AstroVed Menu
AstroVed
search
search

தனுச டிசம்பர் மாத ராசி பலன் 2022 | December Matha Dhanusu Rasi Palan 2022

dateNovember 9, 2022

தனுச  டிசம்பர்  மாத பொதுப்பலன்கள் 2022

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் அன்பும் பற்றும் நீடித்து இருக்கும். கணவன் மனைவி உறவில் அன்னியோன்யம் கூடும். வீட்டில் உள்ள முதியவர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். காதலர்களுக்கு இது ஏற்ற மாதம் அல்ல, காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனக் கசப்பு ஏற்பட வாய்புள்ளது. உங்கள் உத்தியோகத்தில் ஏற்றம் நிறைந்து காணப்படும். பணி செய்யும் இடத்தில் உங்களுக்கு சிறிது பதட்டம் காணப்படும். நீங்கள் மனபதட்டத்தை சமாளித்து தைரியமாகச் செயல்படுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் இருக்கும். மாணவர்கள் கவனச் சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காதல் / குடும்பம்:

இந்த மாதம் காதல் உறவில் உள்ளவர்களுக்கு தங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது எனவே காதல் துணையிடத்தில் வாக்கு வாதங்களில் ஈடுபடாமலிருப்பது நன்மை பயக்கும். இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்படலாம். திருமணமான தம்பதிகளுக்கு இடையே அன்யோன்யம் கூடும். குழந்தைகளுடன் நல்லுறவு நீடிக்கும்.  குழந்தைகள் உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

குடும்ப உறவு சிறக்க சந்திரன் பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை வசதியாக இருக்கும். உங்கள் வருமானம் கணிசமாக உயரும். நீங்கள் கணிசமாக பணத்தை சேமிக்கவும் செய்வீர்கள்.  கையில் தாராளமான பணப் புழக்கம் இருக்கும். ஒரு சிலர் ஊக வணிகம் மூலம் திடீர் பண வருவாயைப் பெறலாம். இந்த மாதம் நிலுவையில் நிற்கும் கடன்களை அடைத்து முடிப்பீர்கள். குழந்தைகளின் படிப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பை அதிகரித்துக் கொள்வீர்கள்.

நிதி நிலையில் ஏற்றம் உண்டாக கோ பூஜை

வேலை:

உத்தியோகத்தைப் பொறுத்தவரை  நீங்கள் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள் என்றாலும் நீங்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தரும். அலுவலகத்தில்  மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுடன் நல்லுறவு நீடித்து காணப்படும். அரசு உத்தியோகத்தில் பணியில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தொழில்:

தொழில் செய்யும் தனுசு ராசி அன்பர்கள் ஓரு சிலர் அந்நிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். இதனால் நீங்கள் அதிக லாபங்கள் பெறுவதுடன் உங்கள் தொழிலை விரிவாக்கமும் செய்வீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டு ஒப்பந்தம் சார்ந்த ஆவணங்களில் கையொப்பமிடுமுன் நன்றாக படித்து பார்த்து கையொப்பமிடுவது அவசியம்.  

தொழில் வல்லுனர்கள்:

வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருக்கும் தொழில் வல்லுனர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுயமாக தொழில் செய்யும் தொழில் வல்லுனர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பொருள் வர்த்தகம் சார்ந்த தொழில் வல்லுனர்களுக்கு புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் ஏற்படும்.

உத்தியோகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு கணபதி பூஜை

ஆரோக்கியம்:

அதிக பயணம் மற்றும் அலைச்சல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிப்படையலாம். உடல் வலி மற்றும் கழுத்து வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தியானம் மற்றும் நடைபயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவது மனம் மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை தேவை.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு சந்திரன் பூஜை

மாணவர்கள்:

இந்த மாதம் தனுசு ராசி மாணவர்கள் தங்கள் கவனம் சிதறாமல் மனதை ஒருமுகப் படுத்தி படிக்க முயல வேண்டும். படிப்பில் அதிக கவனம் செலுத்தி படித்தால் தான் படிப்பில் வெற்றிபெற முடியும். பொறியியல் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறந்த வெற்றியைக் காண்பார்கள். ஆராய்ச்சி கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் வெளிநாட்டில் கல்வி கற்கும் வாய்ப்புகள் உருவாகும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை

சுப நாட்கள்:

13, 14, 15, 18, 19, 20, 21, 25.

அசுப நாட்கள்:

9, 10, 11, 12, 16, 17.


banner

Leave a Reply