பதன் மூலம் பணியிடத்தில் பெயரும் புகழும் பெறுவார்கள்.  

உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்வு கிடைக்க சனி பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் மத்திம வயதில் உள்ள துலாம் ராசி அன்பர்களின் தேக ஆரோக்கியம் சவால் மிகுந்தாக இருக்கும். நரம்பு சம்மந்தப்பட்ட சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு  உடல் அசதியை கொடுக்கும். சிறு  அளவிலான பாதிப்பு என்றாலும் பாதிப்பை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நன்மை பயக்கும். ஆரோக்கிய உணவு மற்றும் பச்சை காய் கனிகளை அதிகம் எடுத்துக்கொள்வது சிறப்பு. 

ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை

மாணவர்கள்:

பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுவார்கள். வெளிநாடு சென்று உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு கிட்டும்.. பொறியியல் கல்வி பயிலும் மாணவர்கள் தைரியமாகச் செயல்பட்டுகடினமாக உழைத்து படித்து வெற்றி பெறுவார்கள். 

கல்வியில் வெற்றி கிடைக்க கணபதி பூஜை

சுப நாட்கள்:

அசுப நாட்கள்:


banner

Leave a Reply